2-எத்திலெக்சைல் கிளைசிடில் ஈதர்

2-எத்திலெக்சைல் கிளைசிடில் ஈதர் (2-Ethylhexyl glycidyl ether) என்பது எபோக்சி ரெசின்களின் பாகுத்தன்மையைக் குறைக்கப் பயன்படும் தொழில்துறை வேதிப்பொருளாகும்.[1] நீர்ம கரிம மூலக்கூறான இச்சேர்மம் C11H22O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது.[2] இவை பின்னர் பசைகள், முத்திரை மெழுகுகள் மற்றும் வண்ணப்பூச்சுகள் அல்லது பூச்சுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் சிஏசு எண் பதிவு 2461-15-6 என்று அடையாளப்படுத்துகிறது.[3][4][5] ஐயுபிஏசி முறையில் 2-(2-எத்திலெக்சாயிமெத்தில்)ஆக்சிரேன் என்ற பெயர்ர்ல் அழைக்கப்படுகிறது. பலபடி அடிப்படையிலான மற்ற பயன்பாடுகளிலும் 2-எத்திலெக்சைல் கிளைசிடில் ஈதர் பயன்படுத்தப்படுகிறது.[6]

2-எத்திலெக்சைல் கிளைசிடில் ஈதர்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-(2-எத்திலெக்சாயில்மெத்தில்)ஆக்சிரேன்
இனங்காட்டிகள்
2461-15-6
யேமல் -3D படிமங்கள் Image
  • O(CC1OC1)CC(CC)CCCC
பண்புகள்
C11H22O2
வாய்ப்பாட்டு எடை 186.30 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

2-எத்தெலெக்சனாலும் எபிகுளோரோ ஐதரினும் இலூயிசு அமில வினையூக்கியின் முன்னிலையில் சுருக்க வினையில் ஈடுபட்டு ஆலோ ஐதரின் உருவாகிறது. தொடர்ந்து வினைக்கலவையை கடுங்கார ஐதரோகுளோரைடு நீக்கவினைக்கு உட்படுத்தினால் 2-எத்திலெக்சைல் கிளைசிடில் ஈதர் உருவாகிறது.[7][8] நீர், சோடியம் குளோரைடு மற்றும் அதிகப்படியான சோடியம் ஐதராக்சைடு போன்றவை கழிவுப் பொருள்களாகும். தரக்கட்டுப்பாட்டு சோதனைகளில் ஒன்று எபோக்சியின் சமான எடையை தீர்மானிப்பதன் மூலம் எபோக்சி மதிப்பு அளவிடப்படுகிறது.

வணிகம்

தொகு

அமெரிக்காவில் உள்நாட்டிலும் உலகின் பிற பகுதிகளிலும் 2-எத்திலெக்சைல் கிளைசிடில் ஈதர் உற்பத்தி செய்யப்படுகிறது.[9] 2019 ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து 13 மில்லியன் கிலோவுக்கு மேல் ஏற்றுமதி செய்யப்பட்டது.[10] எபோக்சி பிசின் நீர்த்துப்போகமல் இருக்கப் பயன்படுத்தப்படுவதோடு, அழகுசாதனப் பொருட்களைத் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது.[11]

பாதுகாப்பு

தொகு

தயாரிப்பின் பாதுகாப்பு நன்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இச்சேர்மம் ஒரு தோல் உணர்திறன் மிக்கது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.[12][13][14][15]

மேலும் காண்க

தொகு

மேலும வாசிக்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "TZ3300000 | C11H22O2 | ChemSpider". www.chemspider.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
  2. "Oxirane, [[(2-ethylhexyl)oxy]methyl]- (CAS 2461-15-6) - Chemical & Physical Properties by Cheméo". www.chemeo.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
  3. "Sigma Aldrich catalogue 2-ethyl hexyl clycidyl ether". பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
  4. "2-Ethylhexyl glycidyl ether | 2461-15-6". www.chemicalbook.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
  5. 2-ethylhexyl glycidyl ether - Wikidata
  6. Deralia, Parveen Kumar; du Poset, Aline Maire; Lund, Anja; Larsson, Anette; Ström, Anna; Westman, Gunnar (2021-04-19). "Oxidation Level and Glycidyl Ether Structure Determine Thermal Processability and Thermomechanical Properties of Arabinoxylan-Derived Thermoplastics". ACS Applied Bio Materials 4 (4): 3133–3144. doi:10.1021/acsabm.0c01550. https://doi.org/10.1021/acsabm.0c01550. 
  7. "Glycidyl 2-Ethylhexyl Ether 2461-15-6", Sax's Dangerous Properties of Industrial Materials, Hoboken, NJ, USA: John Wiley & Sons, Inc., 2004-10-15, பார்க்கப்பட்ட நாள் 2022-03-23
  8. SpadŁo, M. & Iwański, L. & Pokorska, Z.. (2004). The effect of catalyst type on the synthesis of 2-ethylhexyl glycidyl ether. Przemysl Chemiczny. 83. 133-136.
  9. Chem, A. A. L. "ME 102". www.aalchem.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
  10. "What Is 2-Ethylhexyl Glycidylether, Cas No 2461-15-6 Guide". ECHEMI. பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
  11. Office, European Patent. "European publication server". data.epo.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
  12. "Substance Information - ECHA". echa.europa.eu (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
  13. "2-Ethylhexyl glycidyl ether (cas 2461-15-6) SDS(Safety Data Sheet) /MSDS download". www.guidechem.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
  14. "NIOSHTIC-2 Publications Search - 00188271 - Information profiles on potential occupational hazards: epoxy compounds (non-cyclic)". www.cdc.gov. பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
  15. Canada, Environment and Climate Change (2020-08-07). "Screening assessment - Epoxides and Glycidyl Ethers Group". www.canada.ca. பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.