2016 பாக்கித்தான் வெள்ளம்

2016 பாக்கித்தான் வெள்ளம் (2016 Pakistan flood) குறைந்தபட்சம் 71 பேரை பலிகொண்டது [1][2]. 34 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் நாள் [3] சனிக்கிழமை இரவு தொடங்கிய அடை மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதே இதற்கு காரணமாகும் [4][5][6]. வடமேற்கு எல்லைப்புற மாகாணமான [7] கைபர் பக்துன்வா மாகாணம் இவ்வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. பருவகாலத்திற்கு முன் கனமழை பொழிவது தெற்கு ஆசியாவில் ஒரு பொதுவான நிகழ்வாகும் [8].

கைபர் பக்துன்வா அரசாங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கத் தொடங்கியது [7]. மோசமான உள்கட்டமைப்புடன் கூடிய கிராமப்புற பகுதிகள் மிகவும் எளிமையாக பாதிக்கக்கூடியவை என்பதால் இந்த வெள்ளப்பெருக்கு நிகழ்வில் சுமார் 150 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன [3][9]. மேலும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட கொடூரமான நிலச்சரிவுகளால் கூடுதலாக 23 பேர் கொல்லப்பட்டனர். இருப்பினும் 5 பேர் உயிர் பிழைத்தனர் மற்றும் மீட்கப்பட்டனர் [10]. மேலும் இப்பகுதியில் உள்ள பாலங்கள் மற்றும் சாலைகள் நிர்மூலமாயின. பயிர் இழப்பும் அதிக அளவில் ஏற்பட்டது [10][11]. இதே ஆண்டு ஆகத்து மாதத்தில் மற்றொரு கனமழைக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் காரணமாக 82 பேர் கொல்லப்பட்டனர், கோரமான பேருந்து விபத்தில் ஏற்பட்ட 27 பேரின் உயிரிழப்பும் மற்றும் நான்கு பேர் காணாமல் போன நிகழ்வும் இதில் அடங்கும் [12].

இடமும் இறப்பும்

தொகு
இடம் இறப்பு
கைபர் பக்துன்வா மாகாணம் 51[3]
கில்கிட்-பால்டிசிசுத்தான் 15
ஆசாத் காசுமீர் 8

மேற்கோள்கள்

தொகு
  1. Reporter, The Newspaper's Staff (6 April 2016). "'Rain death toll rises to 71'".
  2. "Death toll from northern Pakistan rains rises to 71 - The Express Tribune". 5 April 2016.
  3. 3.0 3.1 3.2 "Rescuers race to reach thousands stranded by rains in Pakistan". ReliefWeb (in English). பார்க்கப்பட்ட நாள் 2016-04-25.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Flood killed 45 people in Khyber Pakhtunkhwa". DAWN. 3 April 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2016.
  5. "45 people die in flood in Khyber Pakhtunkhwa". The Express Tribune. 3 April 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2016.
  6. "Official: Rain, Floods Kill 45 in Northwest Pakistan". AP. 3 April 2016 – via The New York Times.
  7. 7.0 7.1 CNN, Sophia Saifi, Zahir Shah and Susannah Cullinane. "Deadly Pakistan floods soak northwest". CNN. பார்க்கப்பட்ட நாள் 2016-04-25. {{cite web}}: |last= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
  8. "Pakistan Flooding Kills at Least 45; Bad Weather Hampering Rescue Efforts". The Weather Channel. பார்க்கப்பட்ட நாள் 2016-04-25.
  9. "Severe flooding leaves 53 dead in Pakistan". ABC News (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-04-25.
  10. 10.0 10.1 "Pakistan flood death toll now 92 after 23 found buried in landslide". UPI. பார்க்கப்பட்ட நாள் 2016-04-25.
  11. "92 killed in rain-triggered accidents in Pakistan - Xinhua | English.news.cn". news.xinhuanet.com. பார்க்கப்பட்ட நாள் 2016-04-25.
  12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-09-11. பார்க்கப்பட்ட நாள் 2018-11-18. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-09-11. பார்க்கப்பட்ட நாள் 2018-11-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2016_பாக்கித்தான்_வெள்ளம்&oldid=3540176" இலிருந்து மீள்விக்கப்பட்டது