அகிரா குரோசாவா

ஜப்பானிய திரைப்பட இயக்குனர்
(அக்கிரா குரோசாவா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அகிரா குரோசாவா (Akira Kurosawa) (சப்பானிய மொழி 黒澤 明 குரோசாவா அகிரா, 黒沢 明 ஷின்ஜிடாய், 23 மார்ச், 1910 - 6 செப்டம்பர், 1998) உலகப் புகழ்பெற்ற சப்பானியக் கலைப்பட இயக்குநராவார்.1943 ஆம் ஆண்டு வெளியான சன்ஷிரோ சுகடா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.1993 ஆம் ஆண்டு தனது இறுதிப்படைப்பான மடடாயோ திரைப்படத்தினை இயக்கிய அகிரா குரோசாவா வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருதினையும் பிரெஞ்சு விருதான லீஜியன் டி ஹானர் விருதினையும் பெற்றவரென்பது குறிப்பிடத்தக்கது.

அகிரா குரோசாவா
黒澤 明 or 黒沢 明
Akira Kurosawa

1953 இல் ஏழு சாமுராய்கள் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அகிரா குரோசாவா
பிறப்பு (1910-03-23)23 மார்ச்சு 1910
செட்கயா, டோக்கியோ, சப்பான்
இறப்பு 6 செப்டம்பர் 1998(1998-09-06) (அகவை 88)
தொழில் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர்
நடிப்புக் காலம் 1936 - 1993
துணைவர் யொகொ யகுச்சி (1945 - 1985;அவரின் மரணம்)
பிள்ளைகள் கசுகொ குரோசாவா
ஹிசாவ் குரோசாவா
பெற்றோர் இசாமு குரோசாவா
ஷிமா குரோசாவா
உறவினர் யு குரோசாவா (ஒஅடகர், பேத்தி), டகயுகி காடொ (நடிகர், பேரன்)

இயக்கிய திரைப்படங்கள்

தொகு

படங்களின் பட்டியல்

தொகு

"தெர்சு உசாலா" மென்மையான உணர்வுகள் வழியாக ஆழமான நட்பையும், அந்த நட்பின் வழியாக இயற்கையின் இயல்புகளையும் பிரமாண்டங்களையும்,கருணையையும் பற்றி விரிவாக பேசுகிறது ,அதே நேரத்தில் நம்முடைய நவீன வாழ்க்கைமுறை மாற்றத்தால் தவிர்க்க முடியாமல் அழிந்து கொண்டிருக்கும் இயற்கையையும்,முதுமையின் தாங்கவியலா சிரமங்களையும் நுட்பமாக அலசுகிறது . படத்தின் கதை மிகவும் எளிமையானது.[1]

படங்களின் வெளியீடு

தொகு

அகிரா குரோசாவா இயக்கிய முப்பது படங்களும் டிவிடிக்களில் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது அவரது படங்களின் ப்ளு-ரே தட்டுகள் வெளியிடப்படுகின்றன.[2]

மரணம்

தொகு

இவர் செப்டம்பர் 6, 1998 அன்று இதயத்திசு இறப்பால் காலமானார். இவர் பெயரில் இரண்டு திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒன்று சான் பிரான்சிஸ்கோவின் அனைத்துலக திரைப்பட விழாவில் அகிரா குரோசாவா வாழ்நாள் சாதனையாளர் விருதாகவும், மற்றொன்று டோக்கியோ அனைத்துலக திரைப்பட விழாவில் அகிரா குரோசாவா விருதாகவும் வழங்கப்படுகிறது. அனகியம் பல்கலைக்கழகம் இவரது குடும்பத்தாரோடு இணைந்து அகிரா குரோசாவா திரைப்படப் பள்ளியை துவக்கி அதன் மூலம் திரைப்பட இயக்கத்துக்கான பயிற்சியை வழங்கி வருகிறது.

அகிரா குரோசாவாவின் திரைப்படங்களும் அவர் திரைப்படங்களை இயக்கும் முறையும் அவருக்கு பெரியளவு புகழை ஏற்படுத்தித் தந்தன. அதேசமயம் இவரின் திரைப்பட்ங்களுக்கு இவர் அதிகம் பொருட்செலவு செய்வதாகவும் வேறு பல விமர்சனங்களும் இவர் மேல் எழுந்ததுண்டு.

மேற்கோள்கள்

தொகு
  1. "உன்னதக் கலைஞன் அகிராகுரோசவாவின் மறக்கமுடியா படைப்பு". vikatan.com. Archived from the original on 2016-08-26. பார்க்கப்பட்ட நாள் 2016-03-23.
  2. "Akira Kurosawa Movies & TV on DVD & Blu-ray". amazon.com. பார்க்கப்பட்ட நாள் 2011-09-07.

மூலங்கள்

தொகு

மேலும் அறிய

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகிரா_குரோசாவா&oldid=4121061" இலிருந்து மீள்விக்கப்பட்டது