அக்பர்பூர், அம்பேத்கர் மாவட்டம்

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்

அக்பர்பூர் (Akbarpur), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பூர்வாஞ்சல் பிரதேசத்தில் உள்ள அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது தமசா ஆற்றின் கரையில் உள்ளது. இது மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு தென்கிழக்கே 187 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது அயோத்திக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

அக்பர்பூர்
நகரம்
அக்பர்பூர் நகரக் காட்சி
அக்பர்பூர் நகரக் காட்சி
அக்பர்பூர் is located in உத்தரப் பிரதேசம்
அக்பர்பூர்
அக்பர்பூர்
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அக்பர்பூர் நகரத்தின் அமைவிடம்
அக்பர்பூர் is located in இந்தியா
அக்பர்பூர்
அக்பர்பூர்
அக்பர்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°26′00″N 82°32′25″E / 26.43333°N 82.54028°E / 26.43333; 82.54028
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்அம்பேத்கர் நகர்
அரசு
 • நிர்வாகம்நகராட்சி
ஏற்றம்
133 m (436 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,11,594
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி[1]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
224122
தொலைபேசி குறியீடு எண்+91(5271)
வாகனப் பதிவுUP-45
பாலின விகிதம்1000/937 /
இணையதளம்ambedkarnagar.nic.in

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 61 வார்டுகளும், 17,720 வீடுகளும் கொண்ட நகரத்தின் மக்கள் தொகை 1,11,447 ஆகும். அதில் ஆண்கள் 57,330 மற்றும் பெண்கள் 54,117 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 944 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 74.5% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 15,310 மற்றும் 50 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 75.29%, இசுலாமியர் 23.99%, கிறித்தவர்கள் 0.21% மற்றும் பிறர் 0.42% ஆகவுள்ளனர்.[2]

பொருளாதாரம்

தொகு

அரிசி ஆலைகள், கைலிகள் தயாரிக்கும் விசைத்தறி கூடங்கள் இந்நகரத்தில் அதிகம் உள்ளது.

போக்குவரத்து

தொகு

சாலைகள்

தொகு

சாலைகள் மூலம் அக்பர்பூர் பைசாபாத், அயோத்தி, லக்னோ, சுல்தான்பூர், ரேபரேலி, அமேதி, ஆசம்கர், ஜவுன்பூர், வாரணாசி, அலகாபாத் போன்ற நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வேகமாக செல்லும் பூர்வாஞ்சல் விரைவுச் சாலை அக்பர்பூர் வழியாகச் செல்கிறது.[3]

இரயில் நிலையம்

தொகு

அக்பர்பூர் இரயில் நிலையம் அருகே[4]பைசாபாத், அயோத்தி இரயில் நிலையங்கள் உள்ளது.

வானூர்தி நிலையம்

தொகு

இதனருகே அமைந்த அயோத்தி வானூர்தி நிலையம் உள்ளது.[5]

கல்வி

தொகு
  • இராஜ்கியா பொறியியல் கல்லூரி, அம்பேத்கர் நகர்
  • மகா மாயா வேளான்மை பொறியீயல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  • மகா மாயா ராஜ்கியா அலோபதி மருத்துவக் கல்லூரி

மேற்கோள்கள்

தொகு
  1. "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.
  2. Akbarpur Population, Religion, Caste, Working Data Ambedkar Nagar, Uttar Pradesh - Census 2011
  3. "How to Reach". Ambedkar Nagar. பார்க்கப்பட்ட நாள் 21 February 2021.
  4. Akbarpur Junction railway station
  5. Jaiswal, Pankaj (25 November 2020). "Upcoming Ayodhya airport to be named after Lord Ram" (in en). Hindustan Times. https://www.hindustantimes.com/india-news/ayodhya-airport-to-be-named-after-lord-ram/story-dG6COFTZmKzPmB3lukkNvI.html.