2015 சேசசமுத்திரம் வன்முறை
விழுப்புரம் வன்முறை என்றும் அழைக்கப்படும் 2015 சேசசமுத்திரம் வன்முறை என்பது தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேசசமுத்திரம் என்ற கிராமத்தில் 2015 ஆகத்து 15 அன்று நடந்த வன்முறையைக் குறிக்கிறது. கோவில் தேர் ஊர்வலம் தொடர்பான தகராறில் 500 ஆதிக்க சாதி கிராம மக்கள் கூட்டம் தலித் குடியிருப்பை தாக்கியது. இ்ந்த வன்முறையின்போது 15 தலித்துகளின் வீடுகள் எரிக்கப்பட்டன மற்றும் 40 தலித்துகள் காயமடைந்தனர்.
பின்னணி
தொகுஅந்தக் கிராமத்தில் 2000 வன்னியர் குடும்பங்களும் 75 தலித் குடும்பங்களும் இருந்தன. [1] [2]
திருவிழா பதற்றம்
தொகுஊரில் வன்னியர்களின் கட்டுப்பாட்டில் உள்ள குறைந்தது 5 கோவில்களில் தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. [3] தலித் சமூகத்தினர் கிராமத்தில் தங்கள் பகுதிக்குள் மாரியம்மன் கோவில் கட்டிக்கொண்டனர். கோயிலுக்கு தேரோட்டம் நடத்த வன்னியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தேரோட்டம் நடத்த நான்கு ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டது. [4] [2]
2015ல் தங்கள் கோயில் தேரை வெளியே எடுத்து ஓட்ட அனுமதிக்காவிட்டால் தாங்கள் புத்த மதத்தை ஏற்றுக்கொள்வதாக தலித்துகள் மிரட்டினர். விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 100 பேரும், தலித் குடியிருப்பைச் சேர்ந்த 5 பேரும் கலந்து கொண்ட அமைதிக் குழுக் கூட்டத்தில் தலித்துகள் தேரோட்டம் நடத்த அனுமதிப்பது உறுதியானது. [1]
கடந்த 2015ம் ஆண்டு தலித் குடியிருப்பில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ஆகத்து 16ஆம் நாள் நடத்த திட்டமிடப்பட்டது. கடந்த 2012ஆம் ஆண்டு கோவில் தேர் கட்டப்பட்டதில் இருந்து, கிராமத்தில் தொடர்ந்து காவல்துறையினர் காவலுக்கு இருந்துள்ளனர். தலித் குடியிருப்ப் முழுக்க திருவிழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்களில் ஒருவரான அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வன்னிய இளைஞர்கள் பக்கத்து ஊரான கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டனர்.[1]
தாக்குதல்கள்
தொகுஆகத்து 15ஆம் நாள் விடுதலை நாளன்று இரவு 8:30 மணிக்கு தாக்குதல் தொடங்கியது. [5] சமாதானப் பேச்சுவார்த்தையின் பின்னரும் வன்னியர்கள் குழுவொன்று கோயில் தேரோட்டத்தைத் தடுப்பதற்காக பாதையில் தோண்டியதாக காவலர்கள் தெரிவித்தனர். கும்பலைத் தடுக்க முயன்றபோது பெண்கள் உட்பட 100 பேர் கொண்ட கும்பல் காவலர்கள் மீது கற்களை வீசத் தொடங்கினர். மேலும் கோயில் தேர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி எரித்தனர். [6] பாமக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இருந்து திரும்பிய வன்னியர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவலர்கள் தெரிவித்தனர். [5] [7]
500 பேர் கொண்ட கும்பல் கம்பி, கற்கள், தடிகள், அரிவாள்கள், பெட்ரோல் நிரப்பப்பட்ட போத்தல்கள்களுடன் தலித் குடியிருப்பை அடைந்தது. [8] அவர்கள் ஒரே நேரத்தில் குடியிருப்பைக் கண்காணிக்க ஏதுவாக கூரைகளில் ஏறினர். அப்பகுதியில் மின்மாற்றியை அடித்து நொறுக்கிய கும்பல், மின் இணைப்பை துண்டித்தது. விளக்குகள் அணைந்ததும், பெட்ரோல் குண்டுகள் மற்றும் கற்களை கூரையில் இருந்து தலித் குடியிருப்புக்குள் வீசினர். மற்றொரு குழுவினர் சேரிக்குள் புகுந்து குழல் விளக்குகள் போன்ற்றவறை வேகமாக அடித்து நொறுக்கினர். பின்னர் அங்கு யாரும் இல்லை என்று தெரிந்த பிறகு குடிசைகளையும் பிற பொருட்களையும் எரித்தனர். தாக்குதல் நடத்தியவர்களைத் தடுக்க முயன்ற காவல்துறையினரைக் கும்பல் மோசமாகத் தாக்கியது. காவலர் குழு தலித்துகளை வயல்களுக்கு அழைத்துச் சென்றனர். கிராமத்தை பாதுகாக்க ஏற்பாடு செய்யும்வரை அங்கேயே இருக்கச் சொன்னார்கள். மேலும் சில காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது. [1] இதில் குறைந்தது 15 வீடுகள் எரிக்கப்பட்டன மற்றும் சுமார் 40 தலித் மக்கள் காயமடைந்தனர். [5] 8 காவல் அதிகாரிகள் மற்றும் 3 கிராம உதவியாளர்களும் காயமடைந்தனர். [9] தலித் குடும்பங்களின் வாகனங்களும் கும்பலால் எரிக்கப்பட்டன. ஆறு ஆடுகள் கொல்லப்பட்டதை காவலர்கள் கண்டுபிடித்தனர். அவர்கள் தாக்கும் போது "அவர்களை எரித்து விடுங்கள்! பறையர்களை விட்டுவிடக் கூடாது" [6] தலித்துகளில் பலரின் பணம், நகைகள், ஆவணங்கள் போன்றவற்றை இழந்தனர்.
