அகிலா சீனிவாசன்

அகிலா சீனிவாசன் (Akhila Srinivasan) ஸ்ரீராம் குழும ஸ்ரீராம் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் [1] ஸ்ரீராம் அறக்கட்டளையின் நிறுவனராகவும் உள்ளார். இந்த அறக்கட்டளை, கல்வி, சிறு கடன் மற்றும் வறுமை எதிர்ப்பு முயற்சிகளில் கவனம் செலுத்தும் ஒரு தொண்டு நிறுவனமாகும். மேலும், இவர், மனிதாபிமான திட்டங்களில் கவனம் செலுத்தும் மக்கள் தொடர்புடைய அரசு சாரா அமைப்பான 'கிவ் லைஃப்' இன் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலராகவும் உள்ளார்.

அகிலா சீனிவாசன்
தேசியம்இந்தியா
கல்விமுனைவர்(பொருளியல்)
படித்த கல்வி நிறுவனங்கள்சென்னைப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஸ்ரீராம் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

ஸ்ரீனிவாசன் திருச்சிராப்பள்ளியில் உள்ள ஆர்.எஸ்.கிருஷ்ணன் மேல்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார், மேலும் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை கல்வியை முடித்தார். முதலில் இந்திய நிர்வாகப் பணியில் சேர்வதே இவரது தொழில் திட்டமாக இருந்தது, பின்னர் திருமணம் செய்து தனது முதல் குழந்தையைப் பெற்ற பிறகு, தனது தொழில் இலக்கை முனைவர் பட்டம் பெற்று ஆசிரியராக மாற்றினார். [2] இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் எம்ஃபில் படித்துக் கொண்டிருந்தபோது, குழுமத்தில் நிர்வாகப் பயிற்சியாளராக விண்ணப்பித்து, நுழைவுத் தேர்வுகளை முடித்து, திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பொருளாதாரத்தில் எம்ஃபில் முடித்து, பெண் தொழில்முனைவோருக்கான சிறுகடன்கள் என்கிற தலைப்பில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெறுவதில் தனிக்கவனம் செலுத்தியுள்ளார்.

தொழில்

தொகு

அகிலா சீனிவாசன் 1986 ஆம் ஆண்டு ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னியாக சேர்ந்தார். [3] நிறுவனத்தில் இவரது முக்கிய பணி, பொதுமக்களிடையே நல் உறவு மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவை அடங்கும், மேலும் இவர் ஒரு வருட பயிற்சி எடுத்தப் பிறகு மார்க்கெட்டிங் மேலாளராக ஆனார். இவர் 1993 இல் மார்க்கெட்டிங் பொது மேலாளராகவும், 1994 இல் ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார் [4] [5] இவர் 2000 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரானார் [2] இவர் 2005 இல் ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ் நிர்வாக இயக்குநரானார் [6] [7] [8] செப்டம்பர் 2005 முதல் நவம்பர் 2006 வரை, இவர் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வாரியத்தில் இருந்தார் [9]

கார்ப்பரேட் பாத்திரங்களுக்கு கூடுதலாக, இவர் 2005 மற்றும் 2012 க்கு இடையில் நெதர்லாந்தின் [10] கெளரவ தூதராகவும் பணியாற்றினார்.

சமூக நலப் பணிகள்

தொகு

ஸ்ரீராம் குழுமத்தின் சமூக நலப் பிரிவான ஸ்ரீராம் அறக்கட்டளை, 1993 இல் [11] இவரது தலைமையில் நிறுவப்பட்டது [12] [2] அறக்கட்டளையின் வேலையில் ஒரு இலவச மாண்டிசோரி பள்ளி மற்றும் ஒரு சமூக கல்லூரி ஆகியவை அடங்கும். [13] இந்த அறக்கட்டளை கிராமப்புற பெண்களுக்கான சிறு கடன் நிதி, அனாதைகள் மற்றும் ஆதரவற்ற மக்களைப் பராமரிப்பது மேலும் பல பள்ளிகள் நிறுவுதல் -கல்விக்காக உதவித்தொகை திட்டங்களை நிறுவுதல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது. மற்றும் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நிதி வசதியற்ற குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்காக செயல்படும் ஒரு அரசு சார்பற்ற அமைப்பாக செயல்படும் 'கிவ் லைஃப்' நிறுவனத்தை தோற்றுவித்து அதன் நிர்வாக அறங்காவலராக [14], உள்ளார். இந்த அமைப்பு ஸ்ரீராம் அறக்கட்டளையில் ஒரு பகுதியாக செயல்படுகிறது. [15]

