2014 சார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்

2014ஆம் ஆண்டுக்கான சார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் 5 கட்டங்களாக நவம்பர் 25 முதல் டிசம்பர் 30 வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் 2014, அக்டோபர் 25 அன்று அறிவித்தது. சம்மு காசுமீர் சட்டமன்ற தேர்தலும் இதனுடன் இணைந்து நடைபெறும். தற்போதுள்ள சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2015, சனவரி 03 அன்று முடிவடைகிறது. இத்தேர்தலில் 20,744,776 (2,07,44,776) மக்கள் 81 சட்டப்பேரவை உறுப்பினர்களை தேர்வு செய்வர். 81இல் 6 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டதாகும். 28 மலைவாழ் (பழங்குடியினர்) மக்களுக்கு ஒதுக்கப்பட்டதாகும். நிழற்பட அடையாள அட்டை வழங்கப்பட்ட வாக்காளர்கள் 99.06% ஆகும். 24,648 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் யாருக்கும் வாக்கு செலுத்த விரும்பவில்லை என்ற விருப்பத் தேர்வும் உள்ளது. தேர்தல் முடிவு டிசம்பர் 23 அன்று வாக்குபதிவு எண்ணிக்கையன்றே அறிவிக்கப்படும். ஏழு தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் தாள் (காகிதம்) மூலம் வாக்கு செலுத்தும் வசதியும் இருக்கும், அவை சாம்செட்பூர் கிழக்கு, சாம்செட்பூர் மேற்கு, போகாரோ, தன்பாத், ராஞ்சி, கைடா, கான்கே.[1][2]

2014 ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்

← 2009 25 நவம்பர் 2014 - 20 டிசம்பர் 2014 2019 →

சார்க்கண்டு சட்டப்பேரவையில் 81 இடங்கள்
அதிகபட்சமாக 41 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்66.53% (Increase9.56%)
  Majority party Minority party Third party
 
தலைவர் ரகுபர் தாசு ஹேமந்த் சோரன் பாபுலால் மராண்டி
கட்சி பா.ஜ.க ஜாமுமோ ச.வி.மோ (பி)
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
ஜாம்ஷெட்பூர் கிழக்கு பர்ஹைத்,
தும்கா ("இழந்தது")
கிரிதிஹ் (இழந்தது)
தன்வார் ("இழந்தது")
முந்தைய
தேர்தல்
18 18 11
வென்ற
தொகுதிகள்
37 19 8
மாற்றம் Increase19 Increase1 3

முந்தைய முதலமைச்சர்

ஹேமந்த் சோரன்
ஜா.மு.மோ

முதலமைச்சர் -தெரிவு

ரகுபர் தாசு
பா.ஜ.க

வாக்குப்பதிவு

தொகு

இத்தேர்தலின் வாக்குபதிவு 5 கட்டங்களாக நடைபெற்றது. அவை பின்வருமாறு:

 
ஐந்து கட்டங்களாக நடைபெறும் தேர்தல் பகுதிகள் வண்ணங்களாலும் எண்களாலும் காட்டப்பட்டுமள்ளது.
தேதி தொகுதிகள் வாக்கு செலுத்தியோர்
நவம்பர், 25 13 61.92%[3]
திசம்பர், 2 20 65.46% [4]
டிசம்பர், 9 17 61% [5][6]
திசம்பர், 14 15 61% [7][8]
திசம்பர், 20 16 71% [9]
மொத்தம் 81 64%

