2000 இலங்கைச் சூறாவளி

2000 இலங்கைச் சூறாவளி(IMD designation: BOB 06 JTWC designation: 04B) என்பது 1978 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் மீது வீசிய பலம் வாய்ந்த வெப்ப மண்டலச் சூறாவளி ஆகும். இது 2000 ஆம் ஆண்டின் வட இந்தியப் பெருங்கடலின் சூறாவளிப்பருவத்தில் வீசிய நான்காவதும் கடுமையான இரண்டாவது சூறாவளியும் ஆகும். 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாளன்று இச்சூறாவளி திரிந்த வானிலையைக் கொண்ட ஒரு பிரதேசத்தில் இருந்து விரிவடைந்தது. இது மேற்குப் பக்கமாக நகர்ந்து திடீரென பலமான சூறாவளியாக உருவெடுத்து 75 mph (120 கிமீ/மணி) எனும் வேகத்தை அடைந்தது. இலங்கையின் கிழக்குப் பகுதியை உச்ச பலத்துடன் இச்சூறாவளி தாக்கியது, பின்னர் பலவீனமடைந்த இச்சூறாவளி டிசம்பர், 28 ஆம் நாளன்று தென்னிந்தியாவைத் தாக்கிச் சிதறடிக்கும் வரையில் இலங்கைத்தீவை சற்று மெதுவாகக் கடந்து சென்றது.

கடுமையான புயல் BOB 06
சூறாவளி
Cyclone 04B viewed from Space on December 26, 2000. The storm's eye, visible near the center of the image, is making landfall on Sri Lanka.
04B சூறாவளி கரையோரத்தின் அருகே தீவிர உச்சக்கட்டத்தில்
தொடக்கம்டிசம்பர் 23, 2000
மறைவுடிசம்பர் 28, 2000
உயர் காற்று3-நிமிட நீடிப்பு: 165 கிமீ/ம (105 mph)
1-நிமிட நீடிப்பு: 120 கிமீ/ம (75 mph)
தாழ் அமுக்கம்970 hPa (பார்); 28.64 inHg
இறப்புகள்9 இறப்பு, 8 காணவில்லை
பாதிப்புப் பகுதிகள்இலங்கை, தென்னிந்தியா
2000 வட இந்தியப் பெருங்கடலின் சூறாவளிப்பருவம்-இன் ஒரு பகுதி

1978 ஆம் ஆண்டில் வீசிய சூறாவளியின் 110 mph (175 கிமீ/மணி) வேகத்தை விடவும் குறைவான வேகம் கொண்ட இலங்கையைத் தாக்கிய முதலாவது வேகம் குறைந்த சூறாவளி இதுவாகும். 1992 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கைத்தீவைத் தாக்கிச் சென்ற வெப்பமண்டலச் சூறாவளி இதுவாகும். 1996 ஆம் ஆண்டின் பின்னரான டிசம்பர் மாதத்தில் வீசிய வங்காள விரிகுடாவின் தீவிரமான சூறாவளி இதுவாகும். இச்சூறாவளி கனமான அடைமழைகளையும் பலமான காற்றுக்களையும் உருவாக்கியது மட்டுமன்றி பத்தாயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியதுடன் 500,000 மக்களை இடம்பெயர்ந்து செல்லவும் செய்தது. இச்சூறாவளியின் விளைவாக ஒன்பது பேர் பலியாகினர்.

வானிலை ஆராய்ச்சி வரலாறு

தொகு

வளிமண்டல மேற்காவுகைக்கு (வளிமண்டல வெப்பச் சலனம், atmospheric convection) உட்பட்ட பிரதேசமொன்று வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் 2000 ஆம் ஆண்டில் திசம்பர் மாதம் 21 ஆம் திகதி உருவாகி விரிவடைந்தது.[1] இது செயற்பாட்டிலுள்ள பூமத்தியரேகைத் தொட்டிக்கு (equatorial trough) அருகில் உருவானது.[2] இது பலவீனமான செங்குத்தான காற்று பெயர்ச்சியைக் (weak vertical wind shear) கொண்ட ஒரு பிரதேசத்தில் அமைந்திருந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Gary Padgett (2001). "December 2000 Global Tropical Cyclone Summary". பார்க்கப்பட்ட நாள் January 4, 2007.
  2. India Meteorological Department (2001). "Summary for Tropical Cyclones in the RSMC New Delhi Area of Responsibility" (PDF). World Meteorological Organization. பார்க்கப்பட்ட நாள் May 25, 2008.

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=2000_இலங்கைச்_சூறாவளி&oldid=4118137" இலிருந்து மீள்விக்கப்பட்டது