2023 பெண்கள் பிரீமியர் லீக் (கிரிக்கெட்)

2023 பெண்கள் பிரீமியர் லீக் அல்லது டாடா டபிள்யூ பி எல் 2023 என்பது பெண்கள் பிரீமியர் லீக் துடுப்பாட்டப் தொடரின் முதல் பதிப்பாகும். ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் 2023 மார்ச் 4 முதல் மார்ச் 26 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

2023 பெண்கள்_பிரீமியர் லீக்
நாட்கள்4 மார்ச் 2023 – 26 மார்ச் 2023
நிர்வாகி(கள்)இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்
துடுப்பாட்ட வடிவம்இருபது ஓவர் கிரிக்கெட்
நடத்துனர்(கள்)இந்தியா
மொத்த பங்கேற்பாளர்கள்5
மொத்த போட்டிகள்22
அலுவல்முறை வலைத்தளம்wplt20.com
2024 →

நவி மும்பையில் உள்ள டி. ஒய். பாட்டில் அரங்கத்தில் மார்ச் 4 அன்று கலைநிகழ்ச்சிகளுடன் துவக்கவிழா நடைபெற்றது.[1]

போட்டி முறை

தொகு

தொடரில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோத வேண்டும். இவற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெரும். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடிக்கும் அணிகளுக்கு இடையே தனியாக ஒரு போட்டி நடைபெறும். அதில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும்.[2]

இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் டி. ஒய். பாட்டில் அரங்கம் மற்றும் பிராபோர்ன் விளையாட்டரங்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Sportstar, Team (2023-03-04). "WPL 2023 LIVE Opening Ceremony: Where to watch, list of performers, start date and time, venue, other details". sportstar.thehindu.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-11.
  2. Team, BS Web (2023-03-04). "WPL 2023: Teams, venues, formats and everything one must know about it". www.business-standard.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-11.