அகரமேறிய மெய் முறைமை

அகரமேறிய மெய் முறைமை என்பது தமிழ் பிராமி கல்வெட்டுகளின் காலக்கணிப்பில் பயன்படுத்தப்படும் முறையாகும். இதன்படி ஒரு தமிழ் பிராமி கல்வெட்டில் காணப்படும் க் என்னும் மெய் எழுத்தைக் குறிக்க அடிப்படைக் குறியான கூட்டல் குறி மட்டும் கொண்டு குறிப்பிட்டு, , கா போன்ற அகர ஆகாரமேறிய எழுத்துக்களைக் குறிக்க கூட்டல் குறியீட்டின் மேலில் வலப்பக்கத்தில் ஒரு படுக்கைக்கோடு குறிக்கப்பட்டிருக்குமாயின் அது காலத்தால் முற்பட்ட கல்வெட்டாகும். அதுவே க், என்னும் மெய் எழுத்தையும், அகரமேறிய மெய் எழுத்தையும் குறிக்க அடிப்படைக் குறியான கூட்டல் குறி மட்டும் கொண்டு குறிப்பிட்டு, கா என்னும் ஆகாரமேறிய எழுத்துக்களைக் மட்டும் குறிக்க கூட்டல் குறியீட்டின் மேலில் வலப்பக்கத்தில் ஒரு படுக்கைக்கோடு குறிக்கப்பட்டிருக்குமாயின் அது காலத்தால் பிற்பட்ட கல்வெட்டாகும்.

நடன காசிநாதன் கூறியபடி தமிழ் கல்வெட்டுகளின் காலம். இதில் சாத்தன் என்னும் பெயர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எப்படி எழுதப்பட்டது எனவும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எனவும் அதன் வளர்ச்சி பற்றியும் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது.
காலம் குறியீடு குறிக்கும் எழுத்துக்கள்
காலத்தால் முற்பட்டவை க் - மெய்யெழுத்து
காலத்தால் முற்பட்டவை க, கா - அகர ஆகாரமேறிய மெய்யெழுத்துக்கள்
காலத்தால் பிற்பட்டவை க், க - மெய்யெழுத்து, அகரமேறிய மெய்யெழுத்து
காலத்தால் பிற்பட்டவை கா - ஆகாரமேறிய மெய்யெழுத்து

ஆராய்ச்சியாளர்களின் மாறுபட்ட முடிவுகள்

தொகு
  1. இவர் காலத்தால் முற்பட்ட கல்வெட்டுகளைக் கி.மு. இரண்டாம் மற்றும் முதலாம் நூற்றாண்டிற்கு கொண்டு சென்றார்.
  2. காலத்தால் பிற்பட்ட கல்வெட்டுகளைக் கி.பி. முதலிரண்டு நூற்றாண்டுகளுக்குள் அடக்கினார்.
  3. இவற்றை இவர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கு பிற்பட்டவை எனக் கணித்ததனால் தமிழர் தமிழ் பிராமியை அசோகப் பிராமியில் இருந்து உருவாக்கிக் கொண்டனர் என்ற நிலைப்பாட்டைக் கொண்டார்.

மாறுபடும் ஆய்வாளர்கள்

தொகு
  1. மயிலை சீனி. வேங்கடசாமி
  2. நடன காசிநாதன்
  3. கே. வி. ரமேஷ்
  4. எம். டி. சம்பத்
  5. சு. இராஜவேலு
  6. கா. ராஜன்

மேலுள்ள ஆய்வாளர்களில் ராஜன் மண்ணடுக்கு ஆய்வுகளின் அடிப்படையிலும் மற்றவர்கள் கல்வெட்டுகளின் அடிப்படையிலும் தமிழ் பிராமி அசோகப் பிராமிக்கு முற்பட்டது என்று நிறுவினர். ஆய்வாளர்களுக்குள்ளே அசோகன் பிராமியில் இருந்து தமிழ் பிராமி வந்ததா அல்லது தமிழ் பிராமியில் இருந்து அசோகன் பிராமி வந்ததா என்பதில் முரண்பாடுகள் காணப்பட்டாலும், தமிழகத்தில் மட்டும் காணப்படும் கல்வெட்டுகளில் மாங்குளம் வகை கல்வெட்டுகளே முந்தியவை என்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றனர்.

