2018 ஹுவாலியன் நிலநடுக்கம்

2018 ம் ஆண்டு, 6 பிப்ரவரி அன்று, இடநேரம் 23:50 மணிக்கு, உந்தத்திறன் ஒப்பளவில் 6.4 ஆக பதிவான நிலநடுக்கம் டாய்வானை தாக்கியது.[1] மெர்காலி தீவிர அளவில் வீஐஐ (மிகவும் தீவிரம்) ஆக பதிவான ஹுவாலியன் கடற்கரை எல்லை தான் அதிக பாதிக்கப்பட்டு, அந்நிலநடுக்கத்தின் நடுவமாக அமைந்தது.[2] குறைந்தபட்சம் 12 இறப்புகளும் 277 க்கும் மேற்பட்ட காயமடைந்தோரும் அறிவிக்கப்பட்டுள்ளது.[3]

டாய்வான் மத்திய வானிலை ஆய்வு மையத்தின்படி 2018 ஹுவாலியன் நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு
2018 ஹுவாலியன் நிலநடுக்கத்தை சித்தரிக்கும் வரைபடம்

டாய்வானின் வரலாற்றில் வலிமை வாய்ந்த நிலநடுக்கங்கள் உள்ளன. [4] இத்தீவு, ஃபிலிப்பீன மற்றும் இயூரேசிய கண்டத்தட்டுகளின் நடுவிலான கூட்டுச்சதி மண்டலத்தில் அமைகின்றது. நிலநடுக்கத்தின் இடத்தில், இக்கண்டத்தட்டுகள் ஓராண்டுக்கு 75 மில்லிமீட்டர் என்ற விகிதத்தில் குறுகிப் போகின்றன.

நிலநடுக்கம்

தொகு

எம் 4.6 க்கும் மேற்பட்ட 9 முந்தையநடுக்கங்களைக் கொண்டு அப்பகுதியை பல நாட்களாய் பாத்தித்து, பல நிகழ்வுகளின் வரிசையில் மிகப்பெரிதாக அமைந்தது இந்நிலநடுக்கம். 4 பிப்ரவரி அன்று எம். 4.8 நில அதிர்வுடன் தொடங்கி, அதே நாள் சில கிலோமீட்டர் தொலைதூரத்தில் இன்னொரு எம். 6.1 அதிர்வும் நிகழ்ந்தது.[2] 6 பிப்ரவரி அன்றைய நிலநடுக்கம் சாய்வுச்சீட்டு குழப்பத்தால் நடைபெற்றது.[2]

இந்நிலநடுக்கம், 2016 ல், டாய்வானின் டாய்னான் பகுதியில் நிகழ்ந்து, 117 நபர்களை கொன்ற நிலநடுக்கத்தின் இரண்டாம் நூற்றாண்டு அன்றே நடந்தது. [5]

இந்நிலநடுக்கத்தை பல மறுநிலவதிர்வுகளால் பின்பற்றியது. இவற்றின் மிகப்பெரிது 7 பிப்ரவரி அன்று, ஹுவாலியன் நகரத்திற்கு 19 கிலோமீட்டர் வடகிழக்கு திசையில் இடநேரம் 23:21 க்கு நடைபெற்று, வீஐ (வலுவானது) என்ற அதிகபட்ச தீவிரம் அடைந்த எம். 5.7 நிகழ்வாக அமைந்தது.[6]

சேதம்

தொகு
 
டாய்வானியக் குடியரசுத்தலைவர் சாய் இங்-வென் என்பவர் ஹுவாலியன் நகரத்திலான ஒரு சாய்ந்த கட்டிடத்தை ஆய்வு செய்கின்றார்

ஹுவாலியன் நகரத்தின் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன; இவற்றில் 4 முழுமையாக அழிந்து வீழ்ந்தன. மார்ஷல் தங்கும்விடுதியின் தரைத்தளங்கள் தகர்ந்துப் போனதால், இருவர் உயிரிழந்தனர். தரைத்தளங்களின் அழிவால் தீவிரமாக சரிந்துள்ள யுன் மென் ஸுயீ டீ குடியிருப்பு கட்டிடத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்தும், 8 பிப்ரவரி அன்று, சுமார் 6:30 இடநேர மணி வரை, 7 குடியிருப்பாளர்கள் இன்னும் காணாமல் போயிருக்கின்றனர். இன்னும் கட்டிட சரிவை தவிர்க்க, பாரந்தூக்கிகளால இக்கட்டிடத்தின் ஒரு பக்கத்தில் பெரிய கம்பிகள் வைக்கப்பட்டன.[7] தலைநில சீனாவில் இருந்து வந்த 4 சுற்றுலா பயணிகளைச் சேர்ந்து, 277 பேர் படுகாயமடைந்தனர் எனவும் 12 பேர் உயிரிழந்தனர் எனவும் அதிகாரிகள் அறிவித்தனர்.[3] நிலநடுக்கத்தால் ஏற்படுத்தப்பட்ட சேதத்தினால், பல பாலங்களும் நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டன, மற்றும் நீரின்றி பல இல்லங்கள் கிடந்தன.[5]

சேதமடைந்த கட்டிடங்களில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற நூற்றுக்கணக்கான தீயணைப்புத்துறையினரும் இராணுவ வீரர்களும் அழிவின் அருகில் இருந்தனர். [8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Taiwan earthquake: Deaths confirmed amid rescue effort". BBC. 2018-02-06.
  2. 2.0 2.1 2.2 USGS. "M 6.4 - 22km NNE of Hualian, Taiwan".
  3. 3.0 3.1 "Two Canadians trapped in collapsed building confirmed dead | Society | FOCUS TAIWAN - CNA ENGLISH NEWS" இம் மூலத்தில் இருந்து 2018-02-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180209105205/http://focustaiwan.tw/news/asoc/201802090021.aspx. 
  4. Hume, Tim (7 February 2018). "More than 50 people could be trapped inside this building" (in ஆங்கிலம்). Archived from the original on 7 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 8 February 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. 5.0 5.1 "Aftershocks rock Taiwan after deadly quake" (in en-GB). BBC News. 2018-02-07. http://www.bbc.com/news/world-asia-42970377. 
  6. USGS (2018-02-07). "M 5.7 - 19km NE of Hualian, Taiwan".
  7. "One more body found in toppled building in Hualien; death toll - 9". Focus Taiwan (Central News Agency) இம் மூலத்தில் இருந்து 2018-06-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180630105338/http://focustaiwan.tw/news/asoc/201802080003.aspx. 
  8. Westcott, Ben; Sun, Yazhou; Liu, Kwang-Yin. "Dozens feared trapped in Taiwan after earthquake topples buildings". CNN. https://edition.cnn.com/2018/02/07/asia/taiwan-earthquake-hualien-intl/index.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2018_ஹுவாலியன்_நிலநடுக்கம்&oldid=3968214" இலிருந்து மீள்விக்கப்பட்டது