4,4’-தயோயிருவனிலின்
4,4’-தயோயிருவனிலின் (4,4'-Thiodianiline) என்பது C12H12N2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக் அமீனாகக் கருதப்படும் இச்சேர்மம் மனிதர்களில் புற்றுநோயை உருவாக்கும் தன்மையைக் கொண்ட்தென ஊகிக்கப்பட்டுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
4-(4-அமினோபீனைல்)சல்பானில்லனிலின்
| |
வேறு பெயர்கள்
பா,பா& முதன்மை;-தயோயிருவனிலின்; பிசு(4-அமினோபீனைல்) சல்பைடு; 4,4'-தயோவனிலின்
| |
இனங்காட்டிகள் | |
139-65-1 | |
ChEBI | CHEBI:82374 |
ChEMBL | ChEMBL348856 |
ChemSpider | 8435 |
EC number | 205-370-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C19303 |
பப்கெம் | 8765 |
| |
UNII | 6GGU990BQF |
பண்புகள் | |
C12H12N2S | |
வாய்ப்பாட்டு எடை | 216.3 கி/மோல் |
தோற்றம் | பழுப்பு-பழுப்பான ஊதா தூள் அல்லது ஊசிகள் |
அடர்த்தி | 1.26 கி/செ.மீ3 |
உருகுநிலை | 105 முதல் 107 °C (221 முதல் 225 °F; 378 முதல் 380 K) |
கொதிநிலை | 464.8 °C (868.6 °F; 738.0 K) @ 760மிமீபாதரசம் |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 234.9 °C (454.8 °F; 508.0 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பண்புகள்
தொகு4,4’-தயோயிருவனிலின் எரியக்கூடியது அல்ல. ஆனால் வெப்பமடையும் போது இது சிதைவடைந்து எரிச்சலூட்டும் மற்றும் நச்சுப் புகையை உருவாக்கும். நுண்ணுயிர்க்கொல்லியான தாப்சோன் இதன் ஒப்புமைச் சேர்மமாகும்.
தயாரிப்பு
தொகுஅதிகப்படியான அனிலினில் கந்தகம் பலமணி நேரம் கொதிக்கவைக்கப்படும்போது 4,4’-தயோயிருவனிலினின் மூன்று மாற்றியன்களான (1,1'; 1,4; 4,4') தயோயிருவனிலின்கள் உற்பத்தியாகின்றன. [1] 1871 ஆம் ஆண்டில் மெர்சு மற்றும் வீத் மற்றும் 1894 ஆம் ஆண்டில் கே.ஏ. ஆஃப்மான் ஆகியோர் இதே விளைபொருள்கள் மற்றும் இவற்றுடன் உடன் நிகழ்வு விளைபொருள்களை தயாரித்தனர் என்று அதே செய்தி இதழ் ஆவணப்படுத்தியுள்ளது. வினை கலவையுடன் ஈய ஆக்சைடு சேர்க்கும்போது 4,4’-தயோயிருவனிலின் உற்பத்தியை அதிகரிக்க முட்டியுமென நீட்சுகி மற்றும் போத்தாப் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. [2]
தற்போது அமெரிக்காவில் 4,4’-தயோயிருவனிலின் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
பயன்
தொகுசில வகையான நிறம் நிறுத்துச் சாயங்கள் தயாரிப்பில் 4,4’-தயோயிருவனிலின் ஒரு வேதியியல் இடைநிலையாகப் பங்கேற்கிறது. தாப்சோன் என்ற மருந்து தயாரிப்பில் இது பெரிதும் பயனாகிறது.
நச்சுத்தன்மை
தொகு4,4’-தயோயிருவனிலின் சால்மோனெல்லா வகை பாக்டீரியாக்களில் சடுதிமாற்ற பிறழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வக எலிகள் மற்றும் சுண்டெலிகளில் கட்டிகளை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Hodgson, Herbert Henry (January 1924). "Direct sulphuration of aniline". J. Chem. Soc., Trans. 1924 (125): 1855–1858. doi:10.1039/CT9242501855. http://pubs.rsc.org/is/content/articlelanding/1924/ct/ct9242501855#!divAbstract. பார்த்த நாள்: 11 February 2016.
- ↑ Nietzki, R; Bothof, Heinrich (1894). "The Understanding of Thioanilines". Reports of the German Chemical Society 27 (3): 3261–3263. doi:10.1002/cber.189402703119.