4-குளோரோ அனிலின்
4-குளோரோ அனிலின் (4-Chloroaniline) என்பது ClC6H4NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டைகுளோரோ அனிலினின் மூலக்கூற்று வாய்ப்பாடும் வேறுபட்ட கட்டமைப்பும் கொண்ட பல்வேறு மாற்றியன்களில் இச்சேர்மமும் ஒரு வகை மாற்றியனாகும். குளோரோ அனிலினின் மூலக்கூற்று வாய்ப்பாடும் வேறுபட்ட கட்டமைப்பும் கொண்ட பல்வேறு மாற்றியன்களில் 4-குளோரோ அனிலினும் ஒரு வகை மாற்றியனாகும். கரிமக்குளோரின் சேர்மங்களில் ஒன்றான இது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஒரு திண்மமாக காணப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-குளோரோ அனிலின்[1] | |
முறையான ஐயூபிஏசி பெயர்
4-குளோரோபென்சீனமீன்[1] | |
வேறு பெயர்கள்
பாரா-குளோரோ அனிலின்
| |
இனங்காட்டிகள் | |
106-47-8 | |
ChEBI | CHEBI:20331 |
ChEMBL | ChEMBL15888 |
ChemSpider | 7524 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C14450 |
பப்கெம் | 7812 |
| |
UNII | Z553SGH315 |
பண்புகள் | |
ClC6H4NH2 | |
தோற்றம் | வெளிர் மஞ்சள் நிறத் திண்மம் |
அடர்த்தி | 1.43 கி/செ.மீ3 |
உருகுநிலை | 72.5 °C (162.5 °F; 345.6 K) |
கொதிநிலை | 232 °C (450 °F; 505 K) |
2.6 கி/லி 20 °செல்சியசில்[2] | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | மிகுந்த நச்சு, தோலின் வழியாக ஈர்க்கப்பட்டு புற்றுநோய் ஊக்கிக்கான சாத்தியம் உண்டு.[3] |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
தீப்பற்றும் வெப்பநிலை | 113 °C (235 °F; 386 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுமிகைகுளோரினேற்றம் காரணமாக அனிலினிலிருந்து 4-குளோரோ அனிலின் தயாரிக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக 4-நைட்ரோகுளோரோபென்சீனை ஒடுக்க வினைக்கு உட்படுத்தி 4-குளோரோ அனிலின் தயாரிக்கப்படுகிறது. குளோரோ பென்சீன் நைட்ரோயேற்றம் செய்யப்பட்டு 4-நைட்ரோகுளோரோபென்சீன் தயாரித்துக் கொள்ளப்படுகிறது. [4]
பயன்கள்
தொகுபூச்சிக்கொல்லிகள், மருந்துகள் மற்றும் சாயப் பொருள்கள் போன்றவற்றை தொழில்துறையில் உற்பத்தி செய்ய 4-குளோரோ அனிலின் பயன்படுத்தப்படுகிறது. பரவலாகப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்க் கொல்லி, குளோர்யெக்சிடின் எனப்படும் பாக்டிரியா கொல்லி, பைராகுளோசுட்ரோபின், அனிலோபோசு, மோனோலினுரான், குளோர்ப்தாலிம் உள்ளிட்ட பூச்சிக் கொல்லிகள் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக 4-குளோரோ அனிலின் பயன்படுகிறது. [5] சிலவகை பாக்டிரியாக்கள் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிர்ப்பியாகவும் 4-குளோரோ அனிலின் செயல்படுகிறது. [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 669. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
- ↑ Scheunert, 1981 [Full citation needed]
- ↑ "Safety data for 4-chloroaniline". ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம். Archived from the original on 2012-04-23. பார்க்கப்பட்ட நாள் 2008-03-11.
- ↑ 4.0 4.1 Gerald Booth (2007). Nitro Compounds, Aromatic. Weinheim: Wiley-VCH. doi:10.1002/14356007.a17_411.
- ↑ Ashford’s Dictionary of Industrial Chemicals (3rd ed.). 2011. p. 1998.