தலித் சேரிக்குள் நுழைய தங்கள் பகுதி வழியாகச் சென்ற காவலர்களை வன்னியர்கள் தடுத்ததால், காவல்ரகள் உள்ளே நுழைய பலமுறை வானத்தை நோக்கிச் சுட வேண்டியிருந்தது. தீயை அணைக்க கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்த மழை பெய்தது. [5]
2015 செப்டம்பரில் வன்னியர்களின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது. [10] இது ஒரு விபத்துதான், பழிவாங்கும் செயல் அல்ல என்று உள்ளூர் வட்டாரம் தெரிவித்தது. [11] பின்னர், செப்டம்பர் மாதம் மீண்டும் 2 தலித் வீடுகள் பெட்ரோல் குண்டுகளால் எரிக்கப்பட்டன, பாதிக்கப்பட்டவர்கள் அண்மைய வன்முறை குறித்து ஊடகங்களுக்குப் பேசும்போது தங்கள் வீடுகள் எரிக்கப்பட்டதாகக் கூறினர். [12]
விசாரணைகள்
தொகுஎவிடன்ஸ் என்ற பெயரில் மதுரையில் இயங்கும் மனித உரிமை அமைப்பு, இந்த தாக்குதலில் ஏராளமான தலித் பெண்கள் இழுவு செய்யப்பட்டதாகக் கூறியது. அவர்கள் ஆடைகளை அவிழ்த்துவிட்டு, தங்கள் குழந்தைகளை வீட்டிலேயே விட்டுவிட்டு ஓடச் சொன்னார்கள். இரவு 8.30 மணிக்கு தொடங்கிய கலவரம் மறுநாள் அதிகாலை வரை நீடித்ததாக கூறப்படுகிறது. [6]
காவல்துறை அறிக்கைகள் மற்றும் குடியிருப்போரின் கூற்றுப்படி, 2012 ஊராட்சித் தேர்தலின் போது, தலித் வாக்குகளை ஈர்க்கும் முயற்சியாக தலித் சமூகத்திற்கு கோயில் தேர் வாங்க உதவுவதாக சுப்பிரமணியன் என்ற வன்னியர் உறுதியளித்தார். தலித்துகளின் வாக்குகளைக் கொண்டு வெற்றி பெற்ற பிறகு அவர்களுக்கு தேர் வாங்க உதவினார். வன்னியர்கள் தாங்கள் வசிக்கும் தெருக்கள் வரை தேரை இழுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். [13] இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் முந்தைய 3 ஆண்டுகளாக தேரோட்டத்துக்கு உள்ளூர் அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். தலித்துகளுக்கான அனுமதியை நிரந்தரமாக நிறுத்தி வைக்க முடியாத நிலையில் 2015இல் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார். [2]
வன்முறைக்குப் பிறகு, கலவரத்திற்கு காரணமான சுப்ரமணியனை காவல் துறையினர் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர் . தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் இரு சமூகத்தினருக்கும் இடையே சாதி மோதலை தூண்டி கிராம மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்ததாக உள்ளூர் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தன்னைத் தவிர, 100க்கும் மேற்பட்ட வன்னியர் ஆட்களைத் திரட்டி தாக்குதலுக்குத் தயாராகி வந்ததாக சுப்ரமணி வாக்குமூலம் அளித்தார். [9] [14]
கைதுகள்
தொகுவன்னியர் சாதியைச் சேர்ந்த 18 பெண்கள், 7 சிறுவர்கள் உட்பட 85 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். [1] பின்னர் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். [15]
எதிர்வினைகள்
தொகுபாமக நிறுவனர் எஸ். ராமதாஸ், வன்முறைக்கு காவல்துறையே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். [1]
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வன்முறைக்கு காரணமானவர்கள் மீது வழக்குத் தொடர இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் தனது சட்டப்பூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. [16]
காயமடைந்த 8 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 3 கிராம உதவியாளர்களுக்கு தலா ₹ 50,000 நிதியுதவியை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். [17]
வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 1000-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சங்கராபுரம் திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். [11]
தலித்துகளின் கோயில் தேர், வீடுகள் எரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ, இரு தரப்பினரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். [11]
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கே கிருஷ்ணசாமி வன்முறை ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கோரினார். [18]
மனிதநேய மக்கள் கட்சி இரு சமூகத்தினரும் நல்லிணக்கத்தை இலக்காகக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தது. [18]
மேற்கோள்கள்
தொகு
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 RAJASEKARAN, ILANGOVAN. "Night of terror". Frontline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-27.RAJASEKARAN, ILANGOVAN. "Night of terror". Frontline. Retrieved 2020-12-27.
