2-அசிட்டைல்பிரிடின்
வேதிச் சேர்மம்
2-அசிட்டைல்பிரிடின் (2-Acetylpyridine) CH3COC5H4N என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது ஒரு பிசுபிசுப்பான நிறமற்ற திரவமாகும். 2-அசிட்டைல்பிரிடின் ஒரு சுவையூட்டும் பொருளாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மால்ட்டு எனப்படும் முளைவிட்ட தானியத்தில் இது காணப்படுகிறது. மெயிலார்டு வினையின் மூலமாக 2-அசிட்டைல்பிரிடின் தயாரிக்கப்படுகிறது. ஓர் அமீனுடன் குறைக்கும் சர்க்கரையை வினைபுரியச் செய்யும் செயலுடன் மெயிலார்டு வினை தொடங்குகிறது. இவ்வினையில் கிளைகோசைலமைன் உருவாகிறது.[3] சோள சுண்டல், பாப்கார்ன் மற்றும் பீர் ஆகியவற்றின் சுவைக்கு 2-அசிட்டைல்பிரிடின் பங்களிக்கிறது
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-(Pyridin-2-yl)ethan-1-one | |
வேறு பெயர்கள்
1-(பிரிடின்-2-யில்) எத்தனோன்
1-(2-பிரிடினைல்)எத்தனோன் மெத்தில் 2-பிரிடைல் கீட்டோன் | |
இனங்காட்டிகள் | |
1122-62-9 | |
ChemSpider | 13648 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 14286 |
| |
UNII | 629O10UI3L |
பண்புகள் | |
C7H7NO | |
வாய்ப்பாட்டு எடை | 121.14 g·mol−1 |
அடர்த்தி | 1.08 கி/மி.லி[1] |
உருகுநிலை | 8 முதல் 10 °C (46 முதல் 50 °F; 281 முதல் 283 K)[2] |
கொதிநிலை | 188 முதல் 189 °C (370 முதல் 372 °F; 461 முதல் 462 K)[1] |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 73 °C (163 °F; 346 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுகிரிக்கனார்டு வினைப்பொருளின் உதவியோடு 2-புரோமோபிரிடின் சேர்மத்தை அசைலேற்றம் செய்து 2-அசிட்டைல்பிரிடின் தயாரிக்கப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Sigma Adrich
- ↑ ChemicalBook
- ↑ National Toxicology Program"Summary of Data for Chemical Selection" பரணிடப்பட்டது 2011-08-13 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Trécourt, F.; Breton, G.; Bonnet, V.; Mongin, F.; Marsais, F.; Quéguiner, G., "New Syntheses of Substituted Pyridines via Bromine–Magnesium Exchange", Tetrahedron 2000, volume 56, pp. 1349-1360. எஆசு:10.1016/S0040-4020(00)00027-2.