2012 இல் இந்தியாவின் மிகப்பெரும் மின்வெட்டு

2012 இல் இந்தியாவின் மிகப்பெரும் மின்வெட்டு என்பது சூலை 30, 2012 அன்று வட இந்தியாவில் 14 இந்திய மாநிலங்களில் நிலவிய திடீர் மின்வெட்டும்[1] மறுநாள் சூலை 31இல் 21 மாநிலங்களைப் பாதித்த மின்வெட்டையும் குறிக்கின்றது. இதுவே உலகளவில்[2] மிகப்பெரும் இருட்டடிப்பாக 600 மில்லியன் (60 கோடி) மக்களை [3][4][5] அதாவது இந்தியாவின் பாதி மக்கள்தொகையை பாதித்த நிகழ்வாகக் கருதப்படுகிறது. சூலை 31 மாலை நிலவரப்படி வட இந்தியாவின் பெரும்பான்மையான இடங்களுக்கும் தலைநகர் தில்லிக்கும் பாதிக்கும் மேற்பட்ட கிழக்கு இந்திய மாநிலங்களுக்கும் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்படுகிறது.[6]

2012 இல்
இந்தியாவின் மிகப்பெரும் மின்வெட்டு
சூலை 30, 31 ஆகிய இருநாட்களும் இந்திய மாநிலங்கள் கரும் சிவப்பிலும் சூலை 31யில் பாதிக்கப்பட்டவை வெளிர்சிவப்பிலும் காட்டப்பட்டுள்ளன.
சூலை 30, 31 ஆகிய இருநாட்களும் இந்திய மாநிலங்கள் கரும் சிவப்பிலும் சூலை 31யில் பாதிக்கப்பட்டவை வெளிர்சிவப்பிலும் காட்டப்பட்டுள்ளன.
நாள்02:48, சூலை 30, 2012 (+05:30) (2012-07-30T02:48+05:30)-
20:30, 31 சூலை 2012 (+05:30) (2012-07-31T20:30+05:30)
நிகழிடம்வட இந்தியா

பின்னணி

தொகு

இந்த மின்தடங்கலுக்கு முந்தைய வாரங்களில் புது தில்லியில் நிலவிய மிகுந்த வெப்பநிலையால் மின்தேவை எட்டியிராத அளவுகளுக்கு உயர்ந்திருந்தது. இந்தியாவில் பருவமழை வரத்தவறியதால் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விவசாயத்திற்கான பாசன நீரேற்றிகளுக்காக கூடுதலான மின்சாரத்தை மின்வலையிலிருந்து (power grid) நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கதிகமாக உறிஞ்சிக் கொண்டன.[7] பருவமழை தாமதத்தால் நீர் மின்நிலையங்களின் உற்பத்தியும் குறைந்திருந்தது.[8]

பொதுவாகவே[9], இந்திய மின் கட்டமைப்பு பொருளாதார வளர்ச்சி வீதத்தை 1.2 % பாதிக்குமளவு பின்தங்கி வருகிறது.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. "Power crisis now trips 22 states, 600 million people hit". Deccan Herald. 31 July 2012. பார்க்கப்பட்ட நாள் 31 July 2012.
  2. "Power cut hits millions, among world's worst outages". ராய்ட்டர்ஸ். 1 ஆகத்து 2012. Archived from the original on 2015-10-10. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2012. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-10-10. பார்க்கப்பட்ட நாள் 2012-08-01.
  3. "India blackouts leave 700 million without power". The Guardian, UK. 31 July 2012. பார்க்கப்பட்ட நாள் 31 July 2012.
  4. "620 million without power in India after 3 power grids fail". USA Today. 31 July 2012. Archived from the original on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 31 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "India's Mass Power Failure Worst Ever in World History". Outlook. Archived from the original on 1 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 1 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Power grids fail: Power restoration complete in Delhi & northeast, 50% in eastern region". The Economic Times. 31 July 2012. பார்க்கப்பட்ட நாள் 31 July 2012.
  7. "Power grid failure: FAQs". Hindustan Times. 31 July 2012. Archived from the original on 16 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 31 July 2012. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2012-08-01.
  8. "Power grid failure makes 370M swelter in dark as India struggles to meet its vast energy needs". The Washington Post. Associated Press. 30 July 2012 இம் மூலத்தில் இருந்து 22 பிப்ரவரி 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190222210002/https://www.washingtonpost.com/business/power-grid-failure-makes-370m-swelter-in-dark-as-india-struggles-to-meet-its-vast-energy-needs/2012/07/30/gJQAY4afKX_story.html. பார்த்த நாள்: 31 July 2012.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-02-22. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.
  9. 9.0 9.1 http://www.bloomberg.com/news/2012-08-01/worst-india-outage-highlights-60-years-of-missed-targets-energy.html

வெளி இணைப்புகள்

தொகு