2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தின் விளைவு

இந்தோனேசியா தீவு, சுமத்ராவுக்கு அருகே 2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் பூகம்பத்தால் ஏற்பட்ட சுனாமி 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் நாள் இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையைத் தாக்கியபோது, இந்தியாவில் அதிகாரபூர்வ மதிப்பீடுகளின்படி, 10,136 பேர் இறந்தனர் மற்றும் நூறாயிரக்கணக்கானோர் வீடற்றவர்கள் ஆனார்கள்.பூகம்பம் 9.1 - 9.3 உந்தத்திறன் ஒப்பளவு அளவிற்கு பதிவானது. இந்த அளவானது கடந்த ஐந்து பத்தாண்டுகளில் ஏற்பட்ட பூகம்பங்களிலேயே மிகவும் அதிகமானதாகும்.[1] இந்த நிலநடுக்கமானது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின் ஏற்படும் சிறிய அளவு நடுக்கங்கைளத் தொடர்ந்து வந்தது.[2] 

Map of the Indian Ocean region
2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள்

பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மாநிலங்கள் தொகு

இந்தப் பேரிடர் மொத்தம் 14 பகுதிகளைப் பாதித்தது.[3] 572 தீவுகளால் ஆன அந்தமான் நிக்கோபார் தீவுகள் (குறைந்த மற்றும் உயர் அலைகளால் பாதிக்கப்படும் நிலப்பகுதிகள்), இதில் 38 தீவுகள் முதன்மை நிலத்தைச் சார்ந்த பூர்வ பழங்குடியின மக்கள் குடியேறியவையாகும். இந்தத் தீவுகள் நிலநடுக்க மையத்திற்கு சற்று வடக்காக அமைந்தவையாகும். தெற்கு நிக்கோபார் தீவுகளில் சுனாமியானது 15 மீட்டர் (49 அடி) உயரத்திற்கு எழும்பியது. அதிகாரபூர்வமான இறப்பு எண்ணிக்கை 1,310 ஆகவும், ஏறத்தாழ 5,600 பேர் காணாமல் போனவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமற்ற இறப்பு எண்ணிக்கை (காணமல் போனவர்களை இறந்தவர்கள் என்று உள்ளடக்கியது) ஏறத்தாழ 7,000 ஆக இருக்கலாம். இந்தப் பெருங்கடல் நிலநடுக்கம் வரலாற்றில் அனைத்துக் காலங்களிலும் ஏற்பட்டதை விட அதிக இறப்பைத் தந்த நிலநடுக்கமாக கருதப்படுகிறது. இந்த நிலநடுக்கமானது 14 பகுதிகளையும் சேர்த்து 230,000 மேற்பட்ட பாதிப்புக்குள்ளானோர் வாழ்க்கைகளை எடுத்துக் கொண்டு விட்டது. காயமைடந்தோர் எண்ணிக்கை இதைப் போல இரண்டு மடங்கிற்கும் அதிகமாக இருக்கலாம்.[4]

நிக்கோபார் மற்றும் கார் நிக்கோபார் தீவுகள் நிலநடுக்க மையத்திற்கு அருகாமையில் இருந்த காரணத்தாலும், ஒப்பீட்டளவில் தட்டையான தளப்பகுதியாக இருந்த காரணத்தாலும் அனைத்து தீவுகளையும் விட மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளாக இருந்தன. பெரியதொரு நிலநடுக்கத்திற்குப் பின் ஏற்படும் சிறிய அளவு நடுக்கங்கள் இந்தப் பகுதியை சீரழித்து விட்டன எனலாம்.[5] நிக்கோபார் தீவுகளின் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் தொகையினர் இறந்தும், காயமடைந்தும் காணாமலும் போயிருந்தனர்.[6] சோவ்ரா தீவு 1,500 எண்ணிக்கையிலான தனது மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதியை இழந்திருந்தது. தீவு முழுமையும் மூழ்கியிருந்தது. டிரிங்கெட் தீவானது இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. [7] நான்கெளரி தீவுக்கூட்டங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அத்தீவின் சில பகுதிகள் மூழ்கிப்போயின.[8]

கார் நிக்கோபார் தீவுகளில், 111 இந்திய வான்படை அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சுனாமி வான்படைத் தளத்தை கடுமையாகத் தாக்கிய போது அடித்துச் செல்லப்பட்டனர்.[9] புனித தாமசு தேவாலயம்      (ஜான் ரிச்சர்ட்சன் தேவாலயம் எனவும் அழைக்கப்படுகிறது) அடித்துச் செல்லப்பட்டது. இந்த தேவாலயமானது இந்தப் பகுதியில் உள்ள மிகப்பழமையான ( 1930 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது) மற்றும் பிரபலமான தேவாலயங்களில் ஒன்றாகும். [சான்று தேவை]

அந்தமான் தீவுகளின் பெரும்பான்மையான மக்கள், முதன்மையாக மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள். ஜாரவா, செண்டினல் மக்கள், சோம்பென் மக்கள், ஓங்கே மற்றும் பெரிய அந்தமானிகள் ஆகியோர் அச்சுறுத்தல் நிலையிலுள்ள பழங்குடியின மக்களே அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பூர்வ குடிமக்களாவர். மானிடவியலின்படி, இந்தப் பழங்குடியின மக்கள் உலகின் மிகப்பழமையான பழங்குடி இனத்தவர்களுள் சில வகையினராகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Magnitude 9.1 – OFF THE WEST COAST OF NORTHERN SUMATRA". U.S. Geological Survey. Archived from the original on 1 September 2012. பார்க்கப்பட்ட நாள் 26 August 2012.
  2. [1] பரணிடப்பட்டது 3 சனவரி 2005 at the வந்தவழி இயந்திரம்
  3. Taylor, Alan (2014-12-26). "Ten Years Since the 2004 Indian Ocean Tsunami". https://www.theatlantic.com. பார்த்த நாள்: 2016-02-01. 
  4. Osbourne, Hannah (2014-12-22). "2004 Indian Ocean earthquake and tsunami: Facts about the Boxing Day disaster". http://www.ibtimes.co.uk. பார்த்த நாள்: 2016-02-01. 
  5. [2] பரணிடப்பட்டது 6 மார்ச்சு 2005 at the வந்தவழி இயந்திரம்
  6. "Asia toll touches 68,000; 12,500 dead in India". The Times Of India. 29 December 2004. பார்க்கப்பட்ட நாள் 2013-05-21.
  7. [3] பரணிடப்பட்டது 2 சனவரி 2005 at the வந்தவழி இயந்திரம்
  8. "7000 still missing: Mukherjee". Rediff.com. 30 December 2004. பார்க்கப்பட்ட நாள் 2013-05-21.
  9. [4] பரணிடப்பட்டது 6 மார்ச்சு 2005 at the வந்தவழி இயந்திரம்