தேர்தல் அட்டவணை

தொகு
தேர்தல் நிகழ்வு முதல் கட்டம் இரண்டாம் கட்டம் மூன்றாம் கட்டம் நான்காம் கட்டம் ஐந்தாம் கட்டம்
வேட்புமனு அளிக்கும் நாள் அக்டோபர் 29 நவம்பர் 07 நவம்பர் 14 நவம்பர் 19 நவம்பர் 26
வேட்புமனு அளிக்க இறுதி நாள் நவம்பர் 05 நவம்பர் 14 நவம்பர் 21 நவம்பர் 26 திசம்பர் 03
வேட்புமனுக்கள் ஆராய்தல் நவம்பர் 07 நவம்பர் 15 நவம்பர் 22 நவம்பர் 27 திசம்பர் 04
வேட்புமனுக்களை
விலக்கிக்கொள்ள இறுதி நாள்
நவம்பர் 10 நவம்பர் 17 நவம்பர் 24 நவம்பர் 29 திசம்பர் 06
வாக்குபதிவு நாள் நவம்பர் 25 திசம்பர் 02 டிசம்பர் 09 திசம்பர் 14 திசம்பர் 20
வாக்குகளை எண்ணும் நாள் டிசம்பர் 23 திசம்பர் 23 திசம்பர் 23 திசம்பர் 23 திசம்பர் 23

தேர்தல் முடிவுகள்

தொகு
கட்சி கொடி பெற்றுள்ள இடங்கள் முன்னர் பெற்ற இடங்கள் + /–
சார்கண்ட் முக்தி மோர்ச்சா   19 18 +1 
சார்கண்ட் விகாசு மோர்சா (பிரசாடான்டிரிக்)   8 11 -3
இந்திய தேசிய காங்கிரசு 6 14 -8
பாரதிய ஜனதா கட்சி 37 18 +19 
அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம்   5 5 0
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிய லெனிசிசுட்) (விடுதலை) 1 1 0
இராச்டிரிய ஜனதா தளம்   0 5 -5
ஜெய் பாரத் சமதா கட்சி 1 1 0
சார்க்கண்ட் கட்சி 1 1 0
ஒருங்கிணைந்த மார்க்சியம் 1 1 0
பகுஜன் சமாஜ் கட்சி   1 0 +1  
நவ்ஜவான் சங்கராச மோர்சா 1 0 +1  
ஐக்கிய ஜனதா தளம்   0 2 -2
இராச்டிரிய கல்யாண் பக்சா 0 1 -1
சார்கண்ட் ஜனதிகர் மன்ஞ் 0 1 -1
கட்சி சார்பற்றவர்கள் (சுயேட்சைகள்) 0 2 -2
மொத்தம்l (வாக்களித்தவர்கள் %) 81 81
மூலம்: Electoral Commission of India பரணிடப்பட்டது 2015-01-18 at the வந்தவழி இயந்திரம்

பாசகவானது அனைத்து சார்க்க்ண்ட் மாணவர்கள் சங்கத்தோடு மட்டும் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்தித்தது. சார்க்கண்டின் முதல் முதல்வர் பாபுலால் மாரன்டி தன்வார் (Dhanwar) தொகுதியில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிய லெனிசிசுட்) (விடுதலை) வேட்பாளரிடமும் கிரிதா (Giridih) தொகுதியில் பாசக வேட்பாளரிடமும் தோற்றார். வெளியேறும் முதல்வர் ஏமந்து சோரன் தும்கா & பர்கட் (Dumka and Barhait) என்று இரு தொகுதிகளில் போட்டியிட்டதில் ஒன்றில் மட்டும் வென்றார். இரண்டாவது முதல்வர் அர்சுன் முண்டே கர்சவா (Kharsawa) தொகுதியில் சார்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளரிடம் தோற்றார். சார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் போட்டியிடவில்லை. மாநிலத்தின் நான்காவது முதல்வர் கட்சி சாராத ஒருவரான மது கோடா மஞ்கோ (Majhgao) தொகுதியில் சார்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளரிடம் தோற்றார்.[10] மது கோடாவின் மனைவி கீதா கோடா ஜெய் பாரத் சமதா கட்சி சார்பாக சம்சேத்பூர் தொகுதியில் போட்டியிட்டு சார்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளரை தோற்கடித்து வென்றார். [11]

வாக்குகள் விழுக்காடு

தொகு

3% மேல் பெற்ற கட்சிகளின் விபரம்.

