மெல்பேர்ண்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் தலைநகரம்
(மெல்பர்ன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மெல்பேர்ண் (Melbourne) ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். மேலும் இது ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும்.[3] 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 3.8 மில்லியன் ஆகும். மெல்பேர்ண் என்பது 9,900 km2 (3,800 sq mi) பரப்பில் விரிந்துள்ள நகரகத் திரட்சிக்கும் இதனுள் அடங்கியுள்ள மெல்பேர்ண் மாநகரப் பகுதிக்கும் பொதுவான பெயராகும்.

மெல்பேர்ண்
Melbourne

விக்டோரியா

மெல்பேர்ண் நகரம்
மக்கள் தொகை: 3,806,092 [1] (2 ஆவது)
அடர்த்தி: 1566/கிமீ² (4,055.9/சதுர மைல்) (2006)[2]
அமைப்பு: ஆகஸ்ட் 30, 1835
பரப்பளவு: 8806 கிமீ² (3,400.0 சது மைல்)
நேர வலயம்:

 • கோடை (பசேநே)

AEST (UTC+10)

AEDT (UTC+11)

அமைவு:
உள்ளூராட்சிகள்: பல (31)
கவுண்டி: பேர்க்
மாநில மாவட்டம்: பல (54)
நடுவண் தொகுதி: பல (23)
சராசரி அதிகபட்ச வெப்பநிலை சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை மழைவீழ்ச்சி
19.8 °செ
68 °
10.2 °செ
50 °
646.9 மிமீ
25.5 அங்
மெல்போர்ன்

மெல்பேர்ண் ஆத்திரேலியா மற்றும் ஆசியா-பசிபிக் மண்டலத்தில் முன்னணி நிதி மையமாக விளங்குகின்றது.[4][5] உலகின் மிகவும் வாழ்வதற்கு பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் 2011 இல் முதலிடம் வகித்தது; 2002 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து முதல் மூன்றிடங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது.[6][7] 2013 ஆம் ஆண்டில் நோர்வேயின் ஒஸ்லோவும் மெல்பேர்ணும் கூட்டாக உலகின் மிகவும் செலவுமிகு நகரமாக மதிப்பிடப்பட்டுள்ளன.[8] இத்தரவரிசைகளில் கல்வி, மனமகிழ்வு, நலம் பேணல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சுற்றுலா, விளையாட்டு ஆகிய துறைகளில் மெல்பேர்ண் உயர்ந்த நிலையில் உள்ளது.[6][9]

பெரிய இயற்கைத் துறைமுகமான பிலிப்புத் துறையில் அமைந்துள்ள மெல்பேர்ணின் நகர மையம், இத்துறையின் வடகோடியில் யர்ரா ஆற்றின் கழிமுகத்தில் அமைந்துள்ளது.[10] பிலிப்புத் துறையின் கிழக்கு, மேற்கு கரையோரமாக நகரமையத்திலிருந்து தெற்கில் நீளும் பெருநகரப் பகுதி டான்டெனோங், மாசெடோன் மலைகளை நோக்கும் உள்நாட்டுப் பகுதிகளுடன் விரிவடைகின்றது. நகர மையம் மெல்பேர்ண் நகரம் எனப்படும் நகராட்சிக்குட்பட்டுள்ளது; பெருநகரப்பகுதியில் 30 இற்கும் அதிகமான நகராட்சிகள் உள்ளன.[11] மெல்பேர்ண் பெருநகரப் பகுதியின் மக்கள்தொகை 4,442,918 ஆகும்.[12]

வான் டீமனின் நிலத்தின் லான்செசுடனிலிருந்து இடம் பெயர்ந்தவர்களால் நியூ சவுத் வேல்ஸ் பகுதியாக ஆகத்து 30, 1835 இல் இந்த நகரம் நிறுவப்பட்டது.[13] 1837இல் பிரித்தானிய குடியேற்றமாக அங்கீகரிக்கப்பட்டது.[13] நியூ சவுத் வேல்சின் ஆளுநர் சேர் ரிச்சர்டு புர்கால் "மெல்பேர்ண்" எனப் பெயரிடப்பட்டது; அந்நாளைய பிரித்தானியப் பிரதமர் மேல்பேர்ணின் இரண்டாவது வைகவுண்டு நினைவாக இப்பெயரைத் தேர்ந்தெடுத்தார்.[13] 1847 ஆம் ஆண்டில் இதனை நகரமாக ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா அறிவித்தார்.[14] மெல்பேர்ண், 1851 இல் புதியதாகப் பிரிக்கப்பட்டு உருவான விக்டோரியா குடியேற்றப்பகுதியின் தலைநகரமாயிற்று.[14] 1850 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட விக்டோரியாவின் தங்க வேட்டையின்போது மெல்பேர்ண் உலகின் மிகப்பெரிய, செல்வமிகு நகரங்களில் ஒன்றாக உருவானது.[15] 1901 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியக் கூட்டமைப்பிற்குப் பின் புதிய ஆத்திரேலியா நாட்டிற்கு 1927 வரை மெல்பேர்ண் தலைநகரமாக விளங்கியது.[16]

