3-ஐதராக்சி-2-நாப்தாயிக் அமிலம்
3-ஐதராக்சி-2-நாப்தாயிக் அமிலம் (3-Hydroxy-2-naphthoic acid) C10H6(OH)(CO2H) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிமச் சேர்மமாகும். 2-நாப்தாலில் இருந்து வழிப்பெறுதியாகப் பெறப்படும் பல்வேறு கார்பாக்சிலிக் அமிலங்களில் இதுவும் ஒன்றாகும். அசோ சாயங்கள் மற்றும் நிறமிகளைத் தயாரிக்க உதவும் பொதுவான முன்னோடிச் சேர்மமாக 3-ஐதராக்சி-2-நாப்தாயிக் அமிலம் பயன்படுகிறது. 2-நாப்தாலை கோல்பே- இசிமிட் வினை வழியாக கார்பாக்சிலேற்றம் செய்து இது தயாரிக்கப்படுகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-ஐதராக்சிநாப்தலீன்-2-கார்பாக்சிலிக் அமிலம் | |
வேறு பெயர்கள்
3-ஐதராக்சி-2-நாப்தாயிக் அமிலம்
β-ஐதராக்சிநாப்தாயிக் அமிலம் | |
இனங்காட்டிகள் | |
92-70-6 | |
Beilstein Reference
|
744100 |
ChEBI | CHEBI:80383 |
ChEMBL | ChEMBLCHEMBL229301 |
ChemSpider | 6837 |
EC number | 202-180-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C16212 |
பப்கெம் | 7104 |
வே.ந.வி.ப எண் | QL1755000 |
| |
UNII | C7S9D784HX |
பண்புகள் | |
C11H8O3 | |
வாய்ப்பாட்டு எடை | 188.18 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிறத் திண்மம் |
உருகுநிலை | 222 °C (432 °F; 495 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H312, H317, H319, H361, H371, H402, H412 | |
P201, P202, P260, P261, P264, P270, P272, P273, P280, P281, P301+312, P302+352, P305+351+338, P308+313 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நாப்தால் ஏ.எசு போன்ற பல அனிலைடுகள் தயாரிப்பில் 3-ஐதராக்சி-2-நாப்தாயிக் அமிலம் ஒரு முன்னோடிச் சேர்மமாகச் செயல்படுகிறது. இத்தகைய அனிலைடுகள் ஈரசோனியம் உப்புகளுடன் தீவிரமாக வினையில் ஈடுபட்டு ஆழ்ந்த நிற அசோ சேர்மங்களைக் கொடுக்கின்றன. இதேபோல 3-ஐதராக்சி-2-நாப்தாயிக் அமில அசோ பிணைப்பு வினைகள் பல சாயங்களைத் தருகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Gerald Booth (2005). "Naphthalene Derivatives". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Wiley-VCH. DOI:10.1002/14356007.a17_009. .