2006 நேபாள சனநாயக இயக்கம்
2006 நேபாள சனநாயக இயக்கம் (2006 Democracy Movement, நேபாளி: लोकतन्त्र आन्दोलन) நேபாளத்தில் நாடாளுமன்ற மக்களாட்சியை நிறுவவும், நேபாள மன்னரின் சனநாயகமற்ற நேரடி முடியாட்சியை ஒழிக்கவும், நேபாள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போராடிய இரண்டாவது மக்கள் இயக்கம் ஆகும். [1]இவ்வியக்கத்தினால் நாட்டை நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு என அழைக்கப்பட்டது. நேபாளத்தில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டது. நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக ராம் பரன் யாதவ் பொறுப்பேறார்.
நாடாளுமன்றத்தை மீண்டும் நிறுவுதல்
தொகு24 ஏப்ரல் 2006ல் தற்காலிக இடைநீக்கம் செய்திருந்த பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் செயல்பட நேபாள மன்னர் அனுதித்தார்.[2][3] நேபாளத்தின் தேசிய ஒற்றுமை மற்றும் வளமைக்கு நேபாளி காங்கிரஸ் - நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) உள்ளிட்ட ஏழு கட்சிகளின் கூட்டணி அரசு அமைப்பதற்கு நேபாள மன்னர் ஞானேந்திரா அனுமதி வழங்கினார். கிரிஜா பிரசாத் கொய்ராலா புதிய கூட்டணி அரசின் பிரதம அமைச்சரானார். இக்கூட்டணி அரசு, நேபாளத்தின் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு வசதியாக, அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத் தேர்தலை அறிவித்தது. [4]
மன்னர் ஆட்சியை ஒழித்த பிறகு, புதிய அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத் தேர்தலை நடத்த வலியுறுத்தி, பாபுராம் பட்டாராய் தலைமையிலான மாவோயிஸ்டு கிளர்ச்சியாளர்கள், கிரிஜா பிரசாத் கொய்ராலா தலைமையிலான கூட்டணி அரசை எதிர்த்து ஆயுதமேந்திப் போராடினார்கள். [5]
28 ஏப்ரல் 2006ல் நேபாளப் பிரதம அமைச்சர் கிரிஜா பிரசாத் கொய்ராலா அறிவித்த மூன்று மாத போர் நிறுத்த ஒப்பந்தத்தை, மாவோயிஸ்டுகள் ஏற்றனர்[6][7]
1 மே 2006ல், அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத்தின் தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்திட மாவோயிஸ்டுகள் தலைவர் பாபுராம் பட்டாராய், நேபாள கூட்டணி அரசை வலியுறுத்தினார். [8] 12 மே 2006ல் நேபாள மன்னர் ஞானேந்திராவுக்கு ஆதரவான கூட்டணி அரசின் நான்கு அமைச்சர்கள் மீது, மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால், கூட்டணி அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டனர். [9]
மே 18 சட்டம்
தொகு18 மே 2006ல் நேபாள நாடாளுமன்றம், பெரும்பான்மையான வாக்குகள் பெற்று, நேபாள மன்னரின் அனைத்து அதிகாரங்களை பறித்து சட்டம் இயற்றிய போது,[10]
- இராணுவத்தின் 90,000 படையினர் நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் வந்தனர்.
- நேபாள மன்னர் குடும்பங்கள் மற்றும் சொத்துகள் மீது வரி விதிக்கப்பட்டது.
- அரசவைக் குழு மற்றும் அரசவை ஆலோசனைக் குழு கலைக்கப்பட்டது.
- இராணுவத்தினர் மற்றும் ஆட்சியாளர்கள், அரசப் பட்டங்களை விலக்கினர்.
- நேபாளம் சமய சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
- புதிய தேசிய கீதம் இயற்றும் வரை, தற்போதுள்ள தேசிய கீதத்தை இசைப்பது நிறுத்தப்பட்டது.