கட்சி வாக்குகள் % பெற்ற வாக்குகள்
பாசக 31.3% 43,34,815
சார்க்கண்ட் முக்தி மோர்சா 20.4% 28,32,727
இந்திய தேசிய காங்கிரசு 10.5% 14,50,661
சார்கண்ட் விகாசு மோர்சா 10 % 13,85,082
கட்சி சாராதவர்கள் (சுயேச்சை) 6.7% 9,28,182
அனைத்து சார்கண்ட் மாணவர்கள் சங்கம் 3.7 % 5,10,277
இராச்டிரிய ஜனதா தளம் 3.1% 4,33,135

முதல்வர்

தொகு

சார்க்கண்ட் மாநிலத்தின் பாசக தலைவராக ரகுபார் தாசை பாசக நாடாளுமன்ற குழு தேர்வு செய்துள்ளது. [12] சம்சேத்பூர் கிழக்கு தொகுதியில் 70,000 வாக்குகள் வேறுபாட்டில் வென்ற ரகுபார் தாசு சார்க்கண்டின் பத்தாவது முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.. சார்க்கண்டின் பழங்குடியினர் அல்லாத முதல் முதல்வர் இவராவார்[13][14] பாசகவும் அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கமும் இத்தேர்தலில் கூட்டணி வைத்திருந்தனர். பாசகவின் 37 உறுப்பினர்களுடன் அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கத்தின் ஐந்து உறுப்பினர்களும் சேர்ந்து இக்கூட்டணி பெரும்பான்மைக்கான 41 இடங்களுக்கு மேல் ஒரு உறுப்பினரை கொண்டுள்ளது. [15]

மேற்கோள்கள்

தொகு
  1. "5-phase polls in J&K, J'khand from Nov 25". dailypioneer. பார்க்கப்பட்ட நாள் 6 திசம்பர் 2014.
  2. "5 phase polls for 4th Assembly to begin on Nov 25". timesofindia. பார்க்கப்பட்ட நாள் 6 திசம்பர் 2014.
  3. "Impressive turnout in J&K and Jharkhand". thehindu. பார்க்கப்பட்ட நாள் 6 திசம்பர் 2014.
  4. "Assembly polls 2nd phase: 71 pc voting in J&K, 65.46 pc in Jharkhand". indianexpress. பார்க்கப்பட்ட நாள் 6 திசம்பர் 2014.
  5. "Polls in the Shadow of Terror: 58% People Vote in Jammu and Kashmir". NDTV. பார்க்கப்பட்ட நாள் 9 திசம்பர் 2014.
  6. "Braving bullets 58% cast ballot in Jammu and Kashmir, 61% voting in Jharkhand in third phase of elections". dna India. பார்க்கப்பட்ட நாள் 9 திசம்பர் 2014.
  7. "Fourth phase: 49% vote cast in J&K, 61% in Jharkhand". deccanherald. பார்க்கப்பட்ட நாள் 14 திசம்பர் 2014.
  8. "Jharkhand records high turnout of 61 per cent in 4th phase of polls". rediff. பார்க்கப்பட்ட நாள் 14 திசம்பர் 2014.
  9. "Jammu and Kashmir Registers Highest Voter Turnout in 25 Years, Jharkhand Breaks Records". ndtv. பார்க்கப்பட்ட நாள் 20 திசம்பர் 2014.
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-25. பார்க்கப்பட்ட நாள் 2015-01-04. {{cite web}}: Unknown parameter |= ignored (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-25. பார்க்கப்பட்ட நாள் 2015-01-04.
  11. http://www.ndtv.com/article/india/jharkhand-polls-gita-koda-wins-from-jagannathpur-13622
  12. "BJP names non-tribal Das to lead Jharkhand". indianexpress. பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2014.
  13. "Raghubar Das sworn in as 10th CM of Jharkhand; Modi, Amit Shah skip oath taking ceremony". IndianExpress. பார்க்கப்பட்ட நாள் 28 திசம்பர் 2014.
  14. "10-Point Guide to Raghubar Das, Jharkhand Chief Minister". NDTV. பார்க்கப்பட்ட நாள் 28 திசம்பர் 2014.
  15. "Jharkhand election results: BJP, AJSU alliance gets clear majority, to form government in Jharkhand". financialexpress. பார்க்கப்பட்ட நாள் 11 சனவரி 2015.

உசாத்துணை

தொகு