புளியம்கொம்பை கல்வெட்டுகள்

புளியம்கொம்பை கல்வெட்டுகள் என்பது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள புளியம்கொம்பையில் காணப்படும் தமிழ் நடுகல் கல்வெட்டுகளின் தொகுதியாகும். காலம் கி.மு.300 ஆகும்.

ஆகோள் பற்றிய புளியம்கொம்பைக் கல்வெட்டு

3 கல்வெட்டுகளின் செய்திகள்தொகு

  1. கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆகோள்.
  2. ..அன் ஊர் அதன் ..(ன்)அன் கல்
  3. வேள் ஊர் அவ்வன் பதவன்

ஆகோள்தொகு

சங்க இலக்கியங்களில் வெட்சித் திணை, கரந்தைத் திணை போன்ற திணைகள் ஆநிரை கவர்தல், ஆநீரை மீட்டல் போன்ற போர் முறைகளைக் கூறுகின்றன. இந்த இரண்டு போர்களிலும் வீர மரணம் அடைந்தவர்களைப் போற்றும் வகையில் நடுகற்கள் நடப்பட்டன. அவற்றுள் ஆகோள் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இதிலும் அது காணப்படுவதால் இதில் குறிப்பிடப்படும் வீரன் கூடலூரில் நடந்த வெட்சிப்போரிலோ கரந்தைப்போரிலோ இறந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

மூலம்தொகு