2,4-இருபுரோமோபீனால்

வேதிச் சேர்மம்

2,4-இருபுரோமோபீனால் (2,4-Dibromophenol) என்பது C6H4Br2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். புரோமினேற்றம் செய்யப்பட்ட பீனால் வழிப்பெறுதி என இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. புரோமோபென்சீன்களுடன் தொடர்புடைய இச்சேர்மம் பென்சீன் வளையத்துடன் இணைக்கப்பட்ட புரோமின் அணுக்களைக் கொண்ட ஒரு கரிமச் சேர்மமாக கருதப்படுகிறது.

2,4-இருபுரோமோபீனால்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,4-இருபுரோமோபீனால்
இனங்காட்டிகள்
615-58-7
ChEBI CHEBI:34238
ChEMBL ChEMBL186858
ChemSpider 11510
EC number 210-446-5
InChI
  • InChI=1S/C6H4Br2O/c7-4-1-2-6(9)5(8)3-4/h1-3,9H
    Key: FAXWFCTVSHEODL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12005
  • c1cc(c(cc1Br)Br)O
UNII IA75T5C9TG
பண்புகள்
C6H4Br2O
வாய்ப்பாட்டு எடை 251.91 g·mol−1
உருகுநிலை 38 °C (100 °F; 311 K)
கொதிநிலை 238.5 °C (461.3 °F; 511.6 K)
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H300, H315, H319, H335, H412
P261, P264, P270, P271, P273, P280, P301+310, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P330, P332+313
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பண்புகள்

தொகு

அறை வெப்பநிலையில், 2,4--இருபுரோமோபீனால் ஊசி போன்ற படிகங்களைக் கொண்ட திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. 38 °செல்சியசு வெப்பநிலையில் (100.4 °பாரன்கீட்டு) உருகத்தொடங்கும் இச்சேர்மம் 238.5 °செல்சியசு வெப்பநிலையில் (461.3 °பாரன்கீட்டு) கொதிக்கிறது. மூலக்கூறு எடை 251.905 கிராம்/மோல் ஆகும். நீர், எத்தனால், ஈதர் மற்றும் பென்சீன் ஆகிய கரைப்பான்களில் கரையும். கார்பன் டெட்ராகுளோரைடில் சிறிது கரையும்.[1]

தோற்றம்

தொகு

2,4-இருபுரோமோபீனால் சில வகை மெல்லுடலிகளிலும் ஓட்டுமீன்களிலும் காணப்படுகிறது. அத்துடன் ஏகோர்ன் புழுவான சாக்கோகுளோசபுரோமோபீனாலோசசு என்ற புழுவிலும் காணப்படுகிறது. புரோமோபீனால் காணப்பட்டதாலேயே புழுவிற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. பப்கெம் 12005
  2. Konikoff, Charlotte (2017). "Saccoglossus bromophenolosus King, Giray & Kornfield, 1994". WoRMS. World Register of Marine Species. பார்க்கப்பட்ட நாள் 31 August 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2,4-இருபுரோமோபீனால்&oldid=4015500" இலிருந்து மீள்விக்கப்பட்டது