5-அமினோடெட்ரசோல்

5-அமினோடெட்ரசோல் (5-Aminotetrazole) என்பது HN4CNH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மத்தை நீரிலி மற்றும் நீரேற்று என்ற வகைகளிலும் தயாரிக்க இயலும். இச்சேர்மம் 80% நைட்ரசனை பகுதிப்பொருளாகக் கொண்டது ஆகும். எனவே நைட்ரசன் வாயுவாக (N2) இது சிதைவடைய வாய்ப்புகள் அதிகமாகும். இச்சேர்மத்தை காற்றுப் பைகள், ஊதும் முகவர்கள் போன்ற வாயுவாக்கித் திட்டங்களில் பயன்படுத்த பரவலாக ஆராயப்பட்டு வருகிறது[1].

5-அமினோடெட்ரசோல்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1எச்-டெட்ராசோல்-5-ஐலமீன்
வேறு பெயர்கள்
5-ஏ.டி.இசட்
இனங்காட்டிகள்
4418-61-5
ChemSpider 19274
InChI
  • InChI=1S/CH3N5/c2-1-3-5-6-4-1/h(H3,2,3,4,5,6)
    Key: ULRPISSMEBPJLN-UHFFFAOYSA-N
  • InChI=1/CH3N5/c2-1-3-5-6-4-1/h(H3,2,3,4,5,6)
    Key: ULRPISSMEBPJLN-UHFFFAOYAD
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 20467
  • c1([nH]nnn1)N
பண்புகள்
CH3N5
வாய்ப்பாட்டு எடை 85.07 g·mol−1
தோற்றம் வெண்மையான திண்மம்
அடர்த்தி 1.502 கி/செ.மீ3
உருகுநிலை 201–205 °C (394–401 °F; 474–478 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இம்மூலக்கூறு சமதளக் கட்டமைப்பு வடிவில் உள்ளது[2]. நீரேற்றில் உள்ள ஐதரசன் பிணைப்பு வகை வளையத்திலுள்ள கார்பனுக்கு அடுத்ததாக NH இடம்பெறுவதற்கு உதவுகிறது[3].

பல்வளைய வேதியியலில் 5-அமினோடெட்ரசோல் பயன்படுகிறது. குறிப்பாக பலபகுதிவினைகளில் ஒரு தொகுப்பலகாக இது பயன்படுகிறது[4].

மேற்கோள்கள்

தொகு
  1. Lesnikovich, A. I.; Ivashkevich, O. A.; Levchik, S. V.; Balabanovich, A. I.; Gaponik, P. N.; Kulak, A. A. "Thermal decomposition of aminotetrazoles" Thermochimica Acta 2002, vol. 388, pp. 233-251. எஆசு:10.1016/S0040-6031(02)00027-8
  2. Hiroshi Fujihisa, Kazumasa Honda, Shigeaki Obata, Hiroshi Yamawaki, Satoshi Takeya, Yoshito Gotoha, Takehiro Matsunaga "Crystal structure of anhydrous 5-aminotetrazole and its high-pressure behavior" CrystEngComm, 2011, volume 13, pp. 99-102. எஆசு:10.1039/C0CE00278J
  3. D. D. Bray and J. G. White "Refinement of the structure of 5-aminotetrazole monohydrate" Acta Crystallogr. (1979). B35, pp. 3089-3091.எஆசு:10.1107/S0567740879011493
  4. Dolzhenko, A. V. (2017). "5-Aminotetrazole as a Building Block for Multicomponent Reactions (Review)" (in en). HETEROCYCLES 94 (10): 1819-1846. doi:10.3987/rev-17-867. http://www.heterocycles.jp/newlibrary/libraries/abst/25419. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=5-அமினோடெட்ரசோல்&oldid=2563641" இலிருந்து மீள்விக்கப்பட்டது