2017 பாட்னா படகு விபத்து
பாட்னா படகு விபத்து என்பது இந்தியாவின் பீகார் மாநில தலைநகரான பாட்னாவில் கங்கை நதியில் 14 சனவரி, 2017 அன்று படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைக் குறிப்பதாகும்.
கங்கை நதி | |
நாள் | 14 சனவரி 2017 |
---|---|
நேரம் | 18:00 (இந்திய சீர் நேரம்)[1] |
அமைவிடம் | கங்கை, பாட்னா, பீகார், இந்தியா |
காரணம் | அளவுக்கதிகமான பயணிகள் பயணித்தது |
இறப்புகள் | 25 |
காணாமல் போனோர் | 12 |
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தபட்சம் 25 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் எனக்கருதப்படுகிறது மற்றும் பலர் காணவில்லை.[1][2] படகு கவிழ்ந்த போது படகு கரையை அடைய இருந்தது.[2]
சம்பவம்
தொகுபீகார் மாநிலத்தில் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு மாநில அரசின் சுற்றுலாத் துறை சார்பில் கங்கை நதித் தீவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருவிழாவிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.[2][3] இச்சம்பவம் பாட்னாவின் என்.ஐ.டி கணவாய் பகுதியில் ஏற்பட்டது[4]
காரணம்
தொகுபடகில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றியதே விபத்திற்கான காரணமாக கூறப்படுகிறது.[5]
நிவாரணம்
தொகுஇந்தியப் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF), இறந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ₹ 2 லட்சமும் மற்றும் சம்பவத்தில் தீவிரமாக காயமடைந்தவருக்கு ₹ 50 ஆயிரம் அறிவிக்கப்பட்டது.[1][6] பீகார் அரசு உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ₹ 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Patna Boat Tragedy: 24 Dead, PM Narendra Modi Announces Compensation". NDTV. 15 January 2017. http://www.ndtv.com/india-news/patna-boat-tragedy-number-of-dead-rises-to-24-pm-narendra-modi-announces-compensation-1648960. பார்த்த நாள்: 15 January 2017.
- ↑ 2.0 2.1 2.2 "Accident: At least 21 Drown, Several Missing; Nitish Orders Probe". News 18 India. 14 January 2017. http://www.news18.com/news/india/patna-boat-accident-at-least-15-drown-several-missing-nitish-orders-probe-1335825.html. பார்த்த நாள்: 14 January 2017.
- ↑ 3.0 3.1 "Patna boat capsize incident: Death toll rises to 21, Rs 4 lakh compensation each to be given to kin of deceased persons". News Nation. 14 January 2017. http://www.newsnation.in/cities/patna-news/patna-boat-carrying-40-people-capsizes-in-ganga-article-157768.html. பார்த்த நாள்: 14 January 2017.
- ↑ "Several feared dead in Patna boat accident". The Hindu. 14 January 2017. http://www.thehindu.com/news/national/other-states/Several-feared-dead-in-Patna-boat-accident/article17040264.ece. பார்த்த நாள்: 14 January 2017.
- ↑ http://m.dinamalar.com/detail.php?id=1690548
- ↑ "Bihar boat tragedy: PM Modi announces ex-gratia of Rs 2 lakh". Indian Express. 15 January 2017. http://indianexpress.com/article/india/bihar-boat-tragedy-pm-modi-announces-ex-gratia-of-rs-2-lakh-4475022/. பார்த்த நாள்: 15 January 2017.