அக்பர் ஹைதாரி
- அசாமின் ஆளுநராக இருந்த முகம்மது சலே அக்பர் ஹைதாரியிலிருந்து வேறுபடுத்தப்பட வேண்டும்.
சர் முஹம்மது அக்பர் நாசர் அலி ஹைதாரி, (Sir Muhammad Akbar Nazar Ali Hydari) சதர் உல்-மஹாம், கிபி (1869-1941)[1] என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஐதராபாத்து மாநிலத்தின் பிரதமராக 18 மார்ச் 1937 முதல் செப்டம்பர் 1941 வரை பணியாற்றினார்.[2]
அக்பர் ஹைதாரி | |
---|---|
ஐதராபாத்து மாநிலத்தின் பிரதம அமைச்சர்கள் பட்டியல் | |
பதவியில் 18 மார்ச்சு 1937 – செப்டம்பர் 1941 | |
முன்னையவர் | கிஷான் பிரசாத் |
பின்னவர் | முஹம்மது அஹமது சையத் கான் சத்தாரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மும்பை, பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா | 8 நவம்பர் 1869
இறப்பு | நவம்பர் 1941 (அகவை 71–72) |
துணைவர் | அமினா ஐதாரி (இற. 1939) |
பிள்ளைகள் | முகம்மது சலேத் அக்பர் ஐதாரி |
வேலை | அரசியல்வாதி |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஹைதாரி 1869ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி முஸ்லிம்களின் சுலைமானி போஹ்ரா சமூகத்தில் பிறந்தார். இவரது தந்தை சேத் நாசர் அலி ஹைடாரி, பம்பாயின் தொழிலதிபர் ஆவார்.[3]
தொழில்
தொகுஹைதாரி ஐதராபாத் மாநிலத்திற்குச் செல்வதற்கு முன்பு இந்திய தணிக்கை மற்றும் கணக்கியல் சேவையில் பணியாற்றினார். இங்கு இவர் நிதி அமைச்சராகவும் பின்னர் பிரதமராகவும் ஆனார். அஜந்தா குகைகளின் மறுசீரமைப்பிற்கு இவர் முக்கியக் காரணமாக இருந்தார்.[4] நவம்பர் 1930 முதல் ஜனவரி 1931 வரை நடந்த முதல் வட்ட மேசை மாநாட்டிலும் ஐதராபாத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
சனவரி 1936-ல், இவர் ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[5] இவர் 1941-ல் இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
குடும்பம்
தொகுஇவரது மனைவி அமினா ஐதாரி தியாப்ஜி குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது மகன் பெயர் முகமது சலே அக்பர் ஐதாரி.[6] இவரது பெயர்த்தி ஹபீபா ஹைடாரி கோவா ஓவியர் மரியோ மிராண்டாவை மணந்தார்.
கௌரவங்கள்
தொகு1928ஆம் ஆண்டு பிறந்தநாள் மரியாதையில் ஐதாரி பிரித்தா அரசாங்கத்தின் ஆண்டகைப் பட்டம் பெற்றார்.[4] வைசிராய், இர்வின் பிரபு 17 திசம்பர் 1929 அன்று ஐதராபாத்தில் இவருக்கு ஆண்டகைப் பட்டத்தினை முறையாக வழங்கினார்.[7]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Mohammed Akbar Nazar Ali Hydari (1869 - c.1941)". பார்க்கப்பட்ட நாள் 2013-07-05.
- ↑ Hyderabad, Princely States of India, WorldStatesmen.org
- ↑ "Golconde".
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ 4.0 4.1 Gunther, John. Inside Asia - 1942 War Edition. READ BOOKS, 2007, pp. 471-472
- ↑ Edinburgh Gazette, 7 January 1936[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Sulaymani Bohra: South Asia, accessed July 5, 2010
- ↑ Edinburgh Gazette, 11 February 1930[தொடர்பிழந்த இணைப்பு]