4-அயோடோபீனால்
4-அயோடோபீனால் (4-Iodophenol) என்பது C6H5IO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பாரா-அயோடோபீனால் என்ற பெயராலும் இந்த கரிமச் சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது. நிறமற்ற திண்மமாக 4-அயோடோபீனால் காணப்படுகிறது. அறியப்பட்டுள்ள மூன்று மோனோ அயோடோ பீனால்களில் இதுவும் ஒன்றாகும். 4-அயோடோபீனால் பல்வேறு பிணைப்பு வினைகளுக்கு உட்படுகிறது. சேர்மத்திலுள்ள அயோடின் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு பீனாலின் ஐதராக்சி குழுவிற்கு ஒரு புதிய கார்பன் குழு மாற்றப்படுகிறது.[3] புற்றுநோய் செல்களைக் கண்டறிவதற்காகவும்[4] மற்றும் நீரின் தர மதிப்பீட்டில் வேதியியல் ஒளியை அதிகரிக்கவும் இது பயன்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
4-அயோடோபீனால்
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
540-38-5 | |
ChEBI | CHEBI:43521 |
ChEMBL | ChEMBL56475 |
ChemSpider | 10432 |
DrugBank | DB03002 |
EC number | 208-745-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10894 |
| |
UNII | BH194BAK0B |
பண்புகள் | |
C6H5IO | |
வாய்ப்பாட்டு எடை | 220.01 g·mol−1 |
அடர்த்தி | 1.8573 கி/செ,மீ3 (112 °செல்சியசு)[1] |
உருகுநிலை | 93.5 °C (200.3 °F; 366.6 K)[1] |
கொதிநிலை | 139 °C (282 °F; 412 K)[1] (5 மிமீபாதரசம்; சிதையும்) |
காடித்தன்மை எண் (pKa) | 9.33[2] |
தீங்குகள் | |
GHS pictograms | [3] |
H302, H312, H314 | |
P280, P305+351+338, P310 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
4-அயோடோபீனாலை 4-அமினோபீனாலில் இருந்து ஈரசோசோனியம் உப்பு வழியாக தயாரிக்கலாம். ஒரு மாற்றுத் தயாரிப்பு முறையாக அயோடினுடன் சாலிசிலிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்து கார்பாக்சில் நீக்கம் செய்யும் செயல்முறையை உள்ளடக்கியது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Haynes, p. 3.324
- ↑ Haynes, p. 5.93
- ↑ 3.0 3.1 "4-Iodophenol". Sigma-Aldrich.
- ↑ "4-Iodophenol". Fisher Scientific.
- ↑ Dains, F. B.; Eberly, Floyd (1935). "p-Iodophenol". Organic Syntheses 15: 39. doi:10.15227/orgsyn.015.0039.
மேலும் வாசிக்க
தொகு- Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781498754293.