அரச கண்காட்சிக் கட்டிடம்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் மெல்போர்ன் நகரத்தில் உள்ள ஒரு கட்டடம்
(ரோயல் கண்காட்சிக் கட்டிடம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அரச கண்காட்சிக் கட்டிடம் (Royal Exhibition Building) என்பது ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் 1880 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கண்காட்சிக் கட்டிடம் ஆகும். இக்கட்டிடம் 2004 ஆம் ஆண்டில் உலக பாரம்பரியக் களமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டது. இது மெல்பேர்ணின் வர்த்தக மையப் பகுதியின் வட-கிழக்குப் பகுதியில் கார்ல்ட்டன் பூங்கா என்ற என்ற இடத்தில் உள்ளது. 1880 ஆம் ஆண்டில் மெல்பேர்ணில் நடந்த பன்னாட்டுக் கண்காட்சியை நடத்துவதற்காக இக்கட்டிடம் கட்டப்பட்டது. பின்னர் இக்கட்டிடத்தில் 1901 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இங்கு இடம்பெற்றது. 20ம் நூற்றாண்டு காலப்பகுதியில் இதன் சில சிறிய பகுதிகள் தீ, மற்றும் வேறு காரணங்களுக்காக சேதமாகின. ஆனாலும் இதன் முக்கியமான மையக் கட்டிடம் அழிவில் இருந்து காக்கப்பட்டது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
அரச கண்காட்சிக் கட்டிடம்,
மற்றும் கார்ல்ட்டன் பூங்கா
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைபண்பாடு
ஒப்பளவுii
உசாத்துணை1131
UNESCO regionஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு2004 (28வது தொடர்)

1990களில் இக்ட்டிடம் மீளச் சீரமைக்கப்பட்டு, 2004 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் ஆஸ்திரேலியாவின் முதலாவது உலக பாரம்பரியக் களமாக அங்கீகரிக்கப்பட்டது. 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகக் கண்காட்சிக் கட்டிடங்களில் இன்றும் காணப்படும் கடைசிக் இதுவேயாகும். இது மெல்பேர்ண் அருங்காட்சியகத்திற்கு அருகே அமைந்துள்ளது. இன்று இங்கு பல்வேறு சிறியரக கண்காட்சிகள் மற்றும் சிறிய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

வரலாறு

தொகு
 
1880 இல் உலகக் கண்காட்சி இடம்பெற்ற கட்டிடம்.
 
மே 9, 1901 இல் கூடிய ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்
 
கார்ல்ட்டன் பூங்காவின் முகப்பில் இருந்து றோயல் கண்காட்சியகத்தின் தோற்றம்

றோயல் கண்காட்சியகம் "ஜோசப் றீட்" என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இவரே பின்னர் மெல்பேர்ண் நகர மண்டபம், விக்டோரியா மாநில நூலகம் ஆகியவற்றையும் வடிவமைத்தவர் ஆவார். அக்டோபர் 1, 1880 முதல் ஏப்ரல் 30, 1881 வரை இடம்பெற்ற உலகக் கண்காட்சியை நடத்துவதற்கு ஏதுவாக இம்மாளிகை கட்டப்பட்டது. 12,000 சதுர மீட்டர்கள் பரப்பளவுள்ள மண்டபம், மற்றும் பல தற்காலிக இணைப்புகள் ஆகியவற்றை இக்கட்டிடம் கொண்டிருந்தது.

1880 இல் உலகக் கண்காட்சி இடம்பெற்ற பின்னர், 1888 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஐரோப்பியர்கள் குடியேறிய நூற்றாண்டு நினைவுக் கண்காட்சி இங்கு இடம்பெற்றது. இவற்றைவிட பொதுநலவாய ஆஸ்திரேலிய ஜனவரி 2001 இல் அமைக்கப்பட்டதன் பின்னர் அமைக்கப்பட்ட ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் அதிகாரபூர்வமான முதலாவது அமர்வு 9 மே 1901 இல் இங்கு இடம்பெற்றது.

1901-1970'கள்

தொகு

இதன் பின்னர் இக்கட்டிடத்தில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் குறிப்பிடத்தக்கது, 1956 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் ஆகும். கூடைப்பந்தாட்டம், பாரம்தூக்குதல், மற்போர் ஆகிய போட்டிகள் இங்கு இடம்பெற்றன[1]. 1950களில் மெல்பேர்ண் நகரின் ஏனைய கட்டிடங்களைப் போலவே இக்கட்டிடமும் அரச அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படலாயிற்று[2]. இக்கட்டிடத்தில் ஒரு பகுதியில் இயங்கிவந்த மெல்பேர்ண் மீன்காட்சியகம் 1953 ஆம் ஆண்டில் தீக்கிரையானது. 1979 ஆம் ஆண்டில் கட்டிடத்தின் பெரிய மண்டபம் அழிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்களின் பலத்த எதிர்ப்பை அடுத்து இக்கட்டிடம் மேலும் அழிக்கப்படாமல் காக்கப்பட்டது.

1980'கள்-இன்றுவரை

தொகு

1984 ஆம் ஆண்டில் இரண்டாம் எலிசபெத் மகாராணி இங்கு பயணம் மேற்கொண்டிருந்த போது இக்கட்டிடத்திற்கு "றோயல்" (அரச) என்ற அந்தஸ்தை வழங்கினார். இதனையடுத்து 1985 ஆம் ஆண்டின் இறுதியில் இக்கட்டிடத்தின் உட்பகுதிகளை மீளமைக்கும் படி பலர் குரல் கொடுக்க ஆரம்பித்தனர் [3]. அதன் பின்னர் 1998 ஆம் ஆண்டிற்குள் இக்கட்டிடம் ஓரளவு மீள உருவாக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் இக்கட்டிடமும் அதனைச் சூழவுள்ள கார்ல்ட்டன் பூங்காவும் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "றோயல் கண்காட்சிக் கட்டிடம், மெல்பேர்ண்" (PDF). Archived from the original (PDF) on 2011-07-26. பார்க்கப்பட்ட நாள் 2008-12-28.
  2. "Who will save Melbourne from the wrecker's ball?
  3. Global status for our greatest building

வெளி இணைப்புகள்

தொகு