2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு

2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு (2023 Census of Pakistan), இது பாக்கித்தான் நாட்டின் 7வது கணக்கெடுப்பு ஆகும்.[1][2][3]இக்கணக்கெடுப்பு பாகிஸ்தானி புள்ளியியல் அமைப்பால் 1 மார்ச் 2023 முதல் 31 மே 2023 வரை மேற்கொள்ளப்பட்டது.[4]இக்கணக்கெடுப்பு பாகிஸ்தானில் முதன்முறையாக மின்னணுக் கருவிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.[5][6][7][8]

2023 பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு

← 2017 1 மார்ச் - 30 மே 2023

பொதுத் தகவல்
நாடுபாக்கித்தான்
தலைப்புகள்
கணக்கெடுப்பு தலைப்புகள்
  • மக்கள் தொகை கணக்கெடுப்பு
  • குடும்பங்கள் மற்றும் வாழிட ஏற்பாடுகள்
  • தேசிய இனங்கள்
  • மொழிகள்
  • சமயங்கள்
  • கல்வி
  • பொருளாதாரம்
  • வீட்டு வசதி
ஆணையம்பாகிஸ்தான் புள்ளியியல் அமைப்பு
வலைத்தளம்pbs.gov.pk
முடிவுகள்
மொத்த மக்கள் தொகை24,14,99,431 ( 13.3%)
அதிக மக்கள் தொகை கொண்ட ​மாகாணங்கள்இஸ்லாமாபாத் சேர்த்த பஞ்சாப் (12,76,81,655)

இக்கணக்கெடுப்பின் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பகுதிகளான கில்ஜிட்-பல்டிஸ்தான் மற்றும் ஆசாத் காஷ்மீர் தவிர்த்து பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 24,14,92,917 ஆக கணக்கிடப்பட்டுள்ளது.[9][10]

2017 மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கு இடையில் ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.92% உயர்ந்துள்ளது.1998 மற்றும் 2017 கணக்கெடுப்புகளில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.38% ஆக இருந்தது.

6 மே 2023 அன்று பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 24,18,31,019 ஆக உள்ளது. இது 2017ம் ஆண்டின் கணக்கெடுப்பை விட 28.6 மில்லியன் கூடுதல் ஆகும்.[11]

இஸ்லாமாபாத் உள்ளிட்ட, ஆனால் கில்ஜித் பல்டிஸ்தான் & ஆசாத் காஷ்மீர் பகுதிகள் சேர்க்கப்படாத பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 23,86,59,411 ஆகும். இதுவே 2017ம் ஆண்டின் கணக்கெடுப்பில் 213.2 மில்லியன் ஆக இருந்தது.[12]

23 மே 2023 அன்று பாகிஸ்தான் புள்ளியல் அமைப்பு வெளியிட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இஸ்லாமாபாத் சேர்த்து, ( கில்ஜித் பல்டிஸ்தான் & ஆசாத் காஷ்மீர் சேர்க்காமல்) பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 24,95,66,743 ஆக உள்ளது.

மாகாண வாரியாக மக்கள் தொகை தொகு

கணக்கெடுப்பு முடிவுகள் தொகு

5 ஆகஸ்டு 2023 அன்று பாகிஸ்தான் புள்ளியியல் அமைப்பின் கணக்கெடுப்பு முடிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கியது.[9] கணக்கெடுப்பில் பாகிஸ்தான் மக்கள் தொகை 241.49 மில்லியன் ஆக உயர்ந்து, மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.55% ஆக உயர்ந்து காணப்பட்டது. பாகிஸ்தானின் ஊரகப் பகுதி மக்கள் தொகை 61.18% ஆகவும்; நகர்புற மக்கள் தொகை 38.82% ஆகவும் உள்ளது.[9]

இதனையும் காண்க தொகு

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு

மேற்கோள்கள் தொகு

  1. "7th Population and Housing Census 2022: PBS hosts first sensitisation workshop". 7th Population and Housing Census 2022: PBS hosts first sensitisation workshop. The News International Pakistan. பார்க்கப்பட்ட நாள் 28 December 2021.
  2. "Umar rules out military role in 7th digital census". Umar rules out military role in 7th digital census. The Express Tribune. 23 March 2022. Archived from the original on 13 March 2022. பார்க்கப்பட்ட நாள் 13 March 2022.
  3. "Pakistan's first-ever digitised population census to be completed in August 2022". Pakistan's first-ever digitised population census to be completed in August 2022. Geo News. 23 February 2022. Archived from the original on 13 March 2022. பார்க்கப்பட்ட நாள் 13 March 2022.
  4. "Pakistan's 7th Population Census Postponed for Lack of Technical Equipment". Propakistani (ProPakistani.PK). 12 August 2022 இம் மூலத்தில் இருந்து 12 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220812130725/https://propakistani.pk/2022/08/12/pakistans-7th-population-consensus-postponed-for-lack-of-technical-equipment/. 
  5. Toheed, Muhammed (2023-05-01). "Counting error: Why Pakistan's first-ever digital census may be an exercise in futility". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-12.
  6. "Digital census date extended to April 10". The Express Tribune (in ஆங்கிலம்). 2023-04-05. பார்க்கப்பட்ட நாள் 2023-04-06.
  7. "Census date extended to ensure complete coverage of population". www.geo.tv (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-06.
  8. "Census date extended to ensure complete coverage of population". Daily Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-04-05. பார்க்கப்பட்ட நாள் 2023-04-06.
  9. 9.0 9.1 9.2 Khan, Sanaullah (5 August 2023). "2023 census results ‘unanimously’ approved at CCI meeting" (in en). DAWN. https://www.dawn.com/news/1768537/2023-census-results-unanimously-approved-at-cci-meeting. 
  10. "Population surpasses 240m, new census shows".
  11. "Pakistan Bureau of Statistics". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-06.
  12. "Pakistan Bureau of Statistics". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-12.