மெல்பேர்ண் ஆத்திரேலியாவின் பண்பாட்டுத் தலைநகராகக் கருதப்படுகின்றது.[7] நிகழ்த்து கலைக்கும் காட்சிக் கலைக்கும் பன்னாட்டு மையமாக விளங்குகின்றது. [17][18] ஆத்திரேலியாவின் நடன வடிவங்களின் பிறப்பிடமாக மெல்பேர்ண் கருதப்படுகின்றது: மெல்பேர்ண் ஷபிள் மற்றும் நியூ வோக்.[19][20] ஆத்திரேலியாவின் திரைப்படத்துறையின் பிறப்பிடமும் இதுவே ஆகும்; உலகின் முதல் முழுநீளத் திரைப்படம் இங்குதான் உருவானது.[21][22] ஆத்திரேலிய தற்கால ஓவியக்கலை (எய்டல்பர்கு பாணி என அறியப்படுகின்றது),[23] அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம்,[24] மற்றும் ஆத்திரேலியத் தொலைக்காட்சி[25] ஆகியன தோன்றியவிடமும் மெல்பேர்ண் தான். அண்மைக்காலங்களில் யுனெசுக்கோ இலக்கிய நகரமாகவும் தெருக்கலைகளின் முதன்மை மையமாகவும் விளங்குகின்றது.[18][26] ஆத்திரேலியாவின் பெரிய, பழமைவாயந்த பல பண்பாட்டு அமைப்புக்களான ஆத்திரேலிய அசை பட மையம், மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெலெபேர்ண் அருங்காட்சியகம், மெல்பேர்ண் உயிரியற் பூங்கா, விக்டோரியா தேசியக் கலைகாட்சியகம், யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களமான ரோயல் கண்காட்சிக் கட்டிடம் ஆகியன அமைந்துள்ளன.

பெருநகரப் பகுதிக்கும் மாநிலத்திற்கும் முதன்மை வானூர்தி நிலையமாக விளங்கும் மெல்பேர்ண் வானூர்தி நிலையம் (துல்லாமரைன் வானூர்தி நிலையம் எனவும் அறியப்படுகின்றது), ஆத்திரேலியாவின் இரண்டாவது மிகுந்த போக்குவரத்து மிக்க நிலையமாக உள்ளது. மெல்பேர்ண் துறைமுகம் ஆத்திரேலியாவின் மிகுந்த போக்குவரத்துள்ள கடற்கரைத் துறைமுகமாக விளங்குகின்றது. நகரத்தில் மிக விரிவான போக்குவரத்து அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. முதன்மைத் தொடர்வண்டி நிலையம் பிளைண்டர்சு தெரு நிலையமாகும். வட்டாரப் போக்குவரத்திற்கு சதர்ன் கிராஸ் (முன்பு இசுபென்சர் தெரு நிலையம்) முனையம் உள்ளது; இங்கு பேருந்து முனையமும் உடனமைக்கப்பட்டுளது. மெல்பேர்ணின் அமிழ் தண்டூர்தி அமைப்பு உலகின் மிகப் பெரியதாகும்.

மெல்பேர்ணின் துறைமுகப்பகுதியும் நகரத்தின் வான்தோற்றமும்.

விளையாட்டு

தொகு
 
மெல்போர்ன் இலக்கியப் பாடசாலை மற்றும் இசுக்கொச்சுப் பாடசாலைகளுக்கு இடையில் 1858 ஆம் ஆண்டில் இடம்பெற்ற காற்பந்தாட்ட போட்டி, தாம் வில்சால் மத்தியஸ்தம் செய்யப்படுவதைக் குறிக்கும் மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள சிலை ஒன்று.

1956 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் மெல்பேர்ணில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது (தென்னரைக்கோளத்தில் முதலாவது ஒலிம்பிக் போட்டி இதுவாகும், முன்னர் நடைபெற்ற போட்டிகள் ஐரோப்பாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் நடைபெற்றது).[27] இந்த நகரம், சர்வதேச அளவிலான மிகப்பெரிய மூன்று வருடாந்த போட்டிகளின் தாயகம். மெல்பேர்ண் உலகின் உச்சகட்ட விளையாட்டு நகரம் ஆக 2006, 2008 & 2010 ஆண்டுகளில் இடம்பெற்றது.[28] இந்த நகரத்திலேயே தேசிய விளையாட்டு அருங்காட்சியகம் அமைந்துள்ளது.[29]

