1 கனடா சதுக்கம்
1 கனடா சதுக்கம் (1 Canada Square) என்பது இலண்டன் மாநகரில் உள்ள கேனரி வார்ஃப் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு உயரமான கட்டிடமாகும். 1990 முதல் 2010 வரை ஐக்கிய இராச்சியத்தில் இதுவே மிகவுயர்ந்த கட்டிடமாக மதிக்கப்பட்டது. 50 மாடிகள் கொண்ட இக்கட்டிடம் தரை மட்டத்தில்[1] இருந்து 720 அடி உயரம் (235 மீட்டர்) அளவுக்கு வானில் உயர்ந்து நின்றது. 2012 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்ட சார்டு கட்டிடம் 1 கனடா சதுக்கத்தின் இருபது ஆண்டுகால சாதனையை முறியடித்து முதல் இடத்தைப் பிடித்தது. இக்கட்டிடத்தின் உயரம் 1016 அடிகள் ( 309.6 மீட்டர்) ஆகும்.ஹட்டேர்ஸ்பீல்ட் (Huddersfield) என்னுமிடத்திலுள்ள, 330 மீட்டர் உயரமான எம்லே மூர் தொலைக்காட்சிக் கம்பமே நாட்டின் அதி உயரமான "அமைப்பு" ஆகும்.
பெயர்க்காரணம்
தொகுரீச்மன் குடும்பத்துக்குச் சொந்தமான, ஒலிம்பியாவும், யோர்க்கும் என்ற கனடாவைச் சேர்ந்த நிறுவனத்தினால் கட்டப்பட்டமையாலேயே, இக்கட்டிடத்துக்குக் கனடா சதுக்கம் என்ற பெயர் வந்தது. "கனரி வார்வ்" (Canary Wharf ) பகுதியைக் கட்டும் முயற்சியில் இந் நிறுவனம் வங்குரோத்து நிலையடைந்தது.இக்கட்டிடம் "கனரி வார்வ்"இன் (Canary wharf) ஒரு பகுதியாக இருப்பதால், இது கனரி வார்வ் கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
உட்கட்டமைப்பு
தொகுசீசர் பெல்லி என்ற முதன்மை கட்டிடக்கலை வல்லுநர் 1 கனடா சதுக்கத்தை வடிவமைத்தார். முக்கியமாக உலக நிதிநிறுவனம் மற்றும் எலிசபெத் கோபுரம் ஆகிய கட்டிடங்களை அடிப்படையாக நினைத்தே இவர் இச்சதுக்கத்தை வடிவமைத்தார். துருப்பிடிக்காத எஃகு இந்த அழகிய கட்டிடத்தின் மேற்புறத்தை அலங்கரிக்கிறது. இச்சதுக்கத்தின் உச்சியில் உள்ள ஒளிரும் பிரமீடு விமானங்களுக்கான எச்சரிக்கை விளக்காக இருருப்பதுதான் இச்சதுக்கத்தின் மிகமுக்கியமான தனிச்சிறப்பு ஆகும். தனித்துவமாகத் தெரியும் இந்த பிரமீடு உச்சிமுடி கடல்மட்டத்தில் இருந்து 800 அடி (240 மீட்டர்) உயரத்தில் உள்ளது[2].
அலுவலகம்
தொகுகீழ் தரைத் தளத்தில் சில சில்லறை வணிகக் கடைகள் இடம்பெற்றிருந்த போதிலும் இச்சதுக்கத்தில் முதன்மையாக அலுவலகங்கள் இடம்பெற்றன. 1 கனடா சதுக்கத்தில் அலுவலகங்கள் அமைந்திருப்பது பெரிய ஒரு கௌரவமாகக் கருதப்பட்டது. சனவரி 2013 நிலவரப்படி மதிப்புமிக்க இச்சதுக்கத்தின் அனைத்து பகுதிகளும் அலுவலகங்களாய் நிரம்பியிருந்தன[3] இச்சதுக்கம் இலண்டனின் மைல்கல் என அங்கீகரிக்கப்பட்டது. இதனால் திரைப்படங்கள்,தொலைக்காட்சி மற்றும் இதர ஊடகங்களில் இதன் புகழ்பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஐக்கிய இராச்சியத்தில் உள்ள உயரமான கட்டிடங்கள் என்று பட்டியலிடப்பட்டதனால் இச்சதுக்கம் மேலும் பலருடைய கவனத்தை ஈர்ப்பது தொடர்கிறது .
தாக்குதல்
தொகு1996 ல், இங்கு, ஐரிஷ் குடியரசு இராணுவம் (IRA) என்ற தீவிரவாத இயக்கம் குண்டுத் தாக்குதல் நடத்தியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Aviation charts issued by the Civil Aviation Authority
- ↑ http://www.canarywharf.com/factfile/1can_pagr2.asp பரணிடப்பட்டது 2009-06-20 at the வந்தவழி இயந்திரம் Accessed 25 May 2008 14:55 BST.
- ↑ "Canary Wharf Letting Agents | Flats To Let E14 | Knight Frank E14". Knightfrank.co.uk. பார்க்கப்பட்ட நாள் 15 August 2012.
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Skyscrapernewsல் 1 கனடா சதுக்கம் பற்றிய கோப்பு பரணிடப்பட்டது 2008-12-19 at the வந்தவழி இயந்திரம்