முதன்மை பட்டியைத் திறக்கவும்

ரகுபர் தாசு சார்க்கண்ட் மாநிலத்தின் பத்தாவது முதல்வர். சார்க்கண்டில் 2014ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாசக கூட்டணி பெரும்பான்மை பெற்றதை அடுத்து முதல்வராக டிசம்பர் 29, 2014 அன்று பதவியேற்றார். 59 வயதுடைய இவர் பாசக கட்சியை சேர்ந்தவர். 1955, மே 3இல் சாம்செட்பூரின் பலுபசா பகுதியில் பிறந்த இவரின் தந்தை சாமன்ராம் தாய் சோனாவதி தேவி ஆவார்கள்.

ரகுபர் தாசு
ஆறாவது சார்க்கண்டு முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
28 திசம்பர் 2014
முன்னவர் ஹேமந்த் சோரன்
துணை முதலமைச்சர், சார்க்கண்ட்
பதவியில்
30 திசம்பர் 2009 – 29 மே 2010
உறுப்பினர், சார்க்கண்ட் சட்டப்பேரவை
பதவியில்
1995–தற்போதும் (ஐந்து முறை)
தொகுதி சம்சேத்பூர் கிழக்கு
தனிநபர் தகவல்
பிறப்பு 3 மே 1955 (1955-05-03) (அகவை 64)
ஜம்சேத்பூர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
இருப்பிடம் 68-பலுபசா, லைன் நெ.-3, ஜம்சேத்பூர்
சமயம் இந்து சமயம்

சார்க்கண்டின் பழங்குடி இனத்தைச் சாராத முதல் முதல்வர் இவராவார். இவர் சம்சேத்பூர் கிழக்கு தொகுதியில் வெற்றிபெற்றவராவார். அத்தொகுதியில் ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார்.[1] டாடா இரும்பாலையில் கிரேடு 4 தொழிலாளியாக வேலை செய்தவர். 1995இல் முதன்முறை சாம்சாட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார்.

பொருளடக்கம்

இளமையும் கல்வியும்தொகு

இவர் டெலி இனக் குடும்பத்தைச் சார்ந்தவர்.[2] மே 3, 1955இல் எஃகு ஆலையொன்றில் தொழிலாளியாக இருந்த சவான்ராமிற்கு மகனாகப் பிறந்தார். மெட்ரிக் படிப்பை பலுபசா அரிசன உயர்நிலைப் பள்ளியில் முடித்த தாசு, அறிவியல் இளங்கலைப் பட்டப்படிப்பை சாம்செட்பூர் கூட்டுறவு கல்லூரியில் முடித்தார். பின்னர், அதே கல்லூரியில் சட்ட இளங்கலை படிப்பைத் தொடர்ந்தார். படித்த முடித்த பின்னர் டாட்டா ஸ்டீல் நிறுவனத்தில் பணி புரிந்தார்.[3][4]

அரசியல் வாழ்க்கைதொகு

சாம்செட்பூர் கூட்டுறவு கல்லூரியில் அறிவியல் துறை மாணவரான இவர் மாணவர் சங்க தலைவராக இருந்தார். செயபிரகாசு நாராயணன் தலைமையில் 1974இல் மாணவர் இயக்கத்தில் இணைந்தார். அக்கல்லூரியிலேயே பின்பு சட்ட படிப்பு படித்தார். 1977இல் ஜனதா கட்சியில் சேர்ந்தார். பாசக ஆரம்பித்த மூன்று ஆண்டுகள் கழித்து அதில் சேர்ந்தார்.

பாபுலால் மராண்டி அமைச்சரவையிலும் அடுத்து இரு முறை அருச்சுன் முண்டா அமைச்சரவையிலும் அமைச்சர் பொறுப்பு வகித்தார். அப்போது நிதி, தொழில், நகர்ப்புறத் துறைகளுக்கான அமைச்சராக இருந்தார்.[5] இவர் சிபு சோரன் அமைச்சரவையில் 2009-10 காலத்தில் துணைமுதல்வராக பதவி வகித்தார்.[6]

சர்ச்சைதொகு

2010ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் துணை முதல்வராகப் பணியாற்றியபோது, ராஞ்சி கழிவுநீர் திட்டத்தில் சிங்கப்பூர் பன்னாட்டு நிறுவனமான மெய்ன்னார்டிற்கு சாதகமாக விளங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டார்.[4]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரகுபர்_தாசு&oldid=2737721" இருந்து மீள்விக்கப்பட்டது