2,4,6-மும்மெத்திலனிலின்

2,4,6-மும்மெத்திலனிலின் ( 2,4,6-Trimethylaniline) C9H13N என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக் அமீனான இச்சேர்மம் சாயங்கள் தயாரிப்பிற்கு ஒரு முன்னோடியாக இருப்பதால் வர்த்தக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மெசிட்டைலின் சேர்மத்தை தெரிவுசெய்த ஒற்றை நைட்ரோ ஏற்றம் செய்து 2,4,6-மும்மெத்திலனிலின் தயாரிக்கப்படுகிறது. மெத்தில் தொகுதிகளை ஆக்சிசனேற்றம் அடையவிடாமல் தவிர்த்து, வினையில் விளையும் நைட்ரோ சேர்மத்தை ஒடுக்கம் செய்தால் இந்த அனிலினைப் பெறலாம்[1]

2,4,6-மும்மெத்திலனிலின்
Skeletal formula
Skeletal formula
Ball-and-stick model
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,4,6-டிரைமெத்திலனிலின்
வேறு பெயர்கள்
அமினோமெசிட்டைலின்; 2,4,6-மும்மெத்தில்பென்சீனமீன்; மெசிட்டைலமீன்; மெசிடின்
இனங்காட்டிகள்
88-05-1 Y
ChemSpider 6647 Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C19540 Y
பப்கெம் 6913
SMILES
  • CC1=CC(=C(C(=C1)C)N)C
பண்புகள்
C9H13N
வாய்ப்பாட்டு எடை 135.21 கி/மோல்
அடர்த்தி 0.963 கி/மி.லி
கொதிநிலை 233 °C (451 °F; 506 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

அணைவுச்சேர்ம வேதியியல் தொகு

பல்வேறு வகையான பருமனான ஈதல் தொகுதிகளுக்கு கட்டுறுப்பாக 2,4,6-மும்மெத்திலனிலின் பயன்படுகிறது. கிளையாக்சாலுடன் 2,4,6-மும்மெத்திலனிலின் சேர்த்து ஆவிசுருக்க வினைக்கு உட்படுத்தினால் 1,2-ஈரிமின் ஈதல் தொகுதிகள் உருவாகின்றன. கிளையாக்சால் மற்றும் 2,4,6-மும்மெத்திலனிலின் சேர்மங்களின் ஆவிசுருக்க வினையில் மஞ்சள் நிரத்திண்மமாகத் தோன்றும் கிளையாக்சால்-பிசு(மெசிட்டைலிமின்) சேர்மத்தை ஒரு உதாரணமாகக் கூறலாம். கரிம ஈதல் தொகுதிகள் உள்ளிட்ட பரவலாக அறியப்பட்ட பல்லினவளைய கார்பீன் ஈதல் தொகுதிகளுக்கு முன்னோடியாக இந்த ஈரிமின்கள் பயன்படுகின்றன[2]. இரண்டாம் தலைமுறை கிரப்சு வினையூக்கிகளில் காணப்படும் என் – பல்லினவளைய கார்பீன்கள் இச்சேர்மத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன[3]

 
பதிலீடு செய்யப்பட்ட ஒரு 1,2-ஈரிமின் ஈதல் தொகுதி மற்றும் நல்லியல் உலோக கலப்புத் தொகுதி

1,3-இருகீட்டோனுடன் சேர்த்து ஆவிசுருக்க வினைக்கு உட்படுத்தினால் எதிரயனி இருகவர் வகையிலான ஈதல் தொகுதி கிடைக்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Gerald Booth "Nitro Compounds, Aromatic" in "Ullmann's Encyclopedia of Industrial Chemistry" 2007; Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a17_411
  2. Elon A. Ison, Ana Ison "Synthesis of Well-Defined Copper N-Heterocyclic Carbene Complexes and Their Use as Catalysts for a “Click Reaction”: A Multistep Experiment That Emphasizes the Role of Catalysis in Green Chemistry" J. Chem. Educ., 2012, volume 89, pp 1575–1577. எஆசு:10.1021/ed300243s
  3. Scholl, M.; Ding, S.; Lee, C. W.; Grubbs, R. H. (1999). "Synthesis and Activity of a New Generation of Ruthenium-Based Olefin Metathesis Catalysts Coordinated with 1,3-Dimesityl-4,5-dihydroimidazol-2-ylidene Ligands". Organic Letters 1 (6): 953–956. doi:10.1021/ol990909q. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2,4,6-மும்மெத்திலனிலின்&oldid=2183011" இலிருந்து மீள்விக்கப்பட்டது