3,4,5-டிரைமெத்தாக்சிபென்சால்டிகைடு

3,4,5-டிரைமெத்தாக்சிபென்சால்டிகைடு (3,4,5-Trimethoxybenzaldehyde) என்பது C10H12O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இவ்வகையான சேர்மங்களுக்குள் இது முப்பதிலீடு செய்யப்பட்ட அரோமாட்டிக் ஆல்டிகைடு என்று வகைப்படுத்தப்படுகிறது.

3,4,5-டிரைமெத்தாக்சிபென்சால்டிகைடு
3,4,5- டிரைமெத்தாக்சிபென்சீன்கார்பால்டிகைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3,4,5- டிரைமெத்தாக்சிபென்சீன்கார்பால்டிகைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
3,4,5-டிரைமெத்தாக்சிபென்சீன்கார்பால்டிகைடு
வேறு பெயர்கள்
3,4,5-டிரைமெத்தாக்சி-பென்சால்டிகைடு
இனங்காட்டிகள்
86-81-7 Y
Beilstein Reference
395163
ChemSpider 6597 Y
EC number 201-701-6
InChI
  • InChI=1S/C10H12O4/c1-12-8-4-7(6-11)5-9(13-2)10(8)14-3/h4-6H,1-3H3 Y
    Key: OPHQOIGEOHXOGX-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/C10H12O4/c1-12-8-4-7(6-11)5-9(13-2)10(8)14-3/h4-6H,1-3H3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6858
  • COC1=CC(=CC(=C1OC)OC)C=O
பண்புகள்
C10H12O4
வாய்ப்பாட்டு எடை 196.20 g·mol−1
தோற்றம் இளமஞ்சள் நிறத் திண்ம்ம்
அடர்த்தி 1.367 கி/செ.மீ3
உருகுநிலை 73 °C (163 °F; 346 K)
கொதிநிலை 337.6 °C (639.7 °F; 610.8 K)
சிறிதளவு கரையும்
கரைதிறன் மெத்தனால்: 0.1 கி/மி.லி
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS at Sigma Aldrich
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பயன்கள்

தொகு

சின்டிரையமைடு, ரோல்டமைடு, டிரைமெத்தோகுயினால் (அகாடிரிட்டோகுயினால்), டிரைமசோசின், உளமாற்றி பீனெத்திலமீன்கள் டிரைமெத்தோபிரிம்[1][2] போன்ற சில மருந்துவகைப் பொருள்கள் தயாரிப்பதில் 3,4,5-டிரைமெத்தாக்சிபென்சால்டிகைடு ஓர் இடைநிலைப் பொருளாகப் பயன்படுகிறது[3][4][5].

தயாரிப்பு

தொகு

தொழிற்சாலை முறை

தொகு

புரோமினைப் பயன்படுத்தி பாரா-கிரெசாலை அரோமாட்டிக் பதிலீட்டு வினைக்கு உட்படுத்தியும் தொடர்ந்து சோடியம் மெத்தாக்சைடு சேர்த்து அணுக்கருகவர் பதிலீட்டு வினைக்கு உட்படுத்தியும் தொழில்முறையாக 3,4,5-டிரைமெத்தாக்சிபென்சால்டிகைடு தயாரிக்கப்படுகிறது[1]. மெத்தில் குழு ஓர் ஆல்டிகைடு குழுவாக ஆக்சிசனேற்றம் அடைவது பல்வேறு செயற்கை வழிமுறைகள் மூலமாக அடைய இயலும்.

ஆய்வக முறை

தொகு

வனில்லின் சேர்மத்திலிருந்து தேவையான அளவுக்கு ஆய்வகத்தில் தயாரித்துக் கொள்ளப்படுகிறது[6]. அல்லது இயுடெசுமிக் அமிலத்தின் அசைல் குளோரைடிலிருந்து ரோசினமண்டு ஒடுக்க வினை வழியாக தயாரிக்கப்படுகிறது[7].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Asim Kumar Mukhopadhyay (2004). Industrial Chemical Cresols and Downstream Derivatives. New York: CRC Press. p. 81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780203997413. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  2. Stenbuck, P.; Hood, H. M.; 1962, U.S. patent 30,49,544
  3. Kindler, Karl; Peschke, Wilhelm (1932). "Über neue und über verbesserte Wege zum Aufbau von pharmakologisch wichtigen Aminen VI. Über Synthesen des Meskalins". Archiv der Pharmazie 270 (7): 410–413. doi:10.1002/ardp.19322700709. 
  4. Benington, Fred; Morin, Richard (1951). "An Improved Synthesis of Mescaline". Journal of the American Chemical Society 73 (3): 1353–1353. doi:10.1021/ja01147a505. 
  5. Shulgin, Alexander; Shulgin, Ann (1991). PiHKAL: A Chemical Love Story. Lafayette, CA: Transform Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780963009609.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  6. Manchanda Percy; Belicaa, Peter; Wonga, Harry (1990). "Synthesis of 3,4,5-Trimethoxybenzaldehyde". Synthetic Communications: An International Journal for Rapid Communication of Synthetic Organic Chemistry 20 (17): 2659–2666. doi:10.1080/00397919008051474. 
  7. Rachlin, A.; Gurien, H.; Wagner, D. (1971). "Aldehydes from Acid Chlorides by modified Rosenmund Reduction: 3,4,5-Trimethoxybenzaldehyde". Organic Syntheses 51: 8. doi:10.15227/orgsyn.051.0008.