99 வருட குத்தகை

99 வருட குத்தகை, நிலம் உள்ளிட்ட அசையாச் சொத்துகள் குத்தகைக்கு தரப்படக்கூடிய மிக நீண்டகால குத்தகைக் காலத்தைக் குறிக்கிறது.

தமிழகத்தில் 99 வருட குத்தகை தொகு

  • 1930 ஆம் வருடம் சிங்கம்பட்டி ஜமீன்தார் தனது நிலத்தில் சுமார் 8374 ஏக்கர் பரப்பளவுள்ள காட்டு நிலத்தை, 99 வருட குத்தகைக்கு பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி) என்ற தனியார் நிறுவனத்திற்குத் தந்தார். இந்நிறுவனம் மகாராஷ்டிர மாநிலத்தின் நுஸ்லேவாடியா என்பவருக்குச் சொந்தமானது. இவ்வாறு பெறப்பட்ட காடுகள், மரங்கள் அழிக்கப்பட்டு மாஞ்சோலை எஸ்டேட்டாக மாற்றப்பட்டன.

1948 ஆம் வருடத்தின் சட்டப்படி சிங்கம்பட்டி ஜமீன்தார் நிலங்கள் அரசுடமையாக்கப்பட்ட பின்னரும் பிபிடிசி நிறுவனம் அப்போதைய தமிழக காங்கிரஸ் அரசுடன் குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொண்டு தனது குத்தகை காலத்தைத் 2029 வரைக்கும் நீட்டித்தது.[2]

  • சென்னை தமிழிசை மன்றத்தின் முன்பகுதியில் அண்ணாமலைச் செட்டியார் சிலை உள்ள இடம் அரசிடமிருந்து 99 வருட குத்தகைக்கு பெறப்பட்டது. குத்தகைத் தொகை ஆண்டுக்கு ஒரு ரூபாய். இச்சிலையை நிறுவியவர் அண்ணாமலைச் செட்டியாரின் மகன் ராஜா சர்.முத்தையா செட்டியார்.[3]
  • நோக்கியா தொழிற்சாலையை ஈர்க்கும் முயற்சியில் 2005 ஆம் வருடம் நோக்கியாவிற்கும் தமிழக அரசுக்கும் ஏற்பட்ட சிறப்பு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் அமைந்துள்ள நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான 210.87 ஏக்கர் பரப்பளவிளான இடம் ஏக்கருக்கு 4.5 லட்சம் என்ற நோக்கியாவிற்காகத் திருத்தப்பட்ட தொகையுடன் 99 வருட குத்தகைக்கு நோக்கியாவிற்குத் தரப்பட்டது. நோக்கியாவிற்கான குத்தகை வாடகை முதல் 98 வருடங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் ஒன்று. 99வது வருடத்திலிருந்து ஒரு ஏக்கருக்கான வாடகை ரூபாய் இரண்டு.[4][5]
  • 2012 ஆம் வருடம் விவேகானந்தர் இல்லம் 99 வருட குத்தகைக்கு நீட்டிக்கப்பட்டது.(’விவேகானந்தர் இல்லம்’, 1963 ஆம் வருடத்தின் வேண்டுகோளின்படி, 1997 ஆம் ஆண்டு ஸ்ரீராமகிருஷ்ண மடத்திடம் மூன்றாண்டு குத்தகைக்குத் தரப்பட்டு, 2008 ஆம் வருடம் அவ்விடத்தை தமிழாராய்ச்சி நிறுவனத்திற்காக தெரிவு செய்யப்பட்டதாக பரவலாகப் பேசப்பட்டு, பின்னர் 2010 ஆம் வருடம் பத்து வருடங்கள் குத்தகை நீட்டிக்கப்பட்டிருந்தது.[6][7] குத்தகை வாடகை வருடத்திற்கு 12,000 ரூபாய்[8])

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=99_வருட_குத்தகை&oldid=3592263" இலிருந்து மீள்விக்கப்பட்டது