21ம் நூற்றாண்டுக் கோபுரம்
21ம் நூற்றாண்டுக் கோபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஷேக் சயத் வீதியில் அமைந்துள்ள 55 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். 269 m (883 ft) உயரம் கொண்ட இக் கட்டிடம் உலகின் மூன்றாவது உயரமான வதிவிடக் கட்டிடம் ஆகும்.[1]
21 ஆம் நூற்றாண்டுக் கோபுரம் | |
தகவல் | |
---|---|
அமைவிடம் | துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
நிலை | Complete |
கட்டப்பட்டது | 2001 - 2003 |
பயன்பாடு | வதிவிடம் |
உயரம் | |
Antenna/Spire | 269 மீ (883 அடி) |
கூரை | 240 மீ (787 அடி) |
கடைசித் தளம் | 185.7 மீ (609 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 55 |
உயர்த்தி எண்ணிக்கை | 7 |
நிறுவனங்கள் | |
கட்டிடக்கலைஞர் | டபிள்யூ. எஸ். அட்கின்ஸ் அண்ட் பார்ட்னர்ஸ் |
உரிமையாளர் | எமிரேட்ஸ் விமான நிறுவனம் |
இது 2003 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டபோது உலகின் மிக உயர்ந்த வதிவிடக் கட்டிடமாக இது இருந்தது. பின்னர், ஆஸ்திரேலியாவில், மெல்பர்ன் நகரில், யுரேக்கா கோபுரமும், அதே நாட்டின் குயீன்ஸ்லாந்தில் உள்ள கோல்ட் கோஸ்ட் என்னுமிடத்தில் கியூ 1 கோபுரமும் கட்டி முடிக்கப்பட்டபோது இது மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.
எமிரேட்ஸ் விமான நிறுவன ஊழியர்களுக்கான தங்குமிடமாக விளங்கும் இக் கட்டிடத்தில் கடைசி மாடியில் ஒரு உடற்பயிற்சிக் கூடமும், கூரையில் ஒரு நீச்சல் குளமும் அமைந்துள்ளது. இந்த வானளாவியில் 7 உயர்த்திகள் உள்ளன.
இதிலுள்ள படுக்கை அறைகள் ஒவ்வொன்றும் பெரிய கண்ணாடிச் சாளரங்களைக் கொண்டுள்ளன. இவை ஷேக் சயத் வீதியையோ அரபிக் கடலையோ பார்க்கக் கூடிய வகையில் அமைந்துள்ளன.
கட்டுமானம்
தொகுடபிள்யூ. எஸ்.அட்கின்ஸ் நிறுவனம் இதன் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் வடிவமைப்புக்களை உருவாக்கியது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- PERI GmbH - Core, Slabs and Facade in a 3-Day Cycle பரணிடப்பட்டது 2007-12-10 at the வந்தவழி இயந்திரம்
- SkyscraperPage.com
- Emporis
- Skyscraper city
மேற்கோள்கள்
தொகு- ↑ "21st Century Tower". skyscrapercenter.com. பார்க்கப்பட்ட நாள் 8 March 2017.