அங்காள பரமேசுவரி

(அங்காளம்மன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அங்காள பரமேசுவரி (Angala Parameswary Amman) இந்து தெய்வமான பார்வதியின் ஓர் அம்சமாகும். தமிழகமெங்கும் இத்தெய்வம் அங்காளம்மன், அங்காள தேவி, அங்காள ஈசுவரி, பெரியாயி, பூங்காவனத்தம்மன், பெரியாண்டிச்சி தாண்டேசுவரி, பேச்சியாயி என்று பல பெயர்களில் மக்களால் வணங்கப்பட்டு வருகிறார். அங்காளம்மன் முதன்மையாக தென்னிந்தியாவின் கிராமங்களில் காவல் தெய்வமாக வழிபடப்படுகிறது. இவர் பெரும்பாலும் சப்தகன்னியரில் ஒருவரின் அம்சமாகக் கருதப்படுகிறாள்.[2]

அங்காள பரமேசுவரி அம்மன்
அங்காள பரமேசுவரி
வேறு பெயர்கள்
  • அங்காளம்மன்
  • அங்காள தேவி
  • அங்காள பரமேசுவரி
  • அங்காள ஈசுவரி
  • தாண்டேசுவரி
  • பூங்காவனத்து அம்மன்
  • பெரியாயி
  • பெரியாண்டிச்சி
  • பேச்சியாயி
வகைசக்தி, பார்வதி
இடம்மேல்மலையனூர்
ஆயுதம்
துணைசிவன்[1]

புராணம்

தொகு

அங்காளம்மன் பார்வதி தேவியின் ஒரு அம்சமாகும். தாய் தேவியின் இந்த வழிபாடு தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாக வழிபடப்படுகிறது. அங்காள அம்மன் என்பது சக்தி தேவியின் உக்கிரமான வடிவமாக கருதப்படுகிறது. அங்காளம்மன் பல கிராமங்களில் காவல் தெய்வமாகவும் வணங்கப்பட்டு வருகிறது.

சிவபெருமான் பிரம்மாவின் ஐந்தாவது தலையை வெட்டிய பிறகு அவரைப் பின்தொடர்ந்து வந்த கபாலனை அழிப்பதற்காக பார்வதி தேவி அங்காள அம்மன் அவதாரம் எடுத்ததாகக் கூறப்படுகிறது.

பிரம்மா தன்னுடைய படைப்பின் மீது கர்வம் கொண்டு பூமியில் உயிர்கள் படும் துன்பத்தைப் பற்றி மனம் வருந்தாமால் இருந்ததற்காக சிவன் பைரவ அவதாரம் எடுத்து பிரம்மாவின் ஐந்தாவது தலையை வெட்டினார் என்று புராணம் கூறுகிறது.

ஆனால் விரைவில் சிவன் மனம் வருந்தினார். பாவத்தைப் போக்க, பிரம்மா சிவனிடம் அலைந்து திரிந்த சந்நியாசியாக மண்டை ஓட்டில் உணவு பிச்சை எடுக்குமாறு கூறினார்.

அங்காளம்மன் கதைப்படி ஐந்தாவது தலை சிவனைப் பின்தொடரத் தொடங்கியது. சிவன் பிச்சையெடுத்துப் பெற்ற உணவையெல்லாம் உண்ணத் தொடங்கியது.

பார்வதி தேவி பிரம்மாவின் ஐந்தாவது தலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார். விஷ்ணுவின் ஆலோசனையின் பேரில், அங்கிகுல தீர்த்தத்திற்கு அருகில் உள்ள தாண்டகாருண்யம் தீர்த்தத்தில் சிவனுக்கு உணவு தயாரித்தார். சிவன் உணவு உண்ண வந்தார். பார்வதி தேவி வேண்டுமென்றே அந்த இடத்தைச் சுற்றி உணவை சிதறச் செய்தார், ஐந்தாவது தலை சிவனின் கையை விட்டு உணவைச் சாப்பிட கீழே வந்தது. பார்வதி தேவி இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அங்காளம்மனின் உக்கிரமான வடிவத்தை எடுத்து தனது வலது காலைப் பயன்படுத்தி அந்த தலையை மிதித்து அழித்தார்.[3]

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில் உள்ள மேல்மலையனூரில் அங்காளம்மனுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற சிறீ அங்காள பரமேசுவரி கோவில் அமைந்துள்ளது.[4]

புராணம் 2

தொகு

பிராந்திய நாட்டுப்புற நம்பிக்கையின்படி வல்லாள கண்டன் எனும் அரக்கன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். இந்திரன் வருணன் போன்ற தேவர்கள் வல்லாள கண்டனுக்கு எந்த வரத்தையும் அளிக்கவேண்டாம் என்று சிவனை வேண்டினர். ஆனாலும் வல்லாள கண்டனின் தவத்தை மெச்சி சிவன் அவனுக்கு இரு வரங்களை அளித்தார். அந்த வரங்களைக் கொண்டு முனிவர்களையும், தேவர்களையும் அரக்கன் துன்புறுத்தினான். இவன் கொடுமையைத் தாங்காத முனிவர்கள் பார்வதியிடம் முறையிட்டனர். சிவன் அரக்கனைக் கொல்ல பார்வதிக்கு வரமளித்தார். இதன் பிறகு தேவி அங்காளம்மன் என்ற உருவமெடுத்து அசுரனை வதம் செய்ய வந்தாள். அசுரன் தேவிக்கு அஞ்சி சுடுகாட்டில் தஞ்சமடைந்தான். தேவியின்ன் கோபத்தில் இருந்து தப்பிக்க ஒரு பிணத்தினுள் புகுந்துகொண்டான். ஆனாலும் அந்த அசுரனை தேவி வதம் செய்தாள். பின்னர் அவனின் எலும்புகளை இடுப்பில் கட்டிக் கொண்டு ஆனந்த தாண்டவம் ஆடினாள்.[5]