வேங்கடசாமியின் கருத்துக்கள்

தொகு

நடன காசிநாதன் கருத்துக்கள்

தொகு

தமிழக தொல்லியல் துறையின் முன்னால் தலைவரான நடன காசிநாதன் தமிழ் பிராமி கல்வெட்டுகளை இந்த முறைமை கொண்டு நான்கு காலங்களாகப் பிரிக்கிறார். அவை,

  1. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு கல்வெட்டுகள்.
  2. கி.மு. நாலாம் நூற்றாண்டு கல்வெட்டுகள்.
  3. கி.மு. மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டுகள்.
  4. கி.பி, முதலாம் நூற்றாண்டும் அதற்கு பிற்பட்டவையும்.

முதல் வகை

தொகு
  1. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்படும் மாங்குளம் கல்வெட்டுகளில் அடிப்படைக் குறியீடு (எ.கா. d, +) போன்றவை மெய் எழுத்துக்களை மட்டுமே குறிக்கும்.
  2. அடிப்படைக் குறியீடுகளுடன் மேலே வலப்பக்கம் படுக்கை கோடு காணப்படும் எனில் அது அகரம் அல்லது ஆகாரம் ஏறிய மெய்யைக் குறிக்கும்.(எ.கா. d, + போன்ற எழுத்துக்களுடன் ஒலிக்குறியீடு)

இரண்டாம் வகை

தொகு
  1. கி.மு. நாலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்படும் புகழூர் கல்வெட்டில் அடிப்படைக் குறியீடு (எ.கா. d, +) போன்றவை மெய்யையும் அகரமேறிய மெய்யையும் குறிக்கும்.
  2. அடிப்படைக் குறியீடுகளுடன் மேலே வலப்பக்கம் படுக்கை கோடு காணப்படும் எனில் அது ஆகாரம் ஏறிய மெய்யைக் மட்டுமே குறிக்கும்.(எ.கா. d, + போன்ற எழுத்துக்களுடன் ஒலிக்குறியீடு)

மூன்றாம் வகை

தொகு
  1. கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்ததாக அறியப்படும் ஜம்பைக் கல்வெட்டில் அடிப்படைக் குறியீடு (எ.கா. d, +) போன்றவை மெய்யையும் அகரமேறிய மெய்யையும் குறிக்கும்.
  2. அடிப்படைக் குறியீடுகளுடன் மேலே வலப்பக்கம் படுக்கை கோடு காணப்படும் எனில் அது ஆகாரம் ஏறிய மெய்யைக் மட்டுமே குறிக்கும்.(எ.கா. d, + போன்ற எழுத்துக்களுடன் ஒலிக்குறியீடு)

நாலாம் வகை

தொகு
  1. கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்படும் நெகனூர்பட்டிக் கல்வெட்டில் அடிப்படைக் குறியீட்டுடன் மேல் வலப்பக்கம் காணப்படும் புள்ளியும் சேர்த்த எழுத்துக்கள் (எ.கா. d., +. ) மெய்யைமட்டுமே குறிக்கும்.
  2. புள்ளி இல்லாத அடிப்படைக் குறியீடுகள் (எ.கா. d, +) அகரமேறிய எழுத்துக்களை மட்டுமே குறிக்கும்.
  3. அடிப்படைக் குறியீடுகளுடன் மேலே வலப்பக்கம் படுக்கை கோடு காணப்படும் எனில் அது ஆகாரம் ஏறிய மெய்யைக் மட்டுமே குறிக்கும்.(எ.கா. d, + போன்ற எழுத்துக்களுடன் ஒலிக்குறியீடு)

