2016 ஒர்லாண்டோ இரவுக் கூடலகத்தில் துப்பாக்கிச் சூடு
சூன் 12, 2016இல் அமெரிக்க மாநிலம் புளோரிடாவின் ஒர்லாண்டோவில் பல்சு என்று பெயரிடப்பட்ட இரவுக்கூடலகத்தில் பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்; 53 பேர் காயமடைந்தனர். துப்பாக்கியாளர் ஆப்கானித்தானைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமகன் ஓமார் சித்திக் மாத்தீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
2016 ஒர்லாண்டோ இரவுக்கூடலகத் துப்பாக்கிச் சூடு | |
---|---|
2006 ஆம் ஆண்டில் பல்சு இரவுகூடலகம் | |
ஐக்கிய அமெரிக்க மாநிலம் புளோரிடாவில் பல்சு இரவுக் கூடலகத்தின் அமைவிடம் | |
இடம் | 1912 தெற்கு ஓரஞ்சு அவென்யூ, ஒர்லாண்டோ, புளோரிடா, ஐ.அ. |
ஆள்கூறுகள் | |
நாள் | சூன் 12, 2016 2:00 a.m. – 5:00 a.m. கிழக்கு நேர வலயம் (ஒ.ச.நே - 04:00) |
தாக்குதல் வகை | திரள் துப்பாக்கிச் சூடு திரள் கொலை |
இறப்பு(கள்) | ~50[1][2] |
காயமடைந்தோர் | ~53 |
தாக்கியோர் | ஓமார் மிர் சித்திக் மாத்தீன்[3] |
இதுவே அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான திரள் துப்பாக்கிச் சூடு ஆகும்.[4][5]
நிகழ்வு
தொகுசூன் 12, கிழக்கத்திய நேரம் காலை 2:02 மணிக்கு துப்பாக்கிச் சுடும் சப்தம் கேட்டு இரவுக் கூடலகத்திற்கு பாதுகாப்பிற்கிருந்த காவல்துறை அதிகாரி துப்பாக்கியாளரை நோக்கி சுட்டார். பல்சு கூடலக நிர்வாகத்தினர் தங்களது முகநூல் பக்கத்தில் காலை 2:09 மணிக்கு "பல்சிலிருந்து அனைவரும் வெளியேறுங்கள்; ஓடுங்கள்" என்று பதிவு செய்திருந்தனர். துப்பாக்கியாளர் தாக்குதல் நீள் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, மற்றும் அதிகாரிகள் அபாயகரமானது என ஐயுற்ற மற்றுமொரு கருவியையும் வைத்திருந்தார். கூடுதல் காவலர்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டபோது கூடலகத்திற்குள் ஓடிய துப்பாக்கியாளர் அங்கிருந்தவர்களை பிணையாக்கினார்.[6][7]
பிணைவைக்கப்பட்டிருந்தவர்களை விடுவிக்க, பேரம் பேச ஒருவர் நிகழிடத்திற்கு அனுப்பப்பட்டார்.[8]. துப்பாக்கியாளரிடம் வெடிக்கக்கூடிய கருவி இருந்ததாகக் கூறப்படுகின்றது.[9][10] காவல்துறையினரின் வெடிகுண்டு குழுவினர் கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்பை நிகழ்த்தியதாகக் கூறப்படுகின்றது.
காலை 5:00 மணிக்கு சிறப்பு ஆயுத, தந்திரக் குழுவினர் கூடலகத்தினுள் நுழைந்து துப்பாக்கியாளருடன் சண்டையில் ஈடுபட்டனர்.[1] முப்பது பிணையாளர்கள் விடுவிக்கப்பட்டனர்; ஒரு காவல் அதிகாரிக்கு தலையில் குண்டுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[11] ஒர்லாண்டோ காவல்துறை துப்பாக்கியாளர் கொல்லப்பட்டதாக அறிவித்தனர்.[12][13][14] இராய்ட்டர்சு நிறுவனம் துப்பாக்கியாளர் எப்போது கொலைகளை நிகழ்த்தினார் என்பது அறியப்படவில்லை என வெளியிட்டுள்ளது.
தீவினையாளர்
தொகு2016 ஒர்லாண்டோ இரவுக் கூடலகத்தில் துப்பாக்கிச் சூடு | |
---|---|
பிறப்பு | ஒமார் மிர் சித்திக் மாத்தீன் நவம்பர் 16, 1986 |
இறப்பு | சூன் 12, 2016 ஒர்லாண்டோ, ஐ.அ. | (அகவை 29)
தொழில் | பாதுகாப்புக் காவலாளி - ஜி4எஸ் செகூர் சொலுசன்சு[15][16] |
ஒமார் மிர் சித்திக் மாத்தீன் (நவம்பர் 16, 1986 – சூன் 12, 2016)[17] ஒர்லாண்டோவிலிருந்து ஏறத்தாழ 100 மைல்கள் (160 கிலோமீட்டர்கள்) தொலைவில் வாழ்ந்து வந்தார். நியூயார்க் மாநிலத்தில் ஆப்கானிய பெற்றோர்களுக்குப் பிறந்த மாத்தீன், முஸ்லிமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.[18][19] மார்ட்டின் கவுன்ட்டி உயர்நிலைப் பள்ளியில் குறைந்தது ஓராண்டாவது படித்துள்ளதாகவும் இந்தியன் ரிவர் ஸ்டேட் கல்லூரியிலிருந்து இரண்டு பட்டப்படிப்புகளை முடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.[20] புளோரிடா மாநில சட்ட ஒழுங்குத் துறை ஆவணங்களின்படி இவர் மீது எந்த குற்றவியல் வழக்கும் பதியப்படவில்லை.[20] மாத்தீன் புளோரிடாவின் பியர்சு கோட்டை நகரில் வாழ்ந்து வந்தார்; ஆயினும் இவருக்கான அஞ்சல்களை பெற்றோரின் முகவரியில் செயின்ட் லூசியில் பெற்று வந்தார்.[20]
மேற்சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Goldman, Adam; Holley, Peter; Berman, Mark (June 12, 2016). "Orlando nightclub shooting: 50 killed in 'domestic terror incident' at gay club; gunman identified". Washington Post.