கோயில்கள்

தொகு
  • ஸ்ரீ அங்காள ஈஸ்வரி கோவில், முன்னிலைக் கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்
  • ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில், பருத்திப்பள்ளி,நாமக்கல்
  • அருள்மிகு குருநாதன்-அங்காளபரமேஸ்வரி கோவில், தெப்பம் தெற்கு ரதவீதி,விருதுநகர்
  • அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் ஆலயம், அண்ணா நகர், விளார் சாலை, தஞ்சாவூர்
  • அங்காள பரமேஸ்வரி கோவில், வைசியாள்வீதி, கோயமுத்தூர்
  • அங்காளபரமேஸ்வரி அம்மன்கோவில் குருவராஜப்பேட்டை, அரக்கோணம்
  • அங்காளம்மன் திருக்கோவில், குமாரபாளையம், சத்தியமங்கலம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், மேல்மலையனூர், விழுப்புரம் மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், காங்கேயன்குப்பம்,கடலூர் மாவட்டம்
  • அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் ஆலயம், அண்ணா நகர், விளார் சாலை, தஞ்சாவூர்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், புட்லூர், திருவள்ளூர் மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், சூளை, சென்னை.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், ராயபுரம் கல்மண்டபம், சென்னை.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், சென்ட்ரல், சென்னை.
  • அருள்மிகு அங்காளபரமேசுவரி அன்னபூரணி திருக்கோயில், சி.பி.ரோடு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், பரங்கிபேட்டை, கடலூர் மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், முத்தனாம் பாளையம், திருப்பூர் மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், காட்டுமன்னார்கோயில், கடலூர் மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், சூரக்குழி, ஆண்டிமடம் அருகே, அரியலூர் மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், கோடாலிகருப்பூர், கும்பகோணம், தஞ்சை மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், வானாதிராஜபுரம், கடலூர் மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், துறையூர், திருச்சி மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், திருப்பனிபேட்டை, திருவிடைமருதூர், தஞ்சை மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், கோட்டூர், திருவாரூர் மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், கூவத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், வேளுக்குடி, திருவாரூர், தஞ்சை மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், அச்சுதம்பேட்டை, திருவாரூர், தஞ்சை மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி ஆலயம்,கொல்லுமாங்குடி, திருவாரூர் மாவட்டம்
  • அங்காளபரமேஸ்வரி ஆலயம், மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டம்.
  • அங்காளபரமேஸ்வரி ஆலயம், குருவராஜப்பேட்டை, இராணிப்பேட்டை மாவட்டம்.
  • அங்காளபரமேஸ்வரி ஆலயம், தேவபாண்டலம், சங்கரபுராம் வட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம்
  • ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம், அப்பாசாமி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை
  • ஸ்ரீ அருள்மிகு அங்காளம்மன் ஆலயம், மேல்மங்கலம்,பெரியகுளம் வட்டம், தேனி மாவட்டம்.
  • ஸ்ரீ அருள்மிகு அங்காள பரமேஸ்வரி ஆலயம், சாலியமங்கலம்,தஞ்சாவூர் மாவட்டம்.

பிற நாடுகளில் உள்ள கோயில்கள்

தொகு
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், கோலா செலங்கோர், மலேசியா.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. The Pink Line: The World's Queer Frontiers. Profile. 2 July 2020. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781782837008.
  2. Poston, Larry (2015-03-10). "Book Review: One God, Two Goddesses, Three Studies of South Indian Cosmology". Missiology: An International Review 43 (2): 223–224. doi:10.1177/0091829615569146b. பன்னாட்டுத் தர தொடர் எண்:0091-8296. http://dx.doi.org/10.1177/0091829615569146b. 
  3. "தேவியின் திருத்தலங்கள்:: மேல்மலையனூர் அங்காள பரமேசுவரி". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2021/Jan/01/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF--5-3535533.html. பார்த்த நாள்: 6 May 2024. 
  4. "அங்காள பரமேஸ்வரிக்கு ஊஞ்சல் உற்சவ அலங்காரம்", தினமலர், பார்க்கப்பட்ட நாள் 2024-05-06
  5. Smith, Frederick M.; Sir, Frederick Smith (2006). The Self Possessed: Deity and Spirit Possession in South Asian Literature and Civilization (in ஆங்கிலம்). Columbia University Press. p. 130. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-13748-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்காள_பரமேசுவரி&oldid=4075601" இலிருந்து மீள்விக்கப்பட்டது