- ↑ 2.0 2.1 2.2 Sridharan, Janani. "How an attack on Dalits on Independence Day reveals the cynical caste politics in Tamil Nadu". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-27.Sridharan, Janani. "How an attack on Dalits on Independence Day reveals the cynical caste politics in Tamil Nadu". Scroll.in. Retrieved 2020-12-27.
- ↑ "Get Wired 18/8: MoEF Bypassing SC, Special Parl. Session, IndiGo's Order, and More". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2020-12-27.
- ↑ "Dalit houses torched for taking out procession in Tamil Nadu village: How the conflict unfolded - India News, Firstpost". Firstpost. 2015-08-18. பார்க்கப்பட்ட நாள் 2020-12-27.
- ↑ 5.0 5.1 5.2 5.3 "40 Hurt, 15 Houses, Temple Car Torched in Villupuram". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-12-27."40 Hurt, 15 Houses, Temple Car Torched in Villupuram". The New Indian Express. Retrieved 2020-12-27.
- ↑ 6.0 6.1 6.2 "Temple procession row: TN police nab 75 for torching Dalit houses". The Indian Express (in ஆங்கிலம்). 2015-08-18. பார்க்கப்பட்ட நாள் 2020-12-27."Temple procession row: TN police nab 75 for torching Dalit houses". The Indian Express. 2015-08-18. Retrieved 2020-12-27.
- ↑ "Tamil Nadu: Vanniyars attack Dalit procession, torch huts". The Indian Express (in ஆங்கிலம்). 2015-08-17. பார்க்கப்பட்ட நாள் 2020-12-27.
- ↑ "Dalits Too Resorted to Violence: Witness". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-12-27.
- ↑ 9.0 9.1 "Key Accused in Caste Riots Held". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-12-27."Key Accused in Caste Riots Held". The New Indian Express. Retrieved 2020-12-27.
- ↑ "Caste-tempers rise in Villupuram yet again as another house set on fire". The News Minute (in ஆங்கிலம்). 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் 2020-12-27.
- ↑ 11.0 11.1 11.2 "Another Hut Afire; Riot-hit Village Limps to Normalcy". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-12-27."Another Hut Afire; Riot-hit Village Limps to Normalcy". The New Indian Express. Retrieved 2020-12-27.
- ↑ Team, DNA Web (2015-09-02). "Tamil Nadu village tense after 2 Dalit houses burnt". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-27.
- ↑ Kalyanaraman, M. (Aug 25, 2015). "Villupuram riot, a flashpoint in caste build-up | Chennai News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-27.
- ↑ "DMDK politician arrested for Villupuram Dalit colony riots". The News Minute (in ஆங்கிலம்). 2015-09-04. பார்க்கப்பட்ட நாள் 2020-12-27.
- ↑ "Villupuram Retd HM, Ryot Held in Riots Case". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-12-27.
- ↑ kumar, pradeep (2015-08-18). "So much violence for five feet of road". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-27.
- ↑ "Seshasamudram Violence: Jaya Grants Rs 50k Aid to 8 Cops, 3 Village Assistants". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-12-27.
- ↑ 18.0 18.1 "Krishnasamy condemns Sankarapuram violence" (in en-IN). The Hindu. 2015-08-19. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/chennai/krishnasamy-condemns-sankarapuram-violence/article7555760.ece."Krishnasamy condemns Sankarapuram violence". The Hindu. Special Correspondent. 2015-08-19. ISSN 0971-751X. Retrieved 2020-12-27.CS1 maint: others (link)