2-பீனைல்-2-புரோப்பனால்

வேதிச் சேர்மம்

2-பீனைல்-2-புரோப்பனால் (2-Phenyl-2-propanol) என்பது C9H12O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது ஆல்ககால் குழுச் சேர்மம் எனவும் வகைப்படுத்தப்படுகிறது.

2-பீனைல்-2-புரோப்பனால்
2-Phenyl-2-propanol
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-பீனைல்-2-புரோப்பனால்
இனங்காட்டிகள்
617-94-7
ChEBI CHEBI:131607
ChEMBL ChEMBL3185495
ChemSpider 11556
EC number 210-539-5
InChI
  • InChI=1S/C9H12O/c1-9(2,10)8-6-4-3-5-7-8/h3-7,10H,1-2H3
    Key: BDCFWIDZNLCTMF-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12053
  • CC(C)(C1=CC=CC=C1)O
UNII JE030BGE05
பண்புகள்
C9H12O
வாய்ப்பாட்டு எடை 136.19 கி/மோல்
தோற்றம் வெண்மை முதல் வெளிர் மஞ்சள், நெடியற்ற திண்ம்மம்[1]
அடர்த்தி 0.973 கி/செ.மீ3[1]
உருகுநிலை 28–32 °C (301–305 K)[1]
கொதிநிலை 202[1] °C (396 °F; 475 K)
கரையாது[2]
கரைதிறன் எத்தனால் மற்றும் பென்சீன் கரைப்பான்களில் கரையும்[3]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.49146 (20 °செ)[4]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[1]
GHS signal word அபாயம்
<abbr class="abbr" title="தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளில் வழு">HH302, <abbr class="abbr" title="தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளில் வழு">HH315, <abbr class="abbr" title="தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளில் வழு">HH319
வார்ப்புரு:PPhrases[1]
Lethal dose or concentration (LD, LC):
4300மி.கி/கி.கி (முயல், தோல்வழி);[1] 130மி.கி/கி.கி (எலி, வாய்வழி) [1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

பீனைல்மக்னீசியம்புரோமைடும் அசிட்டோனும் கிரிக்கனார்டு வினையில் ஈடுபட்டு 2-பீனைல்-2-புரோப்பனால் சேர்மம் உருவாகிறது.[5][6]

பண்புகள்

தொகு

2-பீனைல்-2-புரோப்பனால் வெள்ளை முதல் வெளிர்-மஞ்சள் நிறம் வரையிலான நிறத்தில் ஒரு மணமற்ற திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. எரியக்கூடியது என்றாலும் பற்றவைப்பது கடினமாகும். தண்ணீரில் அரிதாகவே கரைகிறது.[1][2]

பயன்கள்

தொகு

2-பீனைல்-2-புரோப்பனால் கரிமத் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படுகிறது. வேளாண் வேதியியல், மருத்துவம் மற்றும் சாயப்பொருள் துறைகளில் வினைப்பொருளாக அல்லது இடைநிலை வேதிப்பொருளாகப் பயன்படுகிறது.[2]

2-பீனைல்-2-புரோப்பனால் கியூமின் சேர்மத்தின் முக்கிய வளர்சிதை மாற்ற வேதிப் பொருளாகும். எனவே 2-பீனைல்-2-புரோப்பனால் கியூமினின் உயிர் குறிப்பானாக செயல்படுகிறது.[7]

தீங்குகள்

தொகு

2-பீனைல்-2-புரோப்பனால் மனிதர்களுக்கு ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன என்று இடர் மதிப்பீட்டிற்கான கூட்டாட்சி நிறுவனம் 2008 ஆம் ஆண்டில் அறிக்கை வெளியிட்டது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 Record of 2-Phenyl-2-propanol in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health, accessed on 2017-04-16.
  2. 2.0 2.1 2.2 வார்ப்புரு:Alfa
  3. Gail Vance Civille, B. Thomas Carr (2015), Sensory Evaluation Techniques, Fifth Edition, CRC Press, p. 204, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4822-0867-2
  4. Sigma-Aldrich Co., 2-Phenyl-2-propanol, 97%.
  5. William Brown; Christopher Foote; Brent Iverson; Eric Anslyn (2008), Organic Chemistry, Cengage Learning, p. 568, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-495-38857-9
  6. Albany College of Pharmacy and Health Sciences: Preparation of 2-Phenyl-2-propanol (Grignard Reaction), retrieved 16 April 2017.
  7. Knecht, U. (2002), "2-Phenyl-2-propanol in Urin [Biomonitoring Methods in German language, 2012]", The MAK-Collection for Occupational Health and Safety, Wiley-VCH Verlag & Co. KGaA, pp. 1–10, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/3527600418.bi9882d0020, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-60041-0
  8. BfR: Verbraucher sollten Plastik-Clogs mit starkem Geruch meiden, Stellungnahme Nr. 047/2008 des BfR of 5 November 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-பீனைல்-2-புரோப்பனால்&oldid=3793236" இலிருந்து மீள்விக்கப்பட்டது