பட்டிப்போருலு கல்வெட்டு வகை

தொகு
  1. கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் முதல் பாதியைச் சேர்ந்த ஆந்திராவின் பட்டிப்போருலு கல்வெட்டில் அடிப்படைக் குறியீடு மெய்யை மட்டுமே குறிக்கும்.
  2. அடிப்படைக் குறியீடுகளுடன் மேலே வலப்பக்கம் படுக்கை கோடு காணப்படும் எனில் அது அகரம் ஏறிய மெய்யைக் மட்டுமே குறிக்கும்.(எ.கா. d, + போன்ற எழுத்துக்களுடன் ஒலிக்குறியீடு)
  3. அடிப்படைக் குறியீடுகளுடன் மேலே வலப்பக்கம் படுக்கை கோடும் அக்கோட்டின் தொடர்ச்சியாகக் கீழே ஒரு குத்துக்கோடும் காணப்ப்டும் எனில் அது ஆகாரமேறிய மெய்யை மட்டுமே குறிக்கும்.
  4. இவ்வகையில் நோக்கும் போது மேலே கூறப்பட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது வகை கல்வெட்டுகளின் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை இக்கல்வெட்டுகல் என நிறுவலாம்.

அசோகன் கல்வெட்டு வகை

தொகு
  1. கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்ததாக அறியப்படும் அசோகன் கல்வெட்டில் அடிப்படைக் குறியீடுகளான (எ.கா. d, +) போன்றவை மெய்யையும் அகரமேறிய மெய்யையும் குறிக்கும்.
  2. அடிப்படைக் குறியீடுகளுடன் மேலே வலப்பக்கம் படுக்கை கோடு காணப்படும் எனில் அது ஆகாரம் ஏறிய மெய்யைக் மட்டுமே குறிக்கும்.(எ.கா. d, + போன்ற எழுத்துக்களுடன் ஒலிக்குறியீடு)
  3. இக்கல்வெட்டில் காணப்படும் குறியீடுகளின் ஒலிப்புகள் ஜம்பைக் கல்வெட்டிலும் காணப்படுவ்தால் இரண்டும் ஒரே காலத்தவையே. மேலும் அசோகன் தன் கல்வெட்டில் குறிக்கும் சதியபுதோ என்னும் பெயரே அதியமான் நெடுமான் அஞ்சியின் ஜம்பைக் கல்வெட்டிலும் காணப்படுவது மேலும் இதை உறுதிப்படுத்துகிறது.

இம்முறைப்படி கணிக்கப்பட்ட மற்ற முற்காலக் கல்வெட்டுகள்

தொகு

மூலம்

தொகு
  1. மயிலை சீனி. வேங்கடசாமி (2007, திருவள்ளுவர் ஆண்டு - 2038). சங்ககாலத் தமிழக வரலாறு. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். pp. (42 - 43)/232. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. நடன காசிநாதன் (சூன் 2004). "Date of Early Tamil Epigraphs". தமிழியல் இதழ்கள் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 065: 77-88. doi:21 ஏப்ரல் 2013. http://www.ulakaththamizh.org/JOTSArticle.aspx?id=537. பார்த்த நாள்: 2013-04-21. 
  3. கா. ராஜன் (2006). கல்வெட்டியல். தஞ்சாவூர்: மனோ பதிப்பகம். pp. (188-205)/256.

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. ஐராவதம் மகாதேவன் (2003). Early Tamil Epigraphy : From the Earliest Times to the Sixth Century AD. ஆர்வர்ட், ஐக்கிய அமேரிக்கா: Cre - A Chennai and the Department of Sanskrit and Indian Studies, ஆர்வர்ட் பல்கலைக்கழகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகரமேறிய_மெய்_முறைமை&oldid=3374562" இலிருந்து மீள்விக்கப்பட்டது