- நேபாள மன்னரிடம் இருந்த, இராணுவத்தின் உச்ச தளபதி பதவி பறிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் புதிய சட்டம், 1990 நேபாள மக்கள் இயக்கத்தால் உருவான 1990ம் ஆண்டின் நேபாள அரசியலமைப்பு சட்டம் நீக்கப்பட்டது. "[10]
மே, 18ம் நாளை ஜனநாயக நாளாக அறிவிக்கப்பட்டது.[11]
29 மே 2008 அன்று நேபாள நாடாளுமன்றம் புதிய அரசியலமைப்பு சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியதால், நேபாளத்தில் முடியாட்சி முறை அகற்றப்பட்டு, நேபாளத்தை குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. [12]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ General Federation of Nepalese Trade Unions: Honour Nepali Sentiment; Continue support to Jana Andolan II பரணிடப்பட்டது 2007-03-12 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Sengupta, Somini (25 April 2006). "In a Retreat, Nepal's King Says He Will Reinstate Parliament". The New York Times. https://www.nytimes.com/2006/04/25/world/asia/25nepal.html?hp&ex=1146024000&en=8fe71bf94d2a73c8&ei=5094&partner=homepage.
- ↑ "Full text: King Gyanendra's speech". BBC. 24 April 2006. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4940876.stm.
- ↑ Reporter, Kantipur (25 April 2006). "'Announcement of CA elections main agenda of reinstated parliament'; Koirala to become PM". Kantipur News இம் மூலத்தில் இருந்து 27 ஏப்ரல் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060427180617/http://www.kantipuronline.com/kolnews.php?&nid=71957.
- ↑ Majumder, Sanjoy (25 April 2006). "Nepalis cautious over king's move". BBC. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4942378.stm.
- ↑ "Nepal Maoist rebels offer truce". BBC. 27 April 2006. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4949066.stm.
- ↑ "Nepal's Maoists Declare Ceasefire". VOA. 27 April 2006 இம் மூலத்தில் இருந்து 14 மே 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060514001521/http://voanews.com/english/nepal-ceasfire.cfm.
- ↑ "Rebels 'would respect' Nepal vote". BBC. 1 April 2006. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4962062.stm.
- ↑ "Former Nepal ministers arrested". BBC. 12 May 2006. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4766385.stm.
- ↑ 10.0 10.1 "Vote to curb Nepal king's powers". BBC. 18 May 2006. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4992508.stm. பார்த்த நாள்: April 25, 2012.
- ↑ General Federation of Nepalese Trade Unions: GEFONT National Council welcomes HoR Proclamation; urges Nepal Government to declare Jeth 04 as the Loktantrik Day by legislature<back> பரணிடப்பட்டது 2007-06-11 at Archive.today
- ↑ Nepal votes to abolish monarchy BBC News, 28 May 2008
வெளி இணைப்புகள்
தொகு- Nepal's King Gyanendra cracks down on protests; 3 dead (April 21, 2006)
- King of Nepal to restore democracy (April 21, 2006)
- India sends special envoy to Nepal (April 19, 2006)
- Hundreds arrested following pro-democratic rally in Nepal (April 8, 2005)
- Nepal’s King Gyanendra dismisses the government, claims power for himself (February 1, 2005)
- Nepal democracy crisis legal news and resources, JURIST
- A photo blog of the movement பரணிடப்பட்டது 2016-03-23 at the வந்தவழி இயந்திரம்
- CNN – April 9 பரணிடப்பட்டது 2006-04-20 at the வந்தவழி இயந்திரம்
- CNN – April 21
- New York Times
- Navhind Times பரணிடப்பட்டது 2005-04-19 at the வந்தவழி இயந்திரம்
- Blogger's account of the movement (In Nepali)
- Another blogger's account of the movement
- Scores of journalists detained – IFEX
- Criticism of the movement
- Explaining Maoist Strategy: It's All In The Script by Dr Thomas A. Marks பரணிடப்பட்டது 2007-03-11 at the வந்தவழி இயந்திரம்