பெண்கள் பிரீமியர் லீக்
பெண்கள் பிரீமியர் லீக் (Women's Premier League WPL) சுருக்கமாக டபிள்யூ பி எல் என்பது இந்தியாவில் வரவிருக்கும் பெண்கள் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும். இது இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்திற்குச் சொந்தமானது மற்றும் அதனால் நிர்வகிக்கப்படுகிறது. [1]
நாடு(கள்) | இந்தியா |
---|---|
நிர்வாகி(கள்) | இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் |
தலைமையகம் | மும்பை |
வடிவம் | இருபது20 |
முதல் பதிப்பு | பெண்கள் பிரீமியர் லீக் 2023 |
போட்டித் தொடர் வடிவம் | தொடர் சுழல்முறைப் போட்டிமற்றும்dபிளே ஆஃப் |
மொத்த அணிகள் | 5 |
தொலைக்காட்சி | ஸ்போர்ட்ஸ்18],ஜியோ சினிமா] |
வலைத்தளம் | Official Website |
ஐந்து அணிகள் பங்கேற்கும் இதன் முதல் பருவம் 2023 இல் மும்பை மற்றும் நவி மும்பையில் மார்ச் 4, 2023 முதல் நடைபெறும் [2][3]
வரலாறு
தொகுபெண்கள் இருபது20 சேலஞ்ச் எனும் பெயரில் ஒரு போட்டி கொண்ட தொடராக 2018ஆம் ஆண்டில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் மூன்று அணிகள் கலந்து கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட தொடராக 2019, 2020 மற்றும் 2022 இல் திட்டமிட்டனர்.
அக்டோபர் 2022 இல், பிசிசிஐ மார்ச், 2023இல் இந்தத் தொடரை ஐந்து அணிகள் கொண்ட தொடராக நடத்தத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்தது. [4] [5] சனவரி 25, 2023இல் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக இதற்கு பெண்கள் பிரீமியர் லீக் என்று பெயரிட்டது. [6]
நிர்வாகம்
தொகுடபிள்யூ பி எல்இன் தலைமையகம் மும்பையின் சர்ச் கேட்டில் உள்ள வான்கடே மைதானத்தில் உள்ள துடுப்பாட்ட மையத்திற்குள் அமைந்துள்ளது. போட்டியின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இதன் விளையாட்டுக் கட்டுப்பாட்டு அமைப்பு பொறுப்பாகும்.
உறுப்பினர்கள்:
- அருண் துமால் - தலைவர்
- ஜெய் ஷா - பிசிசிஐ செயலாளர்
- ஆசிஷ் ஷெலர் - பிசிசிஐ பொருளாளர்
- அவிஷேக் டால்மியா - ஐபிஎல் ஆளும் குழு உறுப்பினர்
- பிரக்யான் ஓஜா - இந்திய துடுப்பாட்ட வீரர்கள் சங்கத்தின் பிரதிநிதி
- சிஎம் சான் - தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியா நியமனம்
உரிமையாளர்கள்
தொகுசனவரி 2023இல் மூடிய ஏலச் செயல்முறையின் மூலம் ₹4,669 கோடி (US$580 மில்லியன்) திரட்டப்பட்டது. [7] [8]
குழு | நகரம் | உரிமையாளர்கள் | தலைமைப் பயிற்சியாளர் |
---|---|---|---|
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | பெங்களூரு, கர்நாடகா | யுனைடெட் ஸ்பிரிட்ஸ் | பென் சாயர் [9] |
டெல்லி தலைநகரங்கள் | புது டெல்லி, டெல்லி | ஜே. எஸ். டபிள்யூ குழு - ஜி. எம். ஆர் குழு | ஜோனாதன் பேட்டி [10] |
குஜராத் ஜெயண்ட்ஸ் | அகமதாபாத், குஜராத் | அதானி குழுமம் | ராக்கேல் ஹெய்ன்ஸ் [11] |
உபி வாரியர்ஸ் | லக்னோ, உத்தரபிரதேசம் | கேப்ரி குளோபல் | ஜான் லெவிஸ் [12] |
மும்பை இந்தியன்ஸ் | மும்பை, மகாராஷ்டிரா | ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் | சார்லட் எட்வர்ட்ஸ் [13] |
சனவரி 30, 2023இல் மிதாலி ராஜ் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசரகராக நியமிக்கப்பட்டார்.[11] ஜுலான் கோஸ்வாமி மும்பை அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார்.[14]
பதிப்புகள்
தொகுஒளிபரப்பு
