2-குளோரோநாப்தலீன்
2-குளோரோநாப்தலீன் (2-Chloronaphthalene) என்பது C10H7Cl என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.[1][2] கரிமகுளோரின் சேர்மமான இது நாப்தலீனின் குளோரினேற்ற வழிப்பெறுதியாகக் கருதப்படுகிறது. 2-குளோரோநாப்தலீன் சேர்மம் 1-குளோரோநாப்தலீன் சேர்மத்தின் மாற்றியமாகும்.[3]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-குளோரோநாப்தலீன் | |
வேறு பெயர்கள்
β-குளோரோநாப்தலீன், 2-குளோரோநாப்தலீன்
| |
இனங்காட்டிகள் | |
91-58-7 | |
ChemSpider | 6789 |
EC number | 202-079-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7056 |
| |
UNII | 49O81U3ITI |
பண்புகள் | |
C10H7Cl | |
வாய்ப்பாட்டு எடை | 162.62 g·mol−1 |
தோற்றம் | அரை வெண்மை படிகத்தூள் |
அடர்த்தி | 1.2±0.1 கி/செ.மீ3 |
உருகுநிலை | 59 °C (138 °F; 332 K) |
கொதிநிலை | 255 °C (491 °F; 528 K) |
கரையாது | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P280 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுநாப்தலீனை குளோரினேற்றம் செய்து நேரடியாக 2-குளோரோநாப்தலீன் சேர்மத்தை தயாரிக்க இயலும். ஆனால் இவ்வினையில் 1-குளோரோநாப்தலீன், 2-குளோரோநாப்தலீன் ஆகிய ஒற்றைக்குளோரினேற்ற சேர்மங்களுடன் கூடுதலாக இருகுளோரோ நாப்தலீன் மற்றும் முக்குளோரோ நாப்தலீன் ஆகிய சேர்மங்களும் உருவாகும்.[4]
பண்புகள்
தொகு2-குளோரோநாப்தலீன் எரியக்கூடிய வேதிப்பொருளாகும். வெள்ளை நிறத்தில் மணமற்று ஒரு திண்மப்பொருளாக இது காணப்படுகிறது. நடைமுறையில் தண்ணீரில் கரையாது. இந்த சேர்மம் வலுவான ஆக்சிசனேற்ற முகவர்களுடன் வினைபுரியும்.[5]
பயன்பாடுகள்
தொகு2-குளோரோநாப்தலீன் புலரின்கள் தயாரிப்பில் பெரிதும் பயன்படுகிறது. [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "2-Chloronaphthalene". EPA. comptox.epa.gov. பார்க்கப்பட்ட நாள் 14 June 2017.
- ↑ "2-Chlornaphthalin". பார்க்கப்பட்ட நாள் 14 June 2017.
- ↑ "2-Chlornaphthalin Produkt Beschreibung" (in German). chemicalbook.com. பார்க்கப்பட்ட நாள் 14 June 2017.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Bavendamm, W.; Bellmann, H. (February 1953). "Chlornaphthalin-Präparate" (in German). Holz Als Roh- und Werkstoff 11 (2): 81–84. doi:10.1007/BF02605462.
- ↑ "2-Chlornaphthalin Produkt Beschreibung" (in German). பார்க்கப்பட்ட நாள் 14 June 2017.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Krüger, Anke (2007). Neue Kohlenstoffmaterialien: Eine Einführung (in German). Springer-Verlag. p. 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8351-9098-6.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)