2பொருண்மை ஜே18352154–3123385

2பொருண்மை ஜே 18352154−312338 (MASS J18352154−3123385) பெரும்பாலும் 2பொருண்மை ஜே1835 என்றே சுருக்கப்பட்டது, இது புவியிலிருந்து 27 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு இரும செங்குறுமீன் அமைப்பாகும். 2010 இல் ஜே.டி. கிர்க்பாட்ரிக் குழுவினர் இதன் உயர் சரியான இயக்கம் அளவை வழி இது முதலில் தெரிவிக்கப்பட்டது. [3] பின்னர் அது 2015, ஜூன் 10 அன்று அதன் எக்சுக்கதிர் கதிர்வீச்சிலிருந்து தற்சார்பாகக் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆய்வில், M6.5, M8 ஆகிய கதிர்நிரல் வகை இயல்புகளைக் கொண்ட இது இரும விண்மீனாக இருப்பதைக் காட்டுகிறது. இவை 1,400-1,800 ஆண்டுகளில் ஒன்றையொன்று சுற்றி வருகின்றன. மேலும் 1968 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிலையான சரியான இயக்கத்தை எடுத்துக் கொண்டு அவற்றின் நெருங்கிய புள்ளியை அடைந்தன. அவற்றின் நெருங்கிய அணுகுமுறையின் போது, அவை 2 வில்நொடிகளின் தற்போதைய பிரிப்புடன் ஒப்பிடும்போது, 0.1 வில்நொடிக்கும் குறைவாகவே பிரிக்கப்பட்டுள்ளன.

2MASS J18352154–3123385 வார்ப்புரு:Starbox observe 2s
இயல்புகள்
விண்மீன் வகைM6.5V
தோற்றப் பருமன் (J)8.652
தோற்றப் பருமன் (H)8.097
தோற்றப் பருமன் (K)7.803
இயல்புகள்
விண்மீன் வகைM8V
தோற்றப் பருமன் (J)9.438
தோற்றப் பருமன் (H)8.815
தோற்றப் பருமன் (K)8.533
வான்பொருளியக்க அளவியல்
2MASS J18352154−3123385
Proper motion (μ) RA: 21±4 மிஆசெ/ஆண்டு
Dec.: −382±4 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)58.16 ± 0.04 மிஆசெ
தூரம்56.08 ± 0.04 ஒஆ
(17.19 ± 0.01 பார்செக்)
2MASS J18352205−3123421
Proper motion (μ) RA: 28.53±0.04 மிஆசெ/ஆண்டு
Dec.: -380.00±0.04 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)58.0782 ± 0.0480[1] மிஆசெ
தூரம்56.16 ± 0.04 ஒஆ
(17.22 ± 0.01 பார்செக்)
சுற்றுப்பாதை
Primary2MASS J18352154-3123385
Companion2MASS J18352205−3123421
Period (P)~1400–1800? yr
Semi-major axis (a)5070 AU
Inclination (i)~55°
Longitude of the node (Ω)~5°
சுற்றுப்பாதை வீச்சு epoch (T)~1968[1]
விவரங்கள் [2]
2MASS J18352154-3123385
திணிவு0.29 M
ஆரம்0.3 R
ஒளிர்வு0.0012 L
வெப்பநிலை3376 கெ
2MASS J18352205−3123421
வேறு பெயர்கள்
1RXS J183520.9−312327, PM J18353-3123W, LP 923-18
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

A, B ஆகியவை முறையே 12.5 மற்றும் 13 பருமைகள் இருந்தபோதிலும், விண்மீன் மையத்திலிருந்து 15 பாகைக்கும் குறைவான தொலைவில் ஒப்பீட்டளவில் அடர்த்தியான விண்மீன் புலத்திற்கு முன்னால் இருப்பதால், புவிக்கான அவற்றின் அருகாமை 2015னஆம் ஆண்டுவரை கவனிக்கப்படவில்லை. 

2பொருண்மை ஜே1835A ஒரு சுடருமிழ்வு விண்மீனாக இருக்கலாம். பல ஒத்த குறைந்த பொருண்மை விண்மீன்கள் சுடருமிழ்வதாக அறியப்படுகின்றன. எவ்வாறாயினும், 2015 ஆம் ஆண்டில் இது நேரடியாக சுடருமிழ்வதைக் காண முடியவில்லை.

−31மணி° 23 பாகை′ 27.7பாகைத்துளி″ பிரிப்பில் 19 ஆவது பருமை கொண்ட விண்மீன் 2பொருண்மை ஜே1835 ஐப் போன்ற சரியான இயக்கத்துடன், அருகாமையில் காணப்பட்டது, ஆனால் அதன் சரியான இயக்கம் 2பொருண்மை ஜே1835 அளவுக்கு அதிகமாக இல்லாததால் இது தொடர்பு கொண்டிருக்காது. அதன் மங்கலான இதன் கதிர்நிரல் வகையைத் தீர்மானிக்க போதுமான தரவும் கிடைக்கவில்லை.

மேலும் காண்க

தொகு
  • 25-30 ஒளியாண்டுகளுக்குள் உள்ள விண்மீன் அமைப்புகளின் பட்டியல்

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G.  (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
  2. Trumpeting M dwarfs with CONCH-SHELL: a catalogue of nearby cool host-stars for habitable exoplanets and life supplementary data
  3. Kirkpatrick, J. Davy (2010). "Discoveries from a Near-Infrared Proper Motion Survey using Multi-Epoch Two Micron All-Sky Survey Data". The Astrophysical Journal Supplement Series (Institution of Physics) 190 (1): 100–146. doi:10.1088/0067-0049/190/1/100. Bibcode: 2010ApJS..190..100K. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2பொருண்மை_ஜே18352154–3123385&oldid=3835915" இலிருந்து மீள்விக்கப்பட்டது