தொகுசனவரி 2023 இல், வயாகாம் 18, போட்டிக்கான தொலைக்காட்சி மற்றும் எண்ம ஊடக ஒளிபரப்புக்கான உலகளாவிய ஊடக உரிமையைப் பெற்றதாக அறிவித்தது. இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். இது ₹951 கோடி (US$120 மில்லியன்) மதிப்புடையது [15] இதன் ஆரம்பப் பருவம் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ்18 தொலைக்காட்சி அலைவரிசை மற்றும் ஜியோசினிமா செயலி ஆகியவற்றில் ஒளிபரப்பப்படும், இவை இரண்டும் வயாகாம் 18க்குச் சொந்தமானதாகும். [16]
மேலும் பார்க்கவும்
தொகு- இந்திய மகளிர் துடுப்பாட்ட சங்கம் – இந்தியாவில் பெண்கள் துடுப்பாட்டத்தின் முன்னாள் தேசிய ஆளும் குழு (1973–2007)
- இந்தியாவில் விளையாட்டு
சான்றுகள்
தொகு- ↑ "Women's IPL: BCCI earns Rs 4669.99 crore windfall for 5 teams". Rediff. January 25, 2023.
- ↑ "CCI, DY Patil to host WPL from March 4-26; Mumbai-Ahmedabad to play opening game". Cricbuzz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-14.
- ↑ "'Let the journey begin': BCCI garners Rs 4669.99 crore for sale of 5 Women's Premier League teams". The Times of India (in ஆங்கிலம்). 25 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-01-26.
- ↑ "BCCI considers 5 teams, 2 venues, 20 league matches for inaugural WIPL". Cricbuzz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 Dec 2022.
- ↑ "Inaugural Women's IPL likely to be played from March 3 to 26". ESPN Cricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 Dec 2022.
- ↑ "Women's IPL: BCCI earns Rs 4669.99 crore windfall for 5 teams". Rediff. 25 January 2023.
- ↑ "How Women's IPL auction could change sports in India - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-30.
- ↑ "Owners of Mumbai Indians, Delhi Capitals, RCB win bids to own Women's Premier League teams". ESPNcricinfo. 25 January 2023. பார்க்கப்பட்ட நாள் 25 January 2023.
- ↑ "Big Announcement: Meet the Star-Studded Coaching Staff for RCB's Upcoming Cricket Season". sportsghoda. 15 February 2023.
- ↑ "WPL: Jonathan Batty, Lisa Keightley, Hemlata Kala, Biju George in Delhi Capitals coaching staff". ESPNcricinfo. 11 February 2023. பார்க்கப்பட்ட நாள் 11 February 2023.
- ↑ 11.0 11.1 "WPL: Rachael Haynes joins Gujarat Giants as head coach". ESPNcricinfo. 3 February 2023. பார்க்கப்பட்ட நாள் 5 February 2022.
- ↑ "WPL: England national coach Jon Lewis appointed head coach of WPL team UP Warriorz". ESPNcricinfo. 10 February 2023. பார்க்கப்பட்ட நாள் 10 February 2023.
- ↑ Nagraj Gollapudi (2023) Charlotte Edwards to coach Mumbai's WPL team, CricInfo, 5 February 2023. Retrieved 5 February 2023.
- ↑ "WPL 2023: Former India pacer Jhulan Goswami snubs Sourav Ganguly's Delhi Capitals for Mumbai Indians, signs as bowling coach and mentor". Inside Sport. 2 February 2023. பார்க்கப்பட்ட நாள் 2 February 2023.
- ↑ "Women's IPL: Viacom 18 wins media rights, to pay INR 7.09 crore per match". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2023-01-16.
- ↑ "Women’s IPL Media Rights Bagged By Viacom 18 For A Sensational Rs 951 Crore Deal". Latestly. 16 January 2022. https://www.latestly.com/sports/cricket/sports-news-viacom-18-bags-media-rights-for-womens-ipl-for-951-crore-4718970.html.