2022 ஐக்கிய இராச்சியத்தில் குரங்கம்மை பரவல்

2022 ஐக்கிய இராச்சியத்தில் குரங்கம்மை பரவல் (2022 United Kingdom monkeypox outbreak) குரங்கம்மை நோய் பரவியுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடான நைசீரியாவுக்கு பயணம் செய்த பிரித்தானியரிடம் அறிகுறிகள் தேன்பட்டதைத் தொடர்ந்து பரவத் தொடங்கியது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதியன்று நாட்டின் முதலாவது குரங்கம்மை அறிகுறிகள் கண்டறியப்பட்டன. மே மாதம் 4 ஆம் தேதி ஐக்கிய இராச்சியத்திற்கு திரும்பிய தனியர் மூலம் நோய் பரவல் தொடங்கியது. [1]

ஐக்கிய இராச்சியத்தில் குரங்கம்மை நோயின் வருகைக்கான ஆதாரம் தற்போது அறியப்படவில்லை. மே மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து இலண்டன் பகுதியில் சமூகப் பரவல் நடைபெறுவதாக அறியப்படுகிறது. வடகிழக்கு இங்கிலாந்திலும் வைரசின் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த வெடிப்பு குறிப்பாக நங்கை, நம்பி, ஈரர், திருனர் சமூகத்தை பாதித்துள்ளது. [2]

பின்னணி

தொகு

மனித குரங்கம்மை என்பது குரங்கம்மை வைரசால் ஏற்படும் ஒரு வைரசு தொற்று நோயாகும். தற்போது அழிக்கப்பட்ட பெரியம்மை நோயுடன் இது தொடர்புடையது. குரங்கம்மை பொதுவாக பெரியம்மை போன்ற நோய் அறிகுறிகளுடன் காணப்படும், இருப்பினும் பொதுவாக இலேசானது. குரங்கம்மை கடுமையானால் சில வேளைகளில் நிமோனியா காய்ச்சல், கண் பார்வையின்மை, மூளைக் காய்ச்சல் உண்டாகலாம். குரங்கம்மைக்கான இறப்பு விகிதம் உடனடி சிகிச்சையின்றி 10% ஆக இருக்கலாம். [3]

குரங்கம்மை மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் மட்டுமே தொற்றாக இருந்தது. [4] 2022 ஆம் ஆண்டு தொற்றுநோய் வெடிப்பதற்கு முன்பு, ஐக்கிய இராச்சியத்தில் ஏழு குரங்கம்மை நோயாளிகளை மட்டுமே பதிவு செய்தது. [5] இவர்கள் அனைவரும் ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நோயாளிகளாக இருந்தனர். அல்லது இத்தகைய நோயாளிகளின் சிகிச்சையில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களாக இடுந்தனர். இதுபோன்ற முதல் மூன்று நிகழ்வுகள் 2018 ஆம் ஆண்டில் அறியப்பட்டன. [5] அதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டில் மேலும் ஒரு நிகழ்வும் [6] மற்றும் 2021 ஆம் ஆண்டில் மேலும் மூன்று [7] நிகழ்வுகளும் காணப்பட்டன. 2022 ஆம் ஆண்டுக்கு முன்னர் மேற்கத்திய நாட்டில் பதிவுசெய்யப்பட்ட ஒரே பெரிய குரங்கம்மை நோய் வெடிப்பு அமெரிக்காவில் 2003 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.[8] இருப்பினும், இந்த வெடிப்பு சமூக பரவலைக் கொண்டிருக்கவில்லை. [9] [10]

குரங்கம்மை நோய் முதன்மையாக தொற்றுள்ள நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது. [1] 2022 ஆம் ஆண்டு நோய்ப்பரவல் வெடிப்பதற்கு முன்பு, குரங்கம்மை நோய் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றாகக் கருதப்படவில்லை. வெடிப்பின் ஆரம்ப கட்டங்களில் பாலியல் தொடர்பில் உள்ளவர்களுக்கு இடையே வைரசு வேகமாக பரவும் என்றும் உடலுறவு நோய் பரவுவதற்கான மற்றொரு வழியாக இருக்கலாம் என்ற விவாதத்தையும் தூண்டியது. [2]