இவர், வாழும் கலை அறக்கட்டளை என்ற மனிதாபிமான அமைப்பின் தலைவராக ஏழு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். [16] ஒரிசாவில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பல்கலைக்கழகத்தின் கௌரவத் தலைவராகவும், பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு உதவினார். [15]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

அகிலா சீனிவாசன் ஒரு பட்டய கணக்காளரான எச். சீனிவாசனை மணந்தார், [17] இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். [7] மேலும் இவர் ஒரு பயிற்சி பெற்ற கர்நாடக இசை பாடகியும் ஆவார். [7]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

தொகு
  • 1999, சமூகப் பொறுப்புணர்வு விருது, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு [2]
  • 2000-01, சிறந்த பெண் நிபுணத்துவ விருது, இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு [2] [18]
  • 2007 மற்றும் 2010, 30 மிகவும் சக்திவாய்ந்த பெண்கள், 'பிஸினஸ் டுடே' (இந்தியா) பத்திரிகையில் இவரது பெயர் இடம்பெற்றது. [19] [20]
  • 2015 இல், ஆசியாவின் 50 'பவர் பிசினஸ் வுமன்', ஃபோர்ப்ஸ் [21] பத்திரிகையில், ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ் "இந்தியாவில் லாபம் ஈட்டும் வகையில் அதன் தொழில்துறையில் முதல் ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக" மாற்றியதில் இவரது செயல்திறனை பாராட்டி இவரது பெயர் வெலியிடப்பட்டது. [22] [23]

