4-புளோரோபென்சாயிக் அமிலம்
4-புளோரோபென்சாயிக் அமிலம் (4-Fluorobenzoic acid) C7H5FO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பாரா-புளோரோபென்சாயிக் அமிலம் என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் நிறமற்ற திண்மமாகக் காணப்படுகிறது. பென்சாயிக் அமிலம் மற்றும் கார்பாக்சிலிக் அமிலம் அகியனவற்றின் வழிப்பொருளாகவும், செயற்கைமுறையிலான ஒரு இடைநிலைச் சேர்மமாகவும் 4-புளோரோபென்சாயிக் அமிலம் கருதப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
4-புளோரோபென்சாயிக் அமிலம்
| |
முறையான ஐயூபிஏசி பெயர்
4-புளோரோபென்சாயிக் அமிலம் | |
வேறு பெயர்கள்
p-புளோரோபென்சாயிக் அமிலம், பாரா-புளோரோபென்சாயிக் அமிலம், 4-புளோரோ-பென்சாயிக் அமிலம்.
| |
இனங்காட்டிகள் | |
456-22-4 | |
ChEBI | CHEBI:20364 |
ChemSpider | 9579 |
EC number | 207-259-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9973 |
| |
பண்புகள் | |
C7H5FO2 | |
வாய்ப்பாட்டு எடை | 140.11 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | 1.479 கி/செ.மீ3 |
உருகுநிலை | 184 °C (363 °F; 457 K) |
கொதிநிலை | 253.687 °C (488.637 °F; 526.837 K) 760 மி.மீபாதரசத்தில் |
1200 மி.கி/லி | |
மட. P | 2.07 |
காடித்தன்மை எண் (pKa) | 4.14 |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நுரையீரல், கண், தோலில் எரிச்சலூட்டும். |
தீப்பற்றும் வெப்பநிலை | 107.226 °C (225.007 °F; 380.376 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசிகீமான் வினையின் வழியாக 4-புளோரோபென்சாயிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. எத்தில் எசுத்தராக பாதுகாக்கப்பட்டுள்ள 4-அமினோபென்சாயிக் அமிலம் முதலில் ஈரசோனியம் உப்பாக்கப்படுகிறது. பின்னர் டெட்ராபுளோரோபோரேட்டு சேர்ப்பதன் மூலம் விளைபொருளுடன் புளோரைடு அறிமுகப்படுத்தப்படுகிறது. எசுத்தரை நீராற்பகுப்பு செய்தால் அது தனி அமிலமாக மீள்விக்கப்படுகிறது[1]
4-புளோரோசின்னமிக் அமிலம் வளிம உயிரின மாற்றம் மூலமாக 4-புளோரோபென்சாயிக் அமிலம் உருவாதலும் அறியப்பட்டுள்ளது[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ G. Schiemann; W. Winkelmüller (1943). "p-Fluorobenzoic Acid". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv2p0299.; Collective Volume, vol. 2, p. 299
- ↑ Freitas Dos Santos, Luisa M.; Spicq, Arnaud; New, Anthony P.; Lo Biundo, Giuseppe; Wolff, Jean-Claude; Edwards, Andrew (2001). "Aerobic biotransformation of 4-fluorocinnamic acid to 4-fluorobenzoic acid". Biodegradation 12 (1): 23–9. doi:10.1023/A:1011973824171. பப்மெட்:11693292.