6-மெத்தில்சாலிசிலிக் அமிலம்

அரோமாட்டிக் சேர்மம்

6-மெத்தில்சாலிசிலிக் அமிலம் (6-Methylsalicylic acid) என்பது CH3C6H3(CO2H)(OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.ஒரு வெண்மையான திண்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது. கார நீரிலும் கரிம முனைவுக் கரைப்பான்களிலும் 6-மெத்தில்சாலிசிலிக் அமிலம் கரைகிறது. நடுநிலை pH மதிப்புள்ள நிலையில் இந்த அமிலம் 6-மெத்தில்சாலிசிலேட்டாக காணப்படுகிறது. ஒரு கார்பாக்சிலிக் அமிலம், மற்றும் ஒரு பீனால் குழு போன்றவை இதனுடைய வேதி வினைக்குழுக்களில் அடங்கும். மெத்தில்சாலிசிலிக் அமிலத்தினுடைய அறியப்பட்ட நான்கு மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும்.

6-மெத்தில்சாலிசிலிக் அமிலம்
6-மெத்தில்பென்சாயிக் அமிலத்தின் வேதிக் கட்டமைப்பு.
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-ஐதராக்சி-6-மெத்தில்பென்சாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
2-ஐதராக்சி-6-மெத்தில்பென்சாயிக் அமிலம்
ஆர்த்தோ-கிரெசோட்டிக் அமிலம்
2,6-கிரெசோட்டினிக் அமிலம்

2-ஐதராக்சி-ஆர்த்தோ-தொலுயிக் அமிலம்
இனங்காட்டிகள்
567-61-3
3DMet B00477
Beilstein Reference
2208693
ChEBI CHEBI:17637
ChEMBL ChEMBL510026
ChemSpider 10805
InChI
  • InChI=1S/C8H8O3/c1-5-3-2-4-6(9)7(5)8(10)11/h2-4,9H,1H3,(H,10,11)
    Key: HCJMNOSIAGSZBM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C02657
பப்கெம் 11279
  • CC1=C(C(=CC=C1)O)C(=O)O
UNII L5352FE23Y
பண்புகள்
C8H8O3
வாய்ப்பாட்டு எடை 152.15 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 141.5–142 °C (286.7–287.6 °F; 414.6–415.1 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

6-மெத்தில்சாலிசிலிக் அமிலம் இயற்கையாகத் தோன்றுகிறது. மெட்டா கிரெசால் தயாரிப்பில் உயிரியல் தொகுப்பு முன்னோடிச் சேர்மமாக 6-மெத்தில்சாலிசிலிக் அமிலம் பயன்படுகிறது[1]. கார்பாக்சில் நீக்க வினையில் 6-மெத்தில்சாலிசிலேட்டு டி கார்பாக்சிலேசு என்ற நொதி வினையூக்கியாகச் செயல்படுகிறது.

6-மெத்தில்சாலிசிலேட்டு 3-கிரெசால் + CO2

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Staunton, James; Weissman, Kira J. (2001). "Polyketide Biosynthesis: A Millennium Review". Natural Product Reports 18: 380-416. doi:10.1039/a909079g.