4-அமினோபீனால்

வேதிச் சேர்மம்

4-அமினோபீனால் (4-Aminophenol) என்பது H2NC6H4OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை பாரா-அமினோபீனால் என்றும் அழைக்கலாம். குறிப்பாக வெண்மை நிறத்தில் தூளாக இது காணப்படுகிறது. கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படத் தொழிலில் உருவேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. ரோடினால் என்ற வர்த்தகப் பெயரில் சந்தைப்படுத்தப்பட்டது.

4-அமினோபீனால்
Skeletal formula of 4-aminophenol
Space-filling model of the 4-aminophenol molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-அமினோபீனால்[1]
வேறு பெயர்கள்
பாரா-அமினோபீனால்
இனங்காட்டிகள்
123-30-8 Y
Beilstein Reference
385836
ChEBI CHEBI:17602 Y
ChEMBL ChEMBL1142 Y
ChemSpider 392 Y
EC number 204-616-2
Gmelin Reference
2926
InChI
  • InChI=1S/C6H7NO/c7-5-1-3-6(8)4-2-5/h1-4,8H,7H2 Y
    Key: PLIKAWJENQZMHA-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H7NO/c7-5-1-3-6(8)4-2-5/h1-4,8H,7H2
    Key: PLIKAWJENQZMHA-UHFFFAOYAD
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C02372 Y
ம.பா.த அமினோபீனால்கள்
பப்கெம் 403
  • Oc1ccc(N)cc1
  • c1cc(ccc1N)O
UNII R7P8FRP05V Y
UN number 2512
பண்புகள்
C6H7NO
வாய்ப்பாட்டு எடை 109.13 g·mol−1
தோற்றம் நிறமற்றது ,முதல் செம்மஞ்சள் வரை நிறங்கொண்ட படிகங்கள்
அடர்த்தி 1.13 கிராம்/செ.மீ3
உருகுநிலை 187.5 °C (369.5 °F; 460.6 K)
கொதிநிலை 284 °C (543 °F; 557 K)
1.5 கிராம்/100 மி.லி
மட. P 0.04
காடித்தன்மை எண் (pKa)
  • 5.48 (அமினோ; H2O)
  • 10.30 (பீனால்; H2O)[2]
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-190.6 கிலோ.யூல்/மோல்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H332, H341, H400, H410
P201, P202, P261, P264, P270, P271, P273, P281, P301+312, P304+312, P304+340, P308+313, P312, P330
தீப்பற்றும் வெப்பநிலை 195 °C (383 °F; 468 K) (cc)
Lethal dose or concentration (LD, LC):
671 மி.கி/கி.கி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

4-அமினோபீனால் ஒரு நீர் விரும்பியாகும். ஆல்ககால்களில் இது கரைகிறது. சூடான நீரிலிருந்து இதை மறுபடிகமாக்கலாம். ஒரு காரத்தின் முன்னிலையில் இது விரைவாக ஆக்சிசனேற்றமடைகிறது. மெத்திலேற்ற வழிப்பெறுதிகளான என்– அமினோபீனாலும் என்–என்– அமினோபீனாலும் வர்த்தக முக்கியத்துவம் கொண்டவைகளாகும்.

அமீனோபீனாலின் மூலக்கூற்று வாய்ப்பாடும் வேறுபட்ட கட்டமைப்பும் கொண்ட மூன்று மாற்றியன்களில் இச்சேர்மமும் ஒரு வகை மாற்றியனாகும். 2-அமினோபீனால், 3-அமினோபீனால் என்பவை மற்ற இரண்டு மாற்றியன்களாகும்.

தயாரிப்பு

தொகு

பீனாலை நைட்ரோயேற்றம் செய்து தொடர்ந்து இரும்புடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி 4-அமினோபீனால் தயாரிக்கப்படுகிறது. மாற்றாக நைட்ரோபென்சீனை பகுதி ஐதரசனேற்றம் செய்து பீனைலைதராக்சிலமீன் உருவாக்கப்பட்டு அது மறுசீராக்கம் அடைந்து 4-அமினோபீனால் கிடைக்கிறது. :[3]

C6H5NO2 + 2 H2 → C6H5NHOH + H2O
C6H5NHOH → HOC6H4NH2

நைட்ரோபென்சீனிலிருந்து

தொகு

நைட்ரோபென்சீனை மின்பகுமுறை மாற்றம் வழியாக பீனைலைதராக்சிலமீனாக மாற்றினால் அது தன்னிச்சையாக 4-அமினோபீனாலாக மறு சீரமைப்பு அடைகிறது. [4]

பயன்கள்

தொகு

கரிம வேதியியலில் 4-அமினோபீனால் ஒரு கட்டுறுப்புத் தொகுதியாகப் பயன்படுகிறது. தொழிற்துறையில் பாராசிட்டமால் மருந்து தயாரிக்கையில் இறுதி இடைநிலை விளைபொருளாக இது கிடைக்கிறது. இதனுடன் அசிட்டிக் நீரிலியைச் சேர்த்து சூடாக்கினால் பாராசிட்டமால் உருவாகிறது. :[5][6][7]

 

மேற்கோள்கள்

தொகு
  1. Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 690. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
  2. Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. pp. 5–89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1498754286.
  3. Mitchell, S.C. & Waring, R.H. "Aminophenols." In Ullmann’s Encyclopedia of Industrial Chemistry; 2002 Wiley-VCH, எஆசு:10.1002/14356007.a02_099
  4. Polat, K.; Aksu, M.L.; Pekel, A.T. (2002), "Electroreduction of nitrobenzene to p-aminophenol using voltammetric and semipilot scale preparative electrolysis techniques", Journal of Applied Electrochemistry, Kluwer Academic Publishers, 32: 217–223, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1023/A:1014725116051
  5. Ellis, Frank (2002). Paracetamol: a curriculum resource. Cambridge: Royal Society of Chemistry. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85404-375-6.
  6. Anthony S. Travis (2007). "Manufacture and uses of the anilines: A vast array of processes and products". In Zvi Rappoport (ed.). The chemistry of Anilines Part 1. Wiley. p. 764. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-87171-3.
  7. Elmar Friderichs; Thomas Christoph; Helmut Buschmann (2005), "Analgesics and Antipyretics", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a02_269.pub2
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-அமினோபீனால்&oldid=3581611" இலிருந்து மீள்விக்கப்பட்டது