4-அமினோ-3-மெத்தில்-1-நாப்தால்

வேதிச் சேர்மம்

4-அமினோ-3-மெத்தில்-1-நாப்தால் (4-amino-3-methyl-1-naphthol) என்பது C11H11NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். செயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஒரு மெனாடையோன் நேரிணை சேர்மமாக இது கருதப்படுகிறது. 4-அமினோ-3-மெத்தில்-1-நாப்தாலை வைட்டமின் கே7 என்றும் அழைக்கிறார்கள்.[1] 1950 ஆம் ஆண்டில் வைட்டமின் கே செயல்பாட்டைக் கொண்ட ஒரு சேர்மமாக இது அங்கீகரிக்கப்பட்டபோது பெயரிடப்பட்டது.[2][3]

4-அமினோ-3-மெத்தில்-1-நாப்தால்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-அமினோ-3-மெத்தில்-1-நாப்தால்
இனங்காட்டிகள்
83-69-2
ChemSpider 59895
EC number 201-495-8
InChI
  • InChI=1S/C11H11NO/c1-7-6-10(13)8-4-2-3-5-9(8)11(7)12/h2-6,13H,12H2,1H3
    Key: YJRCNAAPGQBVFS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 66524
  • CC1=C(C2=CC=CC=C2C(=C1)O)N
UNII HEE4JPA7DF
பண்புகள்
C11H11NO
வாய்ப்பாட்டு எடை 173.22 g·mol−1
தோற்றம் படிகம் (HCl)[1]
உருகுநிலை 270 °செல்சியசு [1] HCl சிதையும்
HCl கரையும்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

2-மெத்தில்நாப்தலீன் அல்லது மெனாடியோனிலிருந்து 4-அமினோ-3-மெத்தில்-1-நாப்தால் தயாரிக்கப்படுகிறது. இது ஐதரோகுளோரிக் அமிலத்திலிருந்து படிக ஐதரோகுளோரைடு உப்பை (C11H11NO·HCl) உருவாக்குகிறது. குறைந்தபட்சம் 1 கிராம் உப்பு 25 மில்லி தண்ணீரில் 75 பாகை செல்சியசு வெப்பநிலையில் கரைகிறது. காற்று மற்றும் ஒளியின் வெளிப்பாட்டின் போது உப்பு இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்து அடர் ஊதா நிறமாக மாறுகிறது.[1]

4-அமினோ-3-மெத்தில்-1-நாப்தால் அல்லது இதன் ஐதரோகுளோரைடு உப்பு பைலோகுயினோன் மற்றும் மெனாடையோன் போன்ற வைட்டமின் கே இன் வணிக மருத்துவ வடிவங்களாகப் பயன்படுத்தப்படவில்லை.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Budavari S, et al. (2000). The Merck index (12th ed.). Chapman & Hall Electronic Pub. Division. p. 1581. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781584881292.
  2. "Synthesis of 3-methyl-4-amino-1-naphthol hydrochloride (vitamin K7) and related vitamin-K-active compounds". Zeitschrift für Vitamin-, Hormon- und Fermentforschung 3 (3–4): 324–345. 1949–1950. பன்னாட்டுத் தர தொடர் எண்:0373-0220. பப்மெட்:14782638. 
  3. "Fat-soluble vitamins". Annual Review of Biochemistry 20 (1): 265–304. 1951. doi:10.1146/annurev.bi.20.070151.001405. பப்மெட்:14847531. 
  4. "Anaphylactoid reactions to vitamin K". Journal of Thrombosis and Thrombolysis 11 (2): 175–183. 2001. doi:10.1023/A:1011237019082. பன்னாட்டுத் தர தொடர் எண்:1573-742X. பப்மெட்:11406734.