- ↑ Barbaba Liston. "Fifty people killed in massacre at Florida gay nightclub: police". Reuters.
- ↑ Miller, Michael E. (June 15, 2016). "'I'm the shooter. It's me': Gunman called local TV station during attack, station says". The Washington Post இம் மூலத்தில் இருந்து June 15, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160615155427/https://www.washingtonpost.com/news/morning-mix/wp/2016/06/15/im-the-shooter-its-me-gunman-called-local-tv-station-during-attack-station-says/.
- ↑ Lois Beckett, Orlando nightclub attack is deadliest US mass shooting in modern history, The Guardian (June 12, 2016).
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 12 June 2016. பார்க்கப்பட்ட நாள் 12 June 2016.
- ↑ "Islamic terrorism tie eyed in Orlando gay bar shooting". பார்க்கப்பட்ட நாள் June 12, 2016.
- ↑ David Caplan & Michael Edison Hayden (June 12, 2016). "At Least 50 Dead in Orlando Gay Club Shooting, Suspect Identified, Officials Say". ABC News.
- ↑ Steph Solis & John Bacon (June 12, 2016). "50 dead in nightclub, worst mass shooting in U.S. history". USA Today. http://www.usatoday.com/story/news/nation/2016/06/12/shooting-orlando-club/85785254/. பார்த்த நாள்: June 12, 2016.
- ↑ Ashley Fantz, Faith Karimi & Eliott C. McLaughlin (June 12, 2016). "Police: 50 killed in Florida nightclub terror attack". CNN. http://edition.cnn.com/2016/06/12/us/orlando-nightclub-shooting/.
- ↑ Zappone, Chris (June 12, 2016). "Orlando, Florida gay nightclub shooting: multiple victims". Sydney Morning Herald. http://www.smh.com.au/world/orlando-florida-nightclub-shooting-multiple-people-being-held-20160612-gphea8.html. பார்த்த நாள்: June 12, 2016.
- ↑ Kate Lyons (June 12, 2016). "Orlando Pulse club attack: gunman behind shooting that killed 50 'named as Omar Mateen'". The Guardian (New York). http://www.theguardian.com/us-news/2016/jun/12/orlando-shooting-nightclub-pulse-gunman. பார்த்த நாள்: June 12, 2016.
- ↑ Caroline McClatchey & Yaroslav Lukov. "Orlando nightclub shooting: Live reporting" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). BBC News. பார்க்கப்பட்ட நாள் June 12, 2016.
- ↑ Lyons, Kate (June 12, 2016). "Orlando nightclub shooting: police confirm 'mass casualties' and gunman dead". The Guardian. http://www.theguardian.com/us-news/2016/jun/12/orlando-shooting-nightclub-pulse-gunman. பார்த்த நாள்: June 12, 2016.
- ↑ "Shooting at gay nightclub in Orlando results in 'mass casualties'". Orlando Sentinel. June 12, 2016.
- ↑ "Orlando nightclub shooting: Omar Mateen was gunman, officials say". CNN. June 12, 2016. http://edition.cnn.com/2016/06/12/us/orlando-shooter-omar-mateen/index.html.
- ↑ "Reports: Omar Mateen of Fort Pierce identified as Pulse Nightclub killer". http://fox28media.com/news/nation-world/police-omar-mir-mateen-of-port-st-lucie-identified-as-alleged-pulse-nightclub-killer.
- ↑ Yuhas, Alan (June 12, 2016). "Florida nightclub shooting: 50 killed and 53 injured in 'act of terror' – rolling updates". தி கார்டியன். https://www.theguardian.com/world/live/2016/jun/12/florida-nightclub-shooting-terrorism-suspect-updates. பார்த்த நாள்: June 12, 2016.
- ↑ 50 killed in shooting at Orlando nightclub, Mayor says - Fox News. June 12, 2016. Retrieved June 12, 2016.
- ↑ "CBS News: Gunman In Orlando Nightclub Shooting That Left Nearly 20 Dead Identified As Omar Mateen". Associated Press / CBS New York. June 12, 2016. http://newyork.cbslocal.com/2016/06/12/orlando-nightclub-shooting/.
- ↑ 20.0 20.1 20.2 Jones, Elliott (June 12, 2016). "Who is Omar Mateen?". Treasure Coast Newspapers. http://www.tcpalm.com/news/crime/st-lucie-county/who-is-omar-mateen-35140633-45ca-1fbf-e053-0100007fbd3e-382613281.html.