சான்றுகள்

தொகு
  1. "Akhila Srinivasan: Executive Profile & Biography - Businessweek". www.bloomberg.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-16.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Amarnath, Nischinta; Ghosh, Debashish (2005). The Voyage to Excellence The Ascent of 21 Women Leaders of India Inc. Delhi: Pustak Mahal. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788122309041. பார்க்கப்பட்ட நாள் 17 May 2021.Amarnath, Nischinta; Ghosh, Debashish (2005). The Voyage to Excellence The Ascent of 21 Women Leaders of India Inc. Delhi: Pustak Mahal. ISBN 9788122309041. Retrieved 17 May 2021.
  3. Jayachander, Neeti (May 15, 2016). "Meet one of Asia's most powerful businesswomen". Femina. https://www.femina.in/achievers/akhila-srinivasan-one-of-asias-most-powerful-businesswomen-5227.html. Jayachander, Neeti (15 May 2016). "Meet one of Asia's most powerful businesswomen". Femina. Retrieved 16 May 2021.
  4. Amarnath, Nischinta (2005). The Voyage to Excellence The Ascent of 21 Women Leaders of India Inc. பார்க்கப்பட்ட நாள் 17 May 2021.Amarnath, Nischinta; Ghosh, Debashish (2005). The Voyage to Excellence The Ascent of 21 Women Leaders of India Inc. Delhi: Pustak Mahal. ISBN 9788122309041. Retrieved 17 May 2021.
  5. Ravindranath, Sushila (January 23, 2014). "Living in the moment". The Indian Express. http://archive.indianexpress.com/news/living-in-the-moment/1219915/. 
  6. "Board of Directors - Shriram Life Insurance Company". www.shriramlife.com. Archived from the original on 2 November 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.
  7. 7.0 7.1 7.2 Jayachander, Neeti (May 15, 2016). "Meet one of Asia's most powerful businesswomen". https://www.femina.in/achievers/akhila-srinivasan-one-of-asias-most-powerful-businesswomen-5227.html. Jayachander, Neeti (15 May 2016). "Meet one of Asia's most powerful businesswomen". Femina. Retrieved 16 May 2021.
  8. Ravindranath, Sushila (January 23, 2014). "Living in the moment". The Indian Express. http://archive.indianexpress.com/news/living-in-the-moment/1219915/. Ravindranath, Sushila (23 January 2014). "Living in the moment". The Indian Express. Retrieved 16 May 2021.
  9. "Akhila Srinivasan: Executive Profile & Biography - Businessweek". www.bloomberg.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-16."Akhila Srinivasan: Executive Profile & Biography - Businessweek". www.bloomberg.com. Retrieved 16 May 2021.
  10. Special Correspondent (May 26, 2010). "Importance of cultural diversity stressed". The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/Importance-of-cultural-diversity-stressed/article16303440.ece. 
  11. Ravindranath, Sushila (January 23, 2014). "Living in the moment". http://archive.indianexpress.com/news/living-in-the-moment/1219915/. Ravindranath, Sushila (23 January 2014). "Living in the moment". The Indian Express. Retrieved 16 May 2021.
  12. "Six Indian women make it to Forbes list". 5 March 2015. http://www.thehindu.com/news/national/six-indian-women-make-it-to-forbes-list/article6963578.ece. "Six Indian women make it to Forbes list". The Hindu. 5 March 2015. ISSN 0971-751X. Retrieved 17 September 2016.
  13. Varadarajan, Nitya (November 28, 2010). "80:20 Vision: Akhila Srinivasan". https://www.businesstoday.in/magazine/cover-story/8020-vision-akhila-srinivasan/story/10247.html. 
  14. "Trustees | Give Life". www.givelife.in. Archived from the original on 19 September 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.
  15. 15.0 15.1 Varadarajan, Nitya (November 28, 2010). "80:20 Vision: Akhila Srinivasan". Business Today. https://www.businesstoday.in/magazine/cover-story/8020-vision-akhila-srinivasan/story/10247.html. Varadarajan, Nitya (28 November 2010). "80:20 Vision: Akhila Srinivasan". Business Today. Retrieved 17 May 2021.
  16. Jayachander, Neeti (May 15, 2016). "Meet one of Asia's most powerful businesswomen". Femina. https://www.femina.in/achievers/akhila-srinivasan-one-of-asias-most-powerful-businesswomen-5227.html. Jayachander, Neeti (15 May 2016). "Meet one of Asia's most powerful businesswomen". Femina. Retrieved 16 May 2021.
  17. Amarnath, Nischinta; Ghosh, Debashish (2005). The Voyage to Excellence The Ascent of 21 Women Leaders of India Inc. Delhi: Pustak Mahal. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788122309041. பார்க்கப்பட்ட நாள் 17 May 2021.Amarnath, Nischinta; Ghosh, Debashish (2005). The Voyage to Excellence The Ascent of 21 Women Leaders of India Inc. Delhi: Pustak Mahal. ISBN 9788122309041. Retrieved 17 May 2021.
  18. "FICCI Awards" (PDF). FICCI. p. 27. பார்க்கப்பட்ட நாள் 13 September 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  19. "The 30 most powerful women- Business News". www.businesstoday.in. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.
  20. "Rewards of excellence- Business News". www.businesstoday.in. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.
  21. Institute, Baker. "Akhila Srinivasan (India) - pg.17 Forbes". Forbes. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.
  22. "Six Indians among Forbes' 50 'Power Businesswomen' - The Economic Times". பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.
  23. Sharma, Sriram (July 14, 2016). "6 Indians Among Forbes' 50 'Power Businesswomen'". https://www.huffpost.com/archive/in/entry/indian-women-in-forbes-50-power-businesswomen_n_6765570. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகிலா_சீனிவாசன்&oldid=3752429" இலிருந்து மீள்விக்கப்பட்டது