மேற்கோள்கள்

தொகு
  1. "Regional Population Growth, Australia, 2006-07". Australian Bureau of Statistics. பார்க்கப்பட்ட நாள் 2008-03-31.
  2. Australian Bureau of Statistics (17 March 2008). "2006 Census Community Profile Series : Melbourne (Urban Centre/Locality)". பார்க்கப்பட்ட நாள் 2008-05-19.
  3. Australian Bureau of Statistics (25 அக்டோபர் 2007). "Melbourne (Urban Centre/Locality)". 2006 Census QuickStats. பார்க்கப்பட்ட நாள் 9 April 2014.
  4. The Global Financial Centres Index 14 (September 2013) பரணிடப்பட்டது 2015-09-04 at the வந்தவழி இயந்திரம். Y/Zen Group. p 15. Retrieved 4 December 2013.
  5. 2012 Global Cities Index and Emerging Cities Outlook. A.T. Kearney. p 2. Retrieved 29 December 2013.
  6. 6.0 6.1 Economist (August 2013). "Global Liveability Ranking and Report August 2013". The Economist. பார்க்கப்பட்ட நாள் 28 August 2013.
  7. 7.0 7.1 Westwood, Matthew (26 November 2013). The Cultural Capital's Perfect 10. The Australian. News Limited. Retrieved 28 December 2013.
  8. George Arnett; Chris Michael (14 February 2014). "The world's most expensive cities". The Guardian. http://www.theguardian.com/cities/datablog/2014/feb/14/most-expensive-cities. பார்த்த நாள்: 23 February 2014. 
  9. Langmaid, Aaron (28 April 2010). We're sport's champion city again. Herald Sun. News Limited. Retrieved 29 December 2013.
  10. "Melbourne CBD". கூகுள் நிலப்படங்கள். பார்க்கப்பட்ட நாள் 11 September 2009.
  11. "Victorian Local Government Directory" (PDF). Department of Planning and Community Development, Government of Victoria. p. 11. Archived from the original (PDF) on 15 செப்டம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 11 September 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. "3218.0 - Regional Population Growth, Australia, 2012-13: ESTIMATED RESIDENT POPULATION, States and Territories - Greater Capital City Statistical Areas (GCCSAs)". Australian Bureau of Statistics. 3 April 2014. பார்க்கப்பட்ட நாள் 8 April 2014. ERP at 30 June 2013.
  13. 13.0 13.1 13.2 "History of the City of Melbourne" (PDF). City of Melbourne. pp. 8–10. பார்க்கப்பட்ட நாள் 11 September 2009.
  14. 14.0 14.1 Lewis, Miles (1995). Melbourne: the city's history and development (2nd ed.). Melbourne: City of Melbourne. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-949624-71-3.
  15. Cervero, Robert B. (1998). The Transit Metropolis: A Global Inquiry. Chicago: Island Press. p. 320. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55963-591-6.
  16. "Commonwealth of Australia Constitution Act" (PDF). Department of the Attorney-General, Government of Australia. p. 45 (Section 125). Archived from the original (PDF) on 11 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 11 September 2009. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  17. King, B. & Jago, L. Melbourne. TTI City Reports 1 (1999). pp 37-51.
  18. 18.0 18.1 Khoury, Matt & Prendergast, Luke (20 October. 2011). 50 reasons Melbourne is the World's most livable city. CNN Travel. Turner Broadcasting Systems. Retrieved 28 December 2013.
  19. Tomazin, Farrah; Donovan, Patrick; Mundell, Meg (12 July 2002). "Dance trance". The Age. Melbourne: Fairfax. பார்க்கப்பட்ட நாள் 16 November 2009.
  20. Gwynne, Michael (1985). Ballroom Sequence Dancing (2nd ed.). Hightstown: Princeton Book Company. p. 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7136-2750-6.
  21. Stratton, David (1990). The Avocado Plantation: Boom and Bust in the Australian Film Industry. Sydney: Pan Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7329-0250-9.
  22. Chichester, Jo. "Return of the Kelly Gang". யுனெஸ்கோ கூரியர் தமிழ் (UN) (2007 No.5). பன்னாட்டுத் தர தொடர் எண்:1993-8616. http://portal.unesco.org/en/ev.php-URL_ID=37899&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201.html. 
  23. Astbury, David Leigh (1982). The Heidelberg School and the rural mythology. Melbourne: Department of Fine Arts, மெல்பேர்ண் பல்கலைக்கழகம். 65984.[தொடர்பிழந்த இணைப்பு]
  24. The Melbourne Book: A History of Now. Published 2003. Hardie Grant Books. South Yarra. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-74066-049-8. pg. 182
  25. Australian Television: the first 24 years. Melbourne: Nelsen/Cinema Papers. 1980. p. 3. {{cite book}}: |access-date= requires |url= (help)
  26. Melbourne - City of Literature. Arts Victoria. Government of Victoria (Australia). Retrieved 24 December 2013.
  27. "1956 மெல்பேர்ன்". athletesedge.info. பார்க்கப்பட்ட நாள் 2 May 2013.
  28. "Melbourne victorious again". Herald Sun. News. 1 April 2008. பார்க்கப்பட்ட நாள் 18 July 2008.
  29. Strong, Geoff (5 March 2008). "Australian sports museum opens at MCG". Age. Melbourne: Fairfax. பார்க்கப்பட்ட நாள் 18 July 2008.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெல்பேர்ண்&oldid=3655738" இலிருந்து மீள்விக்கப்பட்டது