3,3-பிசு(அசிடோமெத்தில்)ஆக்சிடேன்

கரிமப் பலபடி

3,3-பிசு(அசிடோமெத்தில்)ஆக்சிடேன் (3,3-Bis(azidomethyl)oxetane) என்பது C5H8N6O17 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் ஆக்சிடேனாகும். ஆற்றல்மிக்க உந்துபொருள் ஒட்டிகள் மற்றும் நெகிழியாக்கிகளில் இந்த ஆக்சிடேன் ஒருமம் பயன்படுத்தப்படுகிறது.[1][2] பாரம்பரிய பலபடிகளை மேம்படுத்துவதற்கும், அவற்றுக்கு ஆற்றல்மிக்க பண்புகளை வழங்குவதற்கும் இது ஓர் இணைபலபடியாகப் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.[3][1]

3,3-பிசு(அசிடோமெத்தில்)ஆக்சிடேன்
3,3-Bis(azidomethyl)oxetane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3,3-பிசு(அசிடோமெத்தில்)ஆக்சிடேன்
இனங்காட்டிகள்
17607-20-4
Abbreviations பிஅமெஆ
InChI
  • InChI=1S/C5H8N6O/c6-10-8-1-5(2-9-11-7)3-12-4-5/h1-4H2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12725338
SMILES
  • C1C(CO1)(CN=[N+]=[N-])CN=[N+]=[N-]
பண்புகள்
C5H8N6O17
வாய்ப்பாட்டு எடை 424.14 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

3,3-பிசு (குளோரோமெத்தில்) ஆக்சிடேனுடன் காரக் கரைசலில் கரைக்கப்பட்ட சோடியம் அசைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து 3,3-பிசு(அசிடோமெத்தில்)ஆக்சிடேன் தயாரிக்கப்படுகிறது. இவ்வினையில் டெட்ராபியூட்டைல் அமோனியம் புரோமைடு நிலை மாற்ற வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[1]

போரான் முப்புளோரைடு ஈரெத்தில் ஈத்தரேட் மற்றும் மும்மெத்தில்புரோப்பேனில் கரைக்கப்பட்ட 3,3-பிசு(அசிடோமெத்தில்)ஆக்சிடேன் ஆகியவற்றைக் கலந்து பலபட்டி 3,3-பிசு(அசிடோமெத்தில்)ஆக்சிடேன் சேர்மத்தை உருவாக்கலாம். இச்சேர்மத்தை பலபடியாக்கல் வினைக்கு உட்படுத்தினால் ஆக்சிடேன் குழு அழியும். ஆனால் அசைடு குழு அப்படியே இருக்கும்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Pisharath, Sreekumar; Ang, How Ghee (2007). "Synthesis and thermal decomposition of GAP–Poly(BAMO) copolymer" (in en). Polymer Degradation and Stability 92 (7): 1365–1377. doi:10.1016/j.polymdegradstab.2007.03.016. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0141391007000900. 
  2. Lee, Young Joo; Tang, Ching-Jen; Kudva, Gautam; Litzinger, Thomas A. (1998). "Thermal Decomposition of 3,3'-Bis-Azidomethyl-Oxetane" (in en). Journal of Propulsion and Power 14 (1): 37–44. doi:10.2514/2.5263. பன்னாட்டுத் தர தொடர் எண்:0748-4658. https://arc.aiaa.org/doi/10.2514/2.5263. 
  3. Zhang, Chi; Li, Jie; Luo, Yunjun; Yan, Shi (2016-01-02). "Synthesis and thermal decomposition of 3,3’-bis-azidomethyl oxetane-3-azidomethyl-3’-methyl oxetane random copolymer" (in en). Soft Materials 14 (1): 9–14. doi:10.1080/1539445X.2015.1089904. பன்னாட்டுத் தர தொடர் எண்:1539-445X. http://www.tandfonline.com/doi/full/10.1080/1539445X.2015.1089904. 
  4. Nair, J. K.; Satpute, R. S.; Polke, B. G.; Mukundan, T.; Asthana, S. N.; Singh, Haridwar (2002-04-01). "Synthesis and Characterisation of Bis-azido Methyl Oxetane and its Polymer and Copolymer with Tetrahydrofuran". Defence Science Journal 52 (2): 147–156. doi:10.14429/dsj.52.2159. http://publications.drdo.gov.in/ojs/index.php/dsj/article/view/2159. பார்த்த நாள்: 2022-03-22.