2-பார்மைல் பிரிடின்

பிரிடின்-2-கார்பாக்சால்டிகைடு

2-பார்மைல் பிரிடின் (2-Formylpyridine) என்பது NC5H4CHO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். பொதுவாக இதை பிரிடின்-2-கார்பாக்சால்டிகைடு என்ற பெயராலும் அழைக்கிறார்கள். இச்சேர்மம் எண்ணெய்ப் பசையுடன் நிறமற்ற சேர்மமாக தனித்தன்மையான நெடியுடன் காணப்படுகிறது. நாட்பட்ட மாதிரி உப்புகள் மாசு கலந்திருப்பதால் பழுப்பு நிறத்தில் தோற்றமளிக்கின்றன. மருந்து வகைப் பொருட்கள் தயாரிக்கவும், சில ஒருங்கிணைவு வேதியியலுடன் தொடர்புடைய சேர்மங்களைத் தயாரிக்கவும் ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது, ஐதராக்சி மெத்தில்- அல்லது மெத்தில்பிரிடின்களை ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் பிரிடின் ஆல்டிகைடுகளைத் தயாரிக்க இயலும்[1].

2-பார்மைல் பிரிடின்
பிக்கோலினால்டிகைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பிரிடின்-2-கார்பால்டிகைடு
வேறு பெயர்கள்
பிக்கோலினால்டிகைடு
2-பிரிடின் கார்பாக்சால்டிகைடு
2-பைரிடைல் ஆல்டிகைடு
ப்-பிக்கோலினால்
இனங்காட்டிகள்
1121-60-4 Y
ChEMBL ChEMBL274794 Y
ChemSpider 13635 Y
InChI
  • InChI=1S/C6H5NO/c8-5-6-3-1-2-4-7-6/h1-5H Y
    Key: CSDSSGBPEUDDEE-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14273
  • O=Cc1ncccc1
பண்புகள்
C6H5NO
வாய்ப்பாட்டு எடை 107.11 g·mol−1
அடர்த்தி 1.126 கி/மிலி
கொதிநிலை 181 °C (358 °F; 454 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பிராலிடாக்சைம் மருந்து 2-பார்மைல்பிரிடினிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆல்டிகைடு வேதி வினைக்குழு அமீன்கள் போன்ற அணுக்கரு கவரிகளால் தாக்கப்பட்டு சிகிப் காரங்கள் உருவாகின்றன[2]. இவை இருபல் ஈந்தணைவிகளாகச் செயல்படுகின்றன. இமினோபிரிடின் அணைவுச் சேர்மங்கள் வலிமையானவைகளாகும்[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Shinkichi Shimizu; Nanao Watanabe; Toshiaki Kataoka; Takayuki Shoji; Nobuyuki Abe; Sinji Morishita; Hisao Ichimura (2002). "Pyridine and Pyridine Derivatives". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. doi:10.1002/14356007.a22_399. 
  2. Chatterjeea, D.; Mitra, A. (2004). "Synthesis, Characterization and Reactivities of Schiff-base Complexes of Ruthenium(III)". J. Coord. Chem. 57: 175–182. doi:10.1080/00958970410001662435. 
  3. Mal, P.; Breiner, B.; Rissanen, K.; Nitschke, J. R. (2009). "White Phosphorus is Air-Stable Within a Self-Assembled Tetrahedral Capsule". Science 324 (5935): 1697–1699. doi:10.1126/science.1175313. பப்மெட்:19556504. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-பார்மைல்_பிரிடின்&oldid=2584053" இலிருந்து மீள்விக்கப்பட்டது