காலவரிசை

தொகு
 
கைசு மருத்துவமனை, முதலாவது குரங்கம்மை நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இடம்.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் பிற்பகுதியில் நைசீரியாவில் உள்ள லாகோசு மற்றும் டெல்டா மாநிலத்திற்குச் சென்ற பிரித்தானியக் குடியுரிமை நபர் குரங்கம்மை நோய் பரவலுக்கான முதலாவது குறியீட்டு நபராக கருதப்படுகிறார். [1] குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகள் உவரிடம் தென்பட்டன. ஏப்ரல் 29 ஆம் தேதி சொறி உட்பட குரங்கம்மையின் அறிகுறிகள் தோன்றின. மே மாதம் 4 ஆம் தேதி ஐக்கிய இராச்சியத்திற்கு திரும்பிய தனியர் மூலம் நோய் பரவல் தொடங்கியது. அந்த நபர் கைசு மருத்துவமனையில் [5] சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வைரசு சோதனையில் நேர்மறை முடிவு கிடைத்ததால் தனிமைப்படுத்தப்பட்டார்.[1] பாலிமரேசு சங்கிலி எதிர்வினை மூலம் நோயாளியின் மாதிரிகளைச் சோதித்ததில், மேற்கு ஆப்பிரிக்க குரங்கம்மை நோய் வெடிப்பு தெரியவந்துள்ளது, இது இரண்டு அறியப்பட்ட குரங்கம்மை நோய் வகைகளில் குறைவான ஆபத்தானது, இறப்பு விகிதம் சுமார் 1% ஆகும். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Monkeypox - United Kingdom of Great Britain and Northern Ireland". World Health Organization. 16 May 2022. பார்க்கப்பட்ட நாள் 17 May 2022.
  2. 2.0 2.1 Pinkstone, Joe (17 May 2022). "Monkeypox 'spreading in sexual networks'". The Telegraph. பார்க்கப்பட்ட நாள் 17 May 2022.
  3. "Signs and Symptoms Monkeypox". CDC (in அமெரிக்க ஆங்கிலம்). 11 May 2015. Archived from the original on 15 October 2017. பார்க்கப்பட்ட நாள் 17 May 2022.
  4. Bunge, Eveline M.; Hoet, Bernard; Chen, Liddy; Lienert, Florian; Weidenthaler, Heinz; Baer, Lorraine R.; Steffen, Robert (11 February 2022). "The changing epidemiology of human monkeypox—A potential threat? A systematic review" (in en). PLOS Neglected Tropical Diseases 16 (2): e0010141. doi:10.1371/journal.pntd.0010141. பன்னாட்டுத் தர தொடர் எண்:1935-2735. https://journals.plos.org/plosntds/article?id=10.1371/journal.pntd.0010141. 
  5. 5.0 5.1 5.2 "Monkeypox contact tracing extended to Scotland". 14 May 2022. பார்க்கப்பட்ட நாள் 17 May 2022.
  6. "Monkeypox case confirmed in England". GOV.UK (in ஆங்கிலம்). Public Health England. 4 December 2019. பார்க்கப்பட்ட நாள் 18 May 2022.
  7. "Communicable disease threats report, Week 26, 27 June – 3 July 2021" (PDF). European Centre for Disease Prevention and Control. 2 July 2021. பார்க்கப்பட்ட நாள் 18 May 2022.
  8. "குரங்கம்மை பாதிப்பு: அமெரிக்காவில் 200 பேரை தேடிக் கொண்டிருக்கும் அதிகாரிகள்". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2022-05-18.
  9. Linda Spice, “13 Sick After Prairie Dog Contact; Milwaukee Pet Store Employee, Two OthersRemain Hospitalized,” Milwaukee Journal Sentinel, June 6, 2003.
  10. Todd Richmond. Four Get Monkeypox Virus from Prairie Dogs." Associated Press. 6/11/2003.