4-ஐதராக்சிபென்சால்டிகைடு

ஒரு கரிமவேதியியல் வேதிச்சேர்மம்

4-ஐதராக்சிபென்சால்டிகைடு (4-Hydroxybenzaldehyde) என்பது C7H6O2 என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐதராக்சிபென்சால்டிகைடின் மூன்று மாற்று வடிவங்களில் இச்சேர்மமும் ஒன்றாகும். ஆர்க்கிடேசி குடும்பத்து தாவரங்களான காசுடிரோதியா இலாட்டா மற்றும் காலியோலா ஃபேபரி முதலிய தாவரங்களில் 4-ஐதராக்சிபென்சால்டிகைடு காணப்படுகிறது. வேனில்லா என்ற நிலம்வாழ் ஏறுகொடியிலும் இச்சேர்மம் காணப்படுகிறது.

4-ஐதராக்சிபென்சால்டிகைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
4-ஐதராக்சிபென்சால்டிகைடு
வேறு பெயர்கள்
p-ஐதராக்சிபென்சால்டிகைடு
இனங்காட்டிகள்
123-08-0 Y
ChEBI CHEBI:17597 Y
ChEMBL ChEMBL14193 Y
ChemSpider 123 Y
DrugBank DB03560 Y
InChI
  • InChI=1S/C7H6O2/c8-5-6-1-3-7(9)4-2-6/h1-5,9H Y
    Key: RGHHSNMVTDWUBI-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H6O2/c8-5-6-1-3-7(9)4-2-6/h1-5,9H
    Key: RGHHSNMVTDWUBI-UHFFFAOYAN
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C00633 Y
பப்கெம் 126
  • O=Cc1ccc(O)cc1
UNII O1738X3Y38 Y
பண்புகள்
C7H6O2
வாய்ப்பாட்டு எடை 122.12 g·mol−1
தோற்றம் மஞ்சள்
அடர்த்தி 1.226 ± 0.06 கி/செ.மீ3
உருகுநிலை 112 முதல் 116 °C (234 முதல் 241 °F; 385 முதல் 389 K)
கொதிநிலை 310 முதல் 311 °C (590 முதல் 592 °F; 583 முதல் 584 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

தாகின் ஆக்சிசனேற்றம் என்பது ஒர் ஆக்சிசனேற்ற ஒடுக்க வினையாகும். இவ்வினையில் ஒர் ஆர்த்தோ அல்லது பாரா ஐதராக்சினேற்ற பீனைல் ஆல்டிகைடு (2- ஐதராக்சிபென்சால்டிகைடு அல்லது 4-ஐதராக்சிபென்சால்டிகைடு) அல்லது கீட்டோன், கார நிலையில் ஐதரசன் பெராக்சைடுடன் வினைபுரிந்து பென்சீன்டையால் மற்றும் கார்பாக்சிலேட்டு முதலானவை உருவாகின்றன. மொத்தத்தில் கார்பனைல் தொகுதியானது ஆக்சிசனேற்றப்படுகிறது, மற்றும் ஐதரசன் பெராக்சைடு குறைக்கப்படுகிறது.

வளர்சிதை மாற்றம்

தொகு

கேரட்டில் (தௌகசு கரோட்டா) பாரா-ஐதராக்சிபென்சால்டிகைடு ஐதரசன் நீக்கநொதி காணப்படுகிறது[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Sircar, D.; Mitra, A. (2008). "Evidence for p-hydroxybenzoate formation involving enzymatic phenylpropanoid side-chain cleavage in hairy roots of Daucus carota". Journal of Plant Physiology 165 (4): 407–414. doi:10.1016/j.jplph.2007.05.005. பப்மெட்:17658659.