ஃபரா சுல்தான் அகமது

ஃபரா சுல்தான் அகமது, இந்தியாவின் தில்லியைச் சேர்ந்த பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளராவார். இந்தித் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான சுல்தான் அகமதுவிற்கு 1987 ஆம் ஆண்டு முதல் அவர் இறந்த 2002 ஆம் ஆண்டு வரை பங்குதாரராக இருந்து திரைப்பட தயாரிப்பில் உதவியுள்ளார்.[1]

ஃபரா சுல்தான் அகமது
பிறப்பு22 அக்டோபர் 1968 (1968-10-22) (அகவை 56)
தில்லி, இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விமும்பை பல்கலைக்கழகம்
பணிதிரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2015 ஆம் ஆண்டு முதல்
பெற்றோர்முஸ்தபா மூசா
வாழ்க்கைத்
துணை
சுல்தான் அகமது
(தி. 1987; இற. 2002)
பிள்ளைகள்அலி அப்பாசு சுல்தான் அகமது
அலி அக்பர் சுல்தான் அகமது

தொழில்

தொகு

திருமதி.ஃபரா, மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பத்மினி கோலாபுரே நடித்த தாதா திரைப்படத்திற்கும், அதன் பின்னர் சஞ்சய் தத், ஜெபா பக்தியார் மற்றும் அம்ரிஷ் பூரி நடித்த ஜெய் விக்ரந்தா படத்திற்கும் முன் தயாரிப்புகள், செலவுகள், படப்பிடிப்பு அட்டவணை மற்றும் தயாரிப்பிற்கு பின்பதான வேலைகள் என திரைப்பட தயாரிப்பின் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து தயாரித்துள்ளார். மேலும் 2007 ஆம் ஆண்டில் சிதாரா என்ற இசைத்தொகுப்பையும் தயாரித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (IMPPA) நிர்வாகக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, அதன் பொருளாளராகவும்  ஒருங்கிணைப்பாளராகவும் திறம்பட பணியாற்றியுள்ளார். அவர் பதவியில் இருந்த கால கட்டத்தில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களை வெற்றிகரமாக தீர்த்து வைத்துள்ளார்,[2]

2011 ஆம் ஆண்டில் அவர் சுல்தான் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், திங்க்பிக் பொழுதுபோக்கு என்ற நிறுவனத்தை துபாயில் தொடங்கி, அதன் மூலம் பல்வேறு திரைப்பட, கலைநிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார்.[3]

2016 ஆம் ஆண்டில், 1960 ஆம் ஆண்டு வெளிவந்த முகல்-இ-அசாம் திரைப்படத்தின் மறுஉருவாக்கம் செய்ய இவரது கணவர் எழுதி வைத்திருந்த திரைக்கதையின் அடிப்படையில் அத்திரைப்படத்தின் பாகத்தை தயாரித்துள்ளார்.[4]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபரா_சுல்தான்_அகமது&oldid=4175246" இலிருந்து மீள்விக்கப்பட்டது