அகோகோதே- 17 (WASP - 17) என்பது விருச்சிக(தேள்) விண்மீன் குழுவில் சுமார் 1,300 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு F - வகை முதன்மை வரிசை விண்மீனாகும்.[4][1][5]

WASP-17 / Dìwö
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Scorpius
வல எழுச்சிக் கோணம் 15h 59m 50.9473s[1]
நடுவரை விலக்கம் வார்ப்புரு:Dec[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)11.500[2]
இயல்புகள்
விண்மீன் வகைF6V
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: −6.600±1.557[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −8.485±0.774[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)2.4366 ± 0.0518[1] மிஆசெ
தூரம்1,340 ± 30 ஒஆ
(410 ± 9 பார்செக்)
விவரங்கள்
திணிவு1.2 M
ஆரம்1.38 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.14 ± 0.03[3]
வெப்பநிலை6509 ± 86[3] கெ
சுழற்சி வேகம் (v sin i)10.6 ± 1.3[3] கிமீ/செ
அகவை3 பில்.ஆ
வேறு பெயர்கள்
Dìwö, 1SWASP J155950.94−280342.3,
USNO-B1.0 0619-0419495,
2MASS J15595095-2803422,
TYC2 6787-1927-1, Gaia DR2 6042793005779654656
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
NStEDdata
Extrasolar Planets
Encyclopaedia
data

அகோகோதே- 17 திவோ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் 100 வது ஆண்டு விழாவின் போது கோசுட்டா இரிக்காவின் புறக்கோள் உலகங்கள் பரப்புரையில் இந்த பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. [6][7]பிரிப்ரி மொழியில் திவோ என்றால் சூரியன் என்று பொருள்.

இந்த விண்மீன் அடர்தனிமங்களின் மொத்த உல்லடக்கத்தில் சூரியனை ஒத்திருந்தாலும், இதில் கரிமம் அருகியே உள்ளது.இதன் கரிம/உயிரக விகிதம் 0.18±0.04 ஆக உள்ளதால் இது சூரிய விகிதமான 0.55 மதிப்பை விட மிகவும் குறைந்ததாகும்.[8]

கோள் அமைப்பு

தொகு

2009 ஆம் ஆண்டு நிலவரப்படி , ஒரு சூரியனுக்கு வெளியே உள்ள கோள் ஒன்று இந்த விண்மீனைச் சுற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. [9][10] டிட்சோ என்றும் இது பெயரிடப்பட்டது. அகோகோதே - 17பி) என்ற ஒரு புறக்கோள் இதைச்சுற்றி வருகிறது. இது விண்மீனின் சுழற்சிக்கு எதிர் திசையில் வட்டணையில் இருப்பதாக நம்பப்படுகிறது , மேலும் இது வியாழனின் இரு மடங்கு உருவளவும் ஆனால் அதன் பாதிப் பொருண்மையையே பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. [11] முனைவான ஒளி ஆவியாதலுக்கு உட்பட்டது. இது இப்போது முதல் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் முற்றிலும் அழிக்கப்படலாம்.

இந்தக் கோள் அகல் கோணக் கோள் தேட்டத் திட்டத்தால் கண்டுபிடிக்கப்பட்டதால், இப்பெயர் பெற்றது.

அகோகோதே-17 தொகுதி
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b / Ditsö̀ 0.486 (± 0.032) MJ 0.0515 (± 0.00034) 3.735438 (± 6.8e-06) 0.028 +0.018
−0.015

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Brown, A. G. A et al. (2016). "Gaia Data Release 1. Summary of the astrometric, photometric, and survey properties". Astronomy and Astrophysics 595: A2. doi:10.1051/0004-6361/201629512. Bibcode: 2016A&A...595A...2G. https://www.aanda.org/articles/aa/full_html/2016/11/aa29512-16/aa29512-16.html. Gaia Data Release 1 catalog entry
  2. Maxted, P. F. L. et al. (2011). "UBV(RI)C photometry of transiting planet hosting stars". Monthly Notices of the Royal Astronomical Society 418 (2): 1039–1042. doi:10.1111/j.1365-2966.2011.19554.x. Bibcode: 2011MNRAS.418.1039M. 
  3. 3.0 3.1 3.2 Torres, Guillermo et al. (2012). "Improved Spectroscopic Parameters for Transiting Planet Hosts". The Astrophysical Journal 757 (2): 161. doi:10.1088/0004-637X/757/2/161. Bibcode: 2012ApJ...757..161T. 
  4. Anderson, D. R. et al. (2010). "WASP-17b: An Ultra-Low Density Planet in a Probable Retrograde Orbit". The Astrophysical Journal 709 (1): 159–167. doi:10.1088/0004-637X/709/1/159. Bibcode: 2010ApJ...709..159A. 
  5. "Newfound Planet Orbits Backward". Space.com. 12 August 2009.
  6. "International Astronomical Union | IAU". பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
  7. "Approved names". பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
  8. Polanski, Alex S.; Crossfield, Ian J. M.; Howard, Andrew W.; Isaacson, Howard; Rice, Malena (2022), Chemical Abundances for 25 JWST Exoplanet Host Stars with KeckSpec, arXiv:2207.13662
  9. New-found Planet Orbits Backward
  10. BBC NEWS | Science & Environment |
  11. D. Ehrenreich and J.-M.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-17&oldid=3823262" இலிருந்து மீள்விக்கப்பட்டது