அக்சய் வெங்கடேஷ்

அக்சய் வெங்கடேஷ் (Akshay Venkatesh, பிறப்பு: 21 நவம்பர் 1981) ஆத்திரேலியக் கணிதவியலாளரும், கணிதப் பேராசிரியரும் ஆவார். இவர் எண்கணிப்பு, சமப்பரம்பல், and எண் கோட்பாடு, உருமாதிரியாக்கக் கோட்பாடு, அளவுகாப்பு உருமாற்றவியல் ஆகியவற்றில் ஆய்வு செய்து வருகிறார்.[1] இவர் பன்னாட்டு இயற்பியல், மற்றும் கணித ஒலிம்பியாதுகள் இரண்ட்லிம் விருதுகள் வாங்கிய ஒரேயொரு ஆத்திரேலியர் ஆவார். இவர் இவற்றைத் தனது 11வது, 12வது அகவைகளில் முறையே பெற்றுக் கொண்டார்.[2][3]

அக்சய் வெங்கடேஷ்
Akshay Venkatesh
பிறப்பு21 நவம்பர் 1981 (1981-11-21) (அகவை 38)
புது தில்லி, இந்தியா
தேசியம்ஆத்திரேலியர்
துறைகணிதம்
பணியிடங்கள்இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம், உயர் படிப்புக்கான கல்விக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்பீட்டர் சர்னாக்
விருதுகள்சாஸ்த்ரா இராமானுஜன் பரிசு (2008)
சேலம் பரிசு (2007)
இன்போசிசு பரிசு (2016)
ஒஸ்திரோவ்ஸ்கி பரிசு (2017)
ஃபீல்ட்ஸ் பதக்கம் (2018)

2018 ஆம் ஆண்டில் இவருக்கு "கணிதத்தில் நோபல் பரிசு" என அழைக்கப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்பட்டது.[4]

ஆரம்ப ஆண்டுகள்தொகு

அக்சய் தில்லி நகரில் ஒரு நடுத்தரத் தமிழ்க் குடும்பத்தில் 1981 இல் பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாடு, கும்பகோணத்தையும், தாயார் தஞ்சாவூரையும் சேர்ந்தவர்கள். தனது ஆரம்பக் கல்வியை புதுதில்லியிலும், பின்னர் குடும்பத்துடன் ஆத்திரேலியாவுக்குக் குடி பெயர்ந்து மேற்கு ஆத்திரேலியாவில் பேர்த் நகரில் தனது இடைநிலைக் கல்வியை ஸ்கொட்ச் கல்லூரியில் தொடர்ந்தார். இவரது தாயார் சிவெத்தா கணினியியல் பேராசிரியையாக டீக்கின் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். 1993 இல் இவர் வர்ஜீனியாவில் நடந்த 24வது இயற்பியல் ஒலிம்பியாதில் பங்குபற்றி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.[5] 1994 இவர் தனது கவனத்தைக் கணிதத்தில் திருப்பினார்.[6] ஆங்காங்கில் நடந்த பன்னாட்டுக் கணித ஒலிம்பியாதில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.[7] 13வது அகவையில் தனது பாடசாலைக் கல்வியை முடித்து, அடுத்த ஆண்டில் மேற்கு ஆத்திரேலியப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1997 இல் கணிதத்தில் முதல் வகுப்பில் சிறப்புப் பட்டம் பெற்றார்.[8][9]

மேற்கோள்கள்தொகு

  1. "News - Clay Mathematics Institute". பார்த்த நாள் 19-12-2017.
  2. "Former Australian IMO Team Members". Australian Mathematics Trust. பார்த்த நாள் 7 June 2013.
  3. "Maths boy wonder shows how to stack oranges". மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் (15-07-2011). பார்த்த நாள் 7-05-2013.
  4. "Faculty Appointee Akshay Venkatesh Awarded 2018 Fields Medal". பார்த்த நாள் 2 August 2018.
  5. "XXIV International Physics Olympiad Williamsburg" (1993). மூல முகவரியிலிருந்து 5-02-2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 7-06-2013.
  6. "Highest AMO scorers, 1994". Australian Mathematics Trust. பார்த்த நாள் 7-06-2013.
  7. "Results of 6th Asian Pacific Mathematics Olympiad 1994". Australian Mathematics Trust. பார்த்த நாள் 7-06-2013.
  8. http://202.38.126.65/mirror/www.maths.uwa.edu.au/general/graduates/honours.php
  9. NYU's Venkatesh, 25, Wins Prize Given to Young Mathematicians for Work in Field of Analysis, New York University, 22-08-2007, retrieved 2014-09-06.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்சய்_வெங்கடேஷ்&oldid=2895650" இருந்து மீள்